- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமுருகன் கடவுள் மந்திரம்

முருகன் கடவுள் மந்திரம்

- Advertisement -

காரணம் இல்லாமல் கந்தன் உங்களுக்கு பிரச்சினையை கொடுக்க மாட்டான். பிரச்சனைகளை கொடுத்து விட்டு அவன் கண்களை மூடிக்கொள்ள மாட்டான். பிரச்சனைகளுக்கு தீர்வையும் அவனே காட்டிக் கொடுப்பான். உளியின் வலியை தாங்கிக் கொண்டு, கல் எப்படி சிற்பமாக மாறுகிறதோ, வேதனைகளை தாங்கும் மனிதர்களாகிய நீங்களும் ஒரு நாள் முருகனின் பாதத்தை சரணடைவீர்கள். வேதனைகளை தாங்கும் உங்களுடைய மனமும் நிச்சயம் ஒரு நாள் பக்குவப்படும்.

வெறும் கல், சிலையாக மாறுவது போல சாதாரண மனிதர்களாக இருக்கும் நீங்கள் முருகனுடைய பக்தனாக மாறி, எல்லாம் இறைவனின் திருவிளையாடல் என்று நிச்சயம் ஒருநாள் புரிந்து கொள்வீர்கள். உங்களுடனே தான் முருகப்பெருமான் இருக்கின்றான். உங்கள் வாழ்க்கை பயணத்தோடு சேர்ந்து அவனும் பயணிக்கின்றான் என்பதை உணர வேண்டுமா.

- Advertisement -

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை. இரவு தூங்க செல்வதற்கு முன்பு முருகனை மனதில் நினைத்து கையில் மயில் இறகை வைத்து இந்த ஒரு வரி மந்திரத்தை நம்பிக்கையோடு செல்லுங்கள். அந்த முருகன் மயிலின் மீது ஏறி உங்கள் கனவில் வந்து காட்சி கொடுப்பான். உங்களுடைய வேதனைகளை எல்லாம் தீர்த்து வைப்பார். நம்பிக்கை இருந்தால் மட்டும் இந்த பதிவு உங்களுக்கு சமர்ப்பணம்.

முருகன் மயில் இறகு வழிபாடு

வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய பூஜை பொருட்களில் இந்த மயிலிறகும் அடக்கம். முருகனுடைய சிலைக்கு பக்கத்தில் ஒரே ஒரு மயிலிறகை சொருகி வைத்தாலும் போதும். மயிலிறகு உங்களுடைய வீட்டில் இல்லை என்றால் உடனடியாக முருகன் கோவிலுக்கு செல்லும்போது ஒரு மயிலிறகை வாங்கி வந்து பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இன்று உங்களுடைய வீட்டு பூஜை அறையில் மயிலிறகு இருந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டசாலி. இரவு தூங்க செல்வதற்கு முன்பு மயிலிறகை கையில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். முருகா முருகா என்று உள்ளம் உருகி முருகனை கூப்பிட்டு, மனதில் நிறுத்துங்கள். பிறகு இந்த ஒரு வரி மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். துன்பங்கள் விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு மயிலிறகை தலை பகுதிக்கு மேலே வைத்துவிட்டு தூங்கி விடுங்கள். இவ்வளவுதான்.

இன்றைய முருகன் வழிபாடு. முருகனை மட்டுமே மனதில் நினைத்து மயிலிறகை உங்கள் அருகிலேயே வைத்து இந்த மந்திரத்தை சொல்லி தூங்கினால் நிச்சயம் உங்களை காண அந்த முருகப்பெருமான் வருவான் என்பது ஒரு நம்பிக்கை. இன்று இரவு தூங்க செல்லும் போது முருகனை நினைத்து சொல்ல வேண்டிய மந்திரம் இதோ.

- Advertisement -

பழனி முருகன் மந்திரம்

ஓம் பழனி தண்டாயுதபாணியே போற்றி போற்றி !
வேலும் மயிலும் துணை.
மனிதனின் ஆறாவது அறிவு முருகன். என்னுடைய
ஆறாவது அறிவாக நீயே இருந்து என்னை செயல்படுத்துவாயாக.

இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு என் குறை தீர்க்க ஓடோடி வந்துவிடு முருகா என்று மட்டும் உள்ளம் உருகி கூப்பிட்டு, நீங்க பாட்டுக்கு நிம்மதியா தூங்கிடுங்க. உங்களுடைய கவலைகள் விடியும் பொழுதில் காணாமல் போயிருக்கும். இது நிதர்சனமான உண்மை. சில பேருக்கு இரவு படுத்தால் தூக்கமே வராது. கடன் தொல்லை கண்முன்னே வரும். பிள்ளைகளுடைய எதிர்காலம் கண்முன்னே, பிரச்சனைகள் கண் முன்னே வரும், உடல் உபாதைகள் தூங்க விடாது.

இதையும் படிக்கலாமே: புரியாத பாடங்களை எளிமையாக படிக்க ஆன்மீக குறிப்பு

எவ்வளவோ தொந்தரவுகள் தூக்கத்தை கெடுக்க வரிசை கட்டி நிற்கும். முருகன் மயிலை தலைக்கு மேலே வைத்துக் கொண்டால் எந்த தொந்தரவும் உங்களை நெருங்காமல் நிம்மதியான தூக்கம் உங்கள் கண்களை தழுவும். இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்