- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசொத்துக்கள் சேர வழிபாடு

சொத்துக்கள் சேர வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான சிறப்பு இருக்கும். அந்த நாளுக்குரிய தெய்வத்தை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு நல்ல பலன்களும் கிடைக்கும். மேலும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான திதி, நட்சத்திரம் போன்றவை வரும். அதை பொறுத்தும் அதற்குரிய தெய்வத்தை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு நன்மைகள் உண்டாகும். அந்த வகையில் சித்திரை மாதத்தின் செவ்வாய்க்கிழமையும் தசமி திதியும் சேர்ந்து வரக்கூடிய நாளில் துர்க்கை அம்மனை எந்த முறையில் வழிபாடு செய்தால் சொத்துக்கள் சேரும் யோகமும் வீட்டுக் கடன் தீரும் யோகமும் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சொத்துக்கள் சேர வழிபாடு

உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடியவர்தான் துர்க்கை அம்மன். துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களாக கருதப்படுவது செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை. செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அந்த நேரத்தில் நாம் தீபமேற்றி துர்க்கை அம்மனை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய துக்கங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அதே துர்க்கை அம்மனை தசமி திதியோடு சேர்ந்து வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வழிபாடு செய்வதன் மூலம் சொத்துக்கள் சேரும் யோகம் உண்டாகும்.

- Advertisement -

ஒவ்வொருவரும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்றும் வீடோடு நிற்காமல் புதிது புதிதாக சொத்துக்களை வாங்கி சேர்க்க வேண்டும் என்றும்தான் ஆசைப்படுவோம். அதற்குரிய யோகம் நமக்கு இருந்தால்தான் அதை நம்மால் செய்ய முடியும். அந்த யோகத்தை பெறுவதற்கு தெய்வத்தின் அருள் என்பது கண்டிப்பான முறையில் வேண்டும். மேலும் ஒரு சிலர் வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள். ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் முன்பணமாக செலுத்தி மாத மாதம் டியூ கட்டுவது போல் பேங்கில் இருந்து கடன் வாங்கி இருப்பார்கள். அந்த கடனை தீர்க்க முடியாமல் கஷ்டப்படுபவர்களும் இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் விரைவிலேயே வீட்டுக் கடனை தீர்ப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.

இந்த வழிபாட்டை தசமி திதியோடு சேர்ந்து வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று அதாவது ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று மாலை 5:30 மணியில் இருந்து 7:30 மணிக்குள் செய்ய வேண்டும். வீட்டு பூஜை அறையிலோ அல்லது ஹாலிலோ வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும். கையில் புள்ளியில்லாத எலுமிச்சம் பழத்தை வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு எலுமிச்சம் பழத்தை வைத்துக்கொண்டு துர்க்கை அம்மனை மனதார நினைத்து “ஓம் தேவி துர்கையே நமோ நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை கண்களை மூடி உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

108 முறை உச்சரித்து முடித்த பிறகு கண்களை திறந்து கையில் இருக்க கூடிய எலுமிச்சம் பழத்தை பார்த்து வேண்டுதலை கூற வேண்டும். பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை மட்டும் நறுக்கி சாறு பிழிந்து பழச்சாறாக வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் அருந்த வேண்டும். மற்றொரு எலுமிச்சம் பழத்தை பூஜையறையில் வைத்து விட வேண்டும். மூன்று நாட்கள் கழித்து அந்த எலுமிச்சம் பழத்தை கால் படாத இடத்திலோ அல்லது ஓடுகின்ற நீரிலோ போட்டு விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சொத்து, வீடு வாங்குவதில் இருக்கக்கூடிய தடைகள் விலகவும், வீட்டுக் கடனை தீர்ப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:பொருளாதார வளர்ச்சி உண்டாக

துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமை இந்த குறிப்பிட்ட நேரத்தில் முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்த சொத்தை வாங்கும் யோகம் உண்டாவதோடு சொத்துக்கள் மீது வாங்கிய கடனையும் நிவர்த்தி செய்ய முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்