- Advertisement -

ஹனுமன் ஜெயந்தி 2025

- Advertisement -

எல்லா பண்டிகையும் வருடத்திற்கு ஒருமுறைதான் கொண்டாடப்படும். ஆனால் ஹனுமன் ஜெயந்தி மட்டும் நம்முடைய இந்தியாவில் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. நம்முடைய தமிழ்நாட்டில் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தோடு அமாவாசை திதி வரும் நாளில் ஹனுமன் ஜெயந்தி கொண்டாடுவோம். ஆனால் வட மாநிலத்தில் உள்ளவர்கள் பங்குனி மாதம் பௌர்ணமி திதி வரும்போது அனுமன் ஜெயந்தி கொண்டாடுகிறார்கள்.

அவர்கள் இதை பூர்ணிமா திதி என்று சொல்லுவார்கள். இதன் அடிப்படையில் இந்த வடமாநிக் மாநிலத்தவர்கள் கொண்டாடும் ஹனுமன் ஜெயந்தி என்றைக்கு  வருகிறது. அந்த அனுமன் ஜெயித்துக்கு வீட்டில் இருந்தபடியே அனுமனை நாம் எப்படி வழிபாடு செய்தால் வாழ்வில் இருக்கும் துன்பங்கள் விலகும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

12-4-2025 ஆம் தேதி வரக்கூடிய சனிக்கிழமை பௌர்ணமி திதி அன்றுதான் வடமாநிலத்தவர்கள் அனுமன் ஜெயந்தி கொண்டாடுவார்கள். வடமாநிலத்தில் இது பத்து நாள் திருவிழாவாக கோலாகலமாக கொண்டாடப்படும். நீங்கள் இன்று தொடங்கி அனுமனை பின் சொல்லக் கூடிய முறையில், அனுமன் ஜெயந்தி வரும் நாள் வரை வழிபாடு செய்தால் உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறும். மன பயம் நீங்கும்.

துணிச்சல் பிறக்கும் எடுத்த காரியத்தில் முதல் முறையிலேயே வெற்றி காணக்கூடிய அளவுக்கு உங்களுடைய திறமை மேலோங்கும். அனுமன் என்றால் யார் என்று தெரியாதா. வெற்றி காண்பதற்காகவே பிறந்தவர். இவர் கையில் ஒரு காரியத்தை கொடுத்தால் அது தோல்வியை அடையாது. அதேபோலத்தான் நமக்கும் நன்மை நடக்கும். சரி இப்போது இந்த அனுமன் ஜெயந்திக்கான வழிபாட்டை பார்த்து விடுவோம்.

- Advertisement -

இன்று தொடங்கி தினமும் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வரும் சனிக்கிழமை வரை பூஜை அறையில் அனுமனை நினைத்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு 1 டம்ளர் தண்ணீரை உங்கள் முன்பு வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அனுமனது சக்தி வாய்ந்த இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை சொன்னால் அனுமன் உடம்பிலும் மனதிலும் இருக்கும் சக்தி உங்களுக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

அனுமன் மந்திரம்

ஓம் ஹம் ஹனுமதே நமஹ !

இந்த மந்திரத்தை 108 முறை உச்சரித்துவிட்டு உங்கள் முன்பாக இருக்கும் தண்ணீரை எடுத்து நீங்கள் குடித்து விட வேண்டும். நீங்கள் உச்சரித்த மந்திரத்தின் சக்தி முழுவதும் அந்த தண்ணீரில் சேர்ந்திருக்கும். நீங்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளக்கூடிய நாட்களில் அசைவம் சாப்பிடக்கூடாது. அடுத்தவர்களைப் பற்றி எந்த ஒரு அவதூரம் பேசக்கூடாது.

மனதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீடு சுத்தமாக இருக்க வேண்டும். தீய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளக் கூடாது. மனது முழுவதும் அனுமன் நிறைந்திருக்க வேண்டும். இவ்வளவுதான் கட்டுப்பாடுகள். இதை ஹனுமன் ஜெயந்தி வரும் நாள் வரை அதாவது வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வரை இந்த வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எளிமையாக ஜெயித்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: ஐஸ்வர்யம் பெருக செய்ய வேண்டிய வழிபாடு

அனுமன் ஜெயந்தி அன்று வரும் சனிக்கிழமை அன்று வீட்டு பக்கத்தில் இருக்கும் ஹனுமன் கோவிலுக்கு சென்று முடிந்தால் வெற்றிலை மாலை போட்டு இந்த வேண்டுதலை நிறைவேற்றி வையுங்கள். அதுமட்டுமல்லாமல் இன்று முதல் அனுமன் ஜெயந்தி வரும் நாள் வரை வீட்டில் ஹனுமன் சாலிசா படிப்பது நல்லது. படிக்க முடியவில்லை என்றால் ஹனுமன் சாலிசா ஒலிக்க விடுங்கள். வெற்றி மேல் வெற்றி வந்து குவியும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்