செவ்வாய்க்கிழமை வழிபாடு என்பது நம் வாழ்வில் இருக்கக்கூடிய கடன் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்குரிய வழிப்பாடாகவே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று நாம் செய்யக்கூடிய பரிகாரமும் பல இருக்கின்றன. கடன் தொடர்பான பிரச்சனை முற்றிலும் நீங்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் கோரையில் பலவிதமான பரிகாரங்களை நாம் செய்வது உண்டு. அந்த வகையில் உப்பை வைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் தீர்க்கும் செவ்வாய்க்கிழமை பரிகாரம்
செவ்வாய் பகவானுக்குரிய கிழமையாக திகழ்வதுதான் செவ்வாய்க்கிழமை. ஒருவருக்கு கடன் தொடர்பான பிரச்சனைகள் இருக்கிறது என்றால் அவருக்கு செவ்வாய் பகவானின் அருள் இல்லை என்று அர்த்தம். அதனால் செவ்வாய் கிழமை தோறும் செவ்வாய் பகவானை வழிபாடு செய்வதன் மூலம் செவ்வாய் பகவானின் அருளால் அவர்களுடைய கடன் பிரச்சனை தீரும். அதனால் தான் செவ்வாய் பகவானுக்குரிய அதிபதியான முருகப்பெருமானை செவ்வாய் கிழமை தோறும் பலரும் வழிபாடு செய்கிறார்கள். அந்த வகையில் கடன் பிரச்சினை தீருவதற்காக செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.
இந்த பரிகாரத்தைச் செவ்வாய்க்கிழமை அன்று இரவு வரக்கூடிய செவ்வாய் கோரையான 8 மணியிலிருந்து 9 மணிக்குள் செய்துவிட வேண்டும். இதற்கு முதலில் ஒரு சுத்தமான கண்ணாடி கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கிண்ணம் நிறைய கல்லுப்பை பரப்பிக் கொள்ளுங்கள். அந்த கல் உப்பிற்க்கு மேல் 27 மிளகுகளை தூவி விடுங்கள். பிறகு அதன் நடுப்பகுதியில் ஒரு கட்டி கற்பூரத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது இந்த கிண்ணத்தை நம்முடைய நிலை வாசலின் மூலையிலோ அல்லது குலதெய்வத்தின் படத்திற்கு முன்பாகவோ வைத்துவிட வேண்டும். இரவு முழுவதும் இது அப்படியே அதே இடத்தில் இருக்கட்டும். மறுநாள் காலையில் இவை அனைத்தையும் ஒரு சிவப்பு நிற துணியில் மூட்டையாக கட்டி கிழக்கு பார்த்தவாறு நாம் நின்று கொண்டு நம்முடைய தலையை வலமிருந்து இடமாக மூன்று முறையும் இடமிருந்து வலமாக மூன்று முறையும் சுற்றி ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும்.
ஒரு வேளை அருகில் ஓடுகின்ற நீர் இல்லை என்பவர்கள் உப்பு கொட்டி வைத்திருந்த கிண்ணம் இருக்கும் அல்லவா அந்த கிண்ணத்தில் தண்ணீரைப் பிடித்து அதில் உப்பை கொட்டி விட வேண்டும். மிளகையும் கற்பூரத்தையும் ஒரு அகல் விளக்கில் வைத்து எரித்து விட வேண்டும். தண்ணீரில் உப்பு முழுமையாக கரைந்ததும் அதை கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும். இந்த முறையில் தொடர்ச்சியாக மூன்று செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் எப்பேர்ப்பட்ட கடன் சுமையாக இருந்தாலும் அது படிப்படியாக விலகுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:நியாயமான வேண்டுதல் நிறைவேற
வழிப்பாடாக இருந்தாலும் பரிகாரமாக இருந்தாலும் முழு மனதோடு செய்தோம் என்றால் தான் அதனுடைய பலனை நம்மால் பெற முடியும். அதேபோல் பரிகாரத்தை செய்துவிட்டு அமைதியாக இருக்காமல் நம்முடைய பிரச்சனை தீர்வதற்குரிய முயற்சிகளையும் நாம் மேற்கொள்ளும் பொழுது அந்த முயற்சிகளின் பலனாலும் பரிகாரத்தின் பலனாலும் விரைவில் அந்த பிரச்சினையில் இருந்து வெளியே வர முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.