- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணத்தடை நீக்கும் ராகுகால தூபம்

பணத்தடை நீக்கும் ராகுகால தூபம்

- Advertisement -

நாம் ஒவ்வொருவரும் பணத்தை அதிக அளவில் சம்பாதிக்க வேண்டும், பணத்தை சேமிப்பாக உயர்த்த வேண்டும், அந்த பணத்தின் மூலம் பலவிதமான பொருட்களை வாங்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். ஆசை படக்கூடிய அனைவருக்கும் இது நடந்து விடாது. பணவரவில் எந்தவித தடைகளும் இல்லாமல் இருக்கக்கூடியவர்களுக்கு மட்டுமே இது நடைபெறும். ஒரு சிலருக்கு பணத்தை சம்பாதிப்பதற்குரிய வழியே கிடைக்காது. அதையும் மீறி பணத்தை சம்பாதித்தாலும் அதை சேமிப்பாக உயர்த்த முடியாது. கையில் சிறிதளவு கூட பணம் தங்காமல் ஏதாவது ஒரு செலவு வந்து கொண்டே இருக்கும். இப்படி பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்குவதற்கு ராகு கால நேரத்தில் போட வேண்டிய தூபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ராகுகால தூபம் வழிபாடு

நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களையும், தடைகளையும் நீக்குவதற்குரிய தெய்வமாக திகழக்கூடியவர்தான் துர்க்கை அம்மன். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த காலமாக திகழ்வது ராகு காலம். அதிலும் குறிப்பாக செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தும் தூரச் செல்லும் என்றும், அதனால் நாம் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் பணவரவில் இருக்கக்கூடிய தடைகளை நீக்குவதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

செவ்வாய், வெள்ளிக்கிழமையில் நம்முடைய வீட்டில் நாம் தூபம் போடும் வழக்கத்தை வைத்திருப்போம். தூபம் போடுவதற்காக உபயோகப்படுத்தக்கூடிய பொருட்கள் பல இருக்கின்றன. வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களை விலகுவதற்கு என்றும், தடைகளை விலகுவதற்கு என்றும், பணவரவை அதிகரிப்பதற்கும், வீட்டில் இருக்கக்கூடிய தீயசக்திகள் விலகுவதற்கு என்று பலவிதமான பொருட்களை பயன்படுத்தி நாம் தூபம் போடுவது உண்டு. அந்த வகையில் பணவரவில் இருக்கக்கூடிய தடைகளை விலக்குவதற்கு செவ்வாய்க்கிழமையில் வரக்கூடிய ராகு காலமான மாலை 3 மணியிலிருந்து 4:30 மணிக்குள் போட வேண்டிய தூபம்.

சரியாக ராகுகாலம் ஆரம்பிக்கும் பொழுது வீட்டு பூஜை அறையில் காய்ந்த கொட்டாங்குச்சியை வைத்து கங்கை தயார் செய்து அதில் தூபம் போடலாம். ஒருவேளை கங்கு தயார் செய்து தூபம் போட இயலாது என்று நினைப்பவர்கள் கடைகளில் விற்கக்கூடிய கப்பு சாம்பிராணியை பயன்படுத்தியும் இந்த தூபத்தை போடலாம். முதலில் அதில் வெண்கடுகை தூவ வேண்டும். வெண்கடுகை போட்ட பிறகு அதற்கு மேல் பச்சையாக இருக்கக்கூடிய கற்பூரவள்ளி இலைகளை போட வேண்டும். அந்த இலைகளுக்கும் மேல் சிறிது பச்சை கற்பூர துண்டை வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது இதிலிருந்து வரக்கூடிய தூபத்தை நாம் நம்முடைய வீடு முழுவதும் காட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக கதவுகளுக்கு பின்புறமும் மூலை முடுக்குகளிலும் காட்ட வேண்டும். இப்படி இந்த தூபத்தை நாம் செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் போட்டு வீடு முழுவதும் காட்டுவதன் மூலம் பணவரவு அதிகரிக்கும். பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் விலகும்.

இதையும் படிக்கலாமே:சொத்துக்கள் சேர வழிபாடு

மிகவும் எளிமையான இந்த தூப வழிபாட்டை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் ராகு காலத்தில் நம்முடைய வீட்டில் போடுவதன் மூலம் செல்வ செழிப்பிற்கு எந்தவித பஞ்சமும் இல்லாமல் நிறைவான பண வரவை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்