- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval20-04-2025 தேய்பிறை அஷ்டமி திதி விளக்கு பரிகாரம்

20-04-2025 தேய்பிறை அஷ்டமி திதி விளக்கு பரிகாரம்

- Advertisement -

ஒரு மனிதனுடைய வாழ்க்கை எப்போது முழுமை பெறும் தெரியுமா. நல்ல ஆரோக்கியம் இருக்க வேண்டும், அடுத்தபடியாக கடன் இல்லாத வாழ்க்கை இருக்க வேண்டும், இந்த இரண்டு வரங்களையும் எவன் ஒருவன் பெற்றுள்ளானோ, அவன் தான் இந்த உலகத்தின் உண்மையான செல்வந்தன். இதைப் புரிந்து வாழ்ந்தாலே நம்முடைய வாழ்க்கை இனிமையாக அமையும்.

நம்முடைய வாழ்க்கை வாழும் போதே முழுமை அடையும். கடன் இல்லாமல் வாழ வேண்டியது நம்முடைய கையில் இருக்கிறது. ஆரோக்கியமாக வாழ வேண்டிய பொறுப்பும் நம் கையில் தான் இருக்கிறது. இந்த இரண்டு விஷயத்திற்கும் இறைவனின் ஆசீர்வாதமும் கொஞ்சம் தேவை. அவனுடைய கருணை இல்லை என்றால் நம்மால் இந்த இரண்டு பெரும் வரங்களையும் பெறவே முடியாது. அந்த வகையில் நாளைய தினம் தேய்பிறை அஷ்டமி திதி.

- Advertisement -

நாளை ராகுகால நேரத்தில் பைரவரை வழிபாடு செய்தால் தீராத கடன் உங்களை விட்டு விலகும். தீராத நோய் நொடிகள் உங்களை விட்டு விலகும். எதிரி தொல்லை உங்களை விட்டு விலகும். கண் திருஷ்டி உங்களை விட்டு விலகும். இதற்கு ஒரு அதிசக்தி வாய்ந்த மூலிகை முடிச்சு கொண்ட விளக்கு பரிகாரத்தை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

வில்வ இலை, காய்ந்த செம்பருத்தி பூ, நாயுருவி பொடி, மிளகு, லவங்கம், பச்சை கற்பூரம், சுக்கு ஏலக்காய். இந்த 8 பொருட்களுமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கிக் கொள்ளுங்கள். இந்த பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும். நமக்கு தேவையான மூலிகை பொடி இப்போது தயார். ஒரு சிவப்பு நிற காட்டன் துணியை சின்ன சின்ன துண்டுகளாக, 8 துண்டுகள் சதுர வடிவில் வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த பொடியை வைத்து சின்ன முடிச்சாக கட்டிக் கொள்ளவும்.

- Advertisement -

எட்டு புது மண் அகல் விளக்கு வாங்கி, அதில் இந்த முடிச்சுகளை போட்டு இதன் மேலே நல்லெண்ணெய் ஊற்றி, இந்த முடிச்சை அப்படியே தீபம் போல ஏற்றி பைரவர் சன்னிதானத்தில் வைத்து வேண்டுதல் வைக்க வேண்டும். உங்களை விட்டு என்ன பிரச்சனைகள் விலக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அந்த பிரச்சினைகளை எல்லாம் பைரவர் இடம் வேண்டுதலாக சொல்லுங்கள். அந்த பிரச்சனை என்னை விட்டு விலக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். கூடிய விரைவில் உங்களுடைய துன்பங்கள் உங்களை விட்டு விலகி விடும். கட்டாயம் கோவிலில் தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

தீபம் ஏற்ற வேண்டிய நேரம்

20-4-2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3:03 மணிக்கு அஷ்டமி திதி பிறக்கிறது. இந்த திதியானது அடுத்த நாள் திங்கட்கிழமை மதியம் 2:33 மணி வரை இருக்கிறது. பைரவர் வழிபாட்டிற்கு ராகு கால நேரம் சிறந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணிக்குள் ராகு கால நேரம். இந்த நேரத்தில், இந்த விளக்கை கோவிலுக்கு சென்று ஏற்றுவது அதி அற்புதமாய் இந்த பலனை தரும்.

இதையும் படிக்கலாமே: தொட்ட காரியம் வெற்றி அடைய விநாயகர் வழிபாடு

இந்த நேரத்தை தவறவிட்டவர்கள் என்ன செய்யலாம். இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. திங்கட்கிழமை காலை 7:30 மணியிலிருந்து 9:00 மணி வரை ராகு கால நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் தேய்பிறை அஷ்டமி திதியும் இருக்கிறது. இந்த நேரத்தில் கோவிலுக்கு சென்று இந்த 8 தீபத்தை ஏற்றி வேண்டுதல் வைக்கலாம். இந்த எளிமையான பரிகாரம் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்