இன்றைய தலைமுறையினருக்கு முடி உதிர்தல் பிரச்சனை அதிகமாக உள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு இந்த பிரச்சனை மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. தலைமுடியின் அடர்த்தி குறையும் போது தான், அதன் தீவிரத்தை நம்மால் உணர முடியும். ஆரம்பத்திலேயே கவனித்து இருந்தால், சுலபமாக சரி செய்யலாம். அடர்த்தி குறைந்த பின்னர் கவலைப்படுபவர்கள், இந்த மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லுங்கள். மேலும் இயற்கையான முறையில் முடி வேரிலிருந்தே ஊட்டச்சத்தோடு நன்கு வளர்ந்து அடர்த்தியாக மாற செய்ய வேண்டிய எளிய வழிமுறைகளையும் பற்றி இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் அறிந்து கொள்வோம், வாருங்கள்.
தலைமுடி அடர்த்தியாக வளர்வதற்கு ஸ்ரீ தண்டாயுதபாணி கோலத்தில் இருக்கும் முருகனை வழிபடலாம். தண்டம் என்றால் “தடி” என்று பொருள். தடியை அல்லது ஈட்டியை ஆயுதமாகக் கொண்டுள்ளவர் தண்டாயுதபாணி. தண்டாயுதபாணி நவபாஷாணங்களால் உருவாகியவர். இவர் மொட்டை தலையுடன், உலக வாழ்வு நிரந்தரமற்றது என்கிற தத்துவத்தையும் உணர்த்தக் கூடியவர். தினமும் 108 முறை “ஓம் ஶ்ரீ தண்டாயுதபாணி நம” என்னும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
தொடர்ந்து இந்த மந்திரத்தை உச்சரித்து வருபவர்களுக்கு ஆழ்மனதில் புதிய நம்பிக்கையும், நிம்மதியும் பிறக்கும். இதனால் மன இறுக்கம், மன உளைச்சல் போன்ற டிப்ரசனிலிருந்து வெளியில் வருவீர்கள். மனதை முதலில் சாந்தமாக வைத்திருக்க வேண்டும். எப்போதும் மன இறுக்கத்துடன், எதையாவது யோசித்துக் கொண்டிருந்தால், தலைமுடி உதிரத்தான் செய்யும்.
உச்சந்தலைக்கும், உடலுக்கு உள்ளேயும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும். இதற்கு இரும்பு சத்து நிறைந்துள்ள காய்கறிகள் மற்றும் கீரைகள், பழங்கள் போன்றவற்றை தவறாது எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு முறையை சற்று இப்படி மாற்றி அமைத்தால் முடி உதிர்வது முதலில் நின்றுவிடும். பின்னர் உச்சந்தலைக்கு தினமும் வட்ட வடிவில் உங்கள் விரல்களால் மெதுவாக மசாஜ் செய்து கொடுங்கள், இதனால் ரத்த ஓட்டம் சீராகும்.
100ml சுத்தமான தேங்காய் எண்ணெயை அடுப்பில் வைத்து அதனுடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் வெந்தயம், ஒரு டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கருஞ்சீரகம் தலைமுடியின் வேர்க்கால்களுக்கு ஊட்டச்சத்தை கொடுத்து, புதிய முடியை அடர்த்தியாக வளர உதவி செய்யும். வெந்தயம் உச்சந்தலையில் இருக்கும் சூட்டை தணித்து முடி உதிர்வதை குறைத்து, நீளமாக கருகருவென்று வளர உதவி செய்யும். காய்ச்சிய பின்பு ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து வாரம் 3 முறை இந்த எண்ணெயை சிறிதளவு உச்சந்தலையில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
சித்திரை மாத தேய்பிறை பஞ்சமி வழிபாடு
அதன் பிறகு அரை மணி நேரம் கழித்து தலைக்கு சீயக்காய் போட்டு அலசிக் கொள்ளுங்கள். ஷாம்பு பயன்படுத்தினால் அதில் இருக்கும் செயற்கை ரசாயனங்களால், சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே இயற்கையாக பொடித்து வைத்துள்ள சீயக்காயை இனி பயன்படுத்துங்கள், நிச்சயம் முடி அடர்த்தியாக வளரும். நம்பிக்கையுடன் ஓரிரு மாதங்கள் மட்டும் இப்படி செய்து பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும். அப்படியே ஷாம்பூ பயன்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள், அதை சிறிதளவு தண்ணீருடன் கலந்து பின்னர் பயன்படுத்துங்கள், ரசாயனத்தின் வீரியம் குறையும்.