பலரது வாழ்க்கை லட்சியமாக திகழக்கூடியதுதான் சொந்த வீடு. சொந்த வீடு அமைய வேண்டும் என்பதற்காக பலரும் பலவிதங்களில் முயற்சி செய்வார்கள். அவர்களுடைய ஜாதகத்தின்படியே சொந்த வீடு அமைவதற்குரிய யோகம் என்பது உண்டாகும். ஒரு சிலருக்கு சொந்த வீடு இருந்தாலும் அந்த வீட்டில் குடியிருக்க முடியாத அவல நிலைக்கு ஆளாகி வாடகை வீட்டில் தங்கி இருப்பார்கள். ஏதோ ஒரு சூழ்நிலையால் சொந்தமாக இடம் வாங்கினாலும் வீடு கட்ட முடியாத நிலையில் இருப்பவர்களும் பலர் இருக்கிறார்கள். வீடு கட்ட ஆரம்பித்தும் அதை முழுமையாக நிறைவு பெற முடியாமல் பாதியிலேயே நிறுத்தக்கூடிய நிலையிலும் பலர் இருக்கிறார்கள். இப்படி சொந்த வீட்டில் குடியேறுவதற்கு பலவிதமான பிரச்சனைகள் இருக்கின்றன. இந்த பிரச்சனைகளை தீர்த்து சொந்த வீட்டில் வாழ்வதற்கு பங்குனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி நாளன்று வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
காமதா ஏகாதசி வழிபாடு
ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை ஏகாதசி தேய்பிறை ஏகாதசி என்று இரண்டு ஏகாதசிகள் வரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் இருக்கிறது என்று புராணங்கள் கூறுகின்றன. பெருமாளை வழிபாடு செய்வதற்கு உகந்த இந்த ஏகாதசி நாளன்று மறவாமல் பெருமாளை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்வதன் மூலம் மோட்சத்தை பெற முடியும் என்பது பொதுவான பலனாக இருந்தாலும் அந்த மோட்சத்தை பெறுவதற்கு முன்பாக நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான சுகபோகங்களையும் பெற முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. அந்த வகையில் சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் பங்குனி வளர்பிறை ஏகாதசி அன்று செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையில் பற்றி தெரிந்து கொள்வோம்.
பெருமாள் பல வடிவங்களில் பலவிதமான பொருட்களில் குடிகொண்டு இருக்கிறார் என்று நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் பெருமாளுக்குரிய செடியாக திகழ்வதுதான் துளசி செடி. துளசி செடியில் பெருமாள் பரிபூரணமாக வீற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதனால் தான் துளசி செடியை வீட்டில் வைத்து வளர்க்க வேண்டும் என்றும் அந்த துளசி செடியை சுத்தமான முறையில் பராமரிக்க வேண்டும் என்றும் அதற்கு காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்றும் நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட துளசி செடியை ஏகாதசி நாளன்று வழிபாடு செய்யும்பொழுது பெருமாளின் பரிபூரணமான அருளை நாம் பெற முடியும்.
பங்குனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி நாளை காமதா ஏகாதசி என்று கூறுவது உண்டு. இந்த நாளில் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து பெருமாளை நினைத்து விரதம் இருக்க வேண்டும். அன்று மாலை நேரத்தில் பெருமாளின் பாதங்களை ஒரு வெள்ளை நிற பேப்பரில் வரைந்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து துளசி செடியில் வைத்து விட வேண்டும்.
பிறகு அந்த துளசி செடிக்கும் முன்பாக பச்சரிசி மாவினால் கோலம் போட்டு இரண்டு மா விளக்குகளை வைத்து நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 16 ஏகாதசி நாம் செய்வதன் மூலம் சொந்த வீட்டில் வாழ்வதற்குரிய யோகம் உண்டாகும். அதிலும் குறிப்பாக இந்த பங்குனி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியில் நாம் இந்த வழிபாட்டை செய்ய ஆரம்பித்தோம் என்றால் கண்டிப்பான முறையில் அடுத்த பங்குனி மாதத்திற்குள் சொந்த வீட்டில் குடியிருக்கும் அமைப்பை பெருமாள் அருள்வார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:எதிரிகள் தொல்லை நீங்க
பணக்கார கடவுளாக திகழக்கூடிய பெருமாளை அவருக்குரிய திதியான ஏகாதசி திதி அன்று வழிபாடு செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் சுகபோகமான வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.