- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் தீர குபேர பஞ்சமி பரிகாரம்

கடன் தீர குபேர பஞ்சமி பரிகாரம்

- Advertisement -

தங்களுடைய அத்யாவசிய தேவைக்காக பிறரிடம் இருந்து பணத்தை வாங்கி அந்த பணத்தை திரும்ப கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவசர தேவைக்காக நகையை அடமானத்தில் வைத்து அதை திருப்ப முடியாமல் கஷ்டப்படுபவர்களும் பலர் இருக்கிறார்கள். இப்படி கடன் என்ற ஒன்றால் கஷ்டப்படக்கூடிய ஒவ்வொரு நபரும் இந்த பஞ்சமி திதி அன்று சில பொருட்களை வைத்து பரிகாரம் செய்வதன் மூலம் அவர்களுடைய செல்வ நிலை உயர்ந்து கடன் தீரும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

குபேர பஞ்சமி பரிகாரம்

தன்னுடைய தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு ஒருவருக்கு பணவரவு வந்து விட்டால் அவர் கடன் என்ற ஒன்றை வாங்கவே மாட்டார். ஆடம்பர வசதிக்காக வாங்குபவர்களை நாம் இந்த கணக்கில் சேர்க்கவே கூடாது. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமான அளவு பணவரவு இல்லாமல் பிறரிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்களுக்குதான் இந்த பரிகாரத்தில் வெற்றி என்பது கிடைக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வியாழக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பஞ்சமி திதியான இன்று செய்ய வேண்டும். இன்று இரவு 9:00 மணியில் இருந்து 12 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு ஆறு கிழியாத நல்ல வெற்றிலை வேண்டும். இந்த வெற்றிலையை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். வெற்றிலைகளை ஒரு தாம்பாலத்தில் வைக்க வேண்டும். பிறகு ஒவ்வொரு வெற்றிலைக்கு மேலும் மூன்று கிராம்பு, மூன்று ஏலக்காய், மூன்று துண்டு பச்சை கற்பூரம் என்று ஒவ்வொரு இலைகளிலும் வைக்க வேண்டும்.

இப்படி வைத்து முடித்துவிட்டு தீர்க்க முடியாத கடன் பிரச்சினை அனைத்தும் தீர வேண்டும், அது தீர்வதற்குரிய பணவரவு உண்டாக வேண்டும் என்று முழு மனதோடு வாராகி அம்மனிடமும் குலதெய்வத்திடமும் பரிபூரணமாக மனதார வேண்ட வேண்டும். பிறகு இந்த தம்பாளத் தட்டு அப்படியே இரவு முழுவதும் பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் காலை அதாவது வெள்ளிக்கிழமை அன்று காலையில் சுக்கிர ஹோரை என்று கூறக்கூடிய ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் வெற்றிலையின் மேல் இருக்கக்கூடிய கிராம்பு, ஏலக்காய், பச்சை கற்பூரம் இவை அனைத்தையும் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை என்பதால் அன்றைய தினம் நாம் வீட்டில் சாம்பிராணி தூபம் போடுவோம். அப்படி சாம்பிராணி தூபம் போடும் பொழுது இந்த பொடியை போட்டு வீடு முழுவதும் காட்ட வேண்டும். செல்வத்தை ஈர்க்கக்கூடிய இந்த பொருட்களை வைத்து நாம் தூபம் போட்டு வீடு முழுவதும் காட்டும் பொழுது மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அதன் மூலம் பணவரவு அதிகரிக்கும். அதனால் கடன் பிரச்சனையும் தீரும்.

இதையும் படிக்கலாமே:வெள்ளிக்கிழமை வாங்கக்கூடாதவை

செல்வத்தை ஆகர்ஷணம் செய்யக்கூடிய பொருட்கள் நம்மிடம் இருந்தாலேயே நமக்கு பணவரவு உண்டாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த பொருட்களை வைத்து நாம் இந்த முறையில் வழிபாடு செய்து தூபம் போடும் பொழுது கண்டிப்பான முறையில் நம்முடைய கடன் பிரச்சினை தீர்வதற்குரிய பணவரவு உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்