- Advertisement -

ராகு கேது பெயர்ச்சி 2025

- Advertisement -

26-4-2025 வரும் சனிக்கிழமை அன்று மாலை 4:28 மணிக்கு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி இந்த ராகு கேது பெயர்ச்சி ஆனது நடக்கவிருக்கிறது. கும்ப ராசிக்கு ராகுவும், சிம்ம ராசிக்கு கேது பகவானும் பெயர்ச்சியாக இருக்கிறார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியின் மூலம் நமக்கு எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க, நாம் ராகு கேது பெயர்ச்சி அன்று உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன, தினம் தோறும் வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள் என்ன ஆன்மீகம் சார்ந்த சில தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ராகு கேது பெயர்ச்சி 2025

கிரகங்கள் என்பது கடவுள்கள் அல்ல. அந்த கடவுள்களால் படைக்கப்பட்டவை தான் இந்த கிரகங்கள். ஆகவே கிரக பெயர்ச்சியை கண்டு நாம் பயப்பட வேண்டாம். கிரக பெயற்சியின் மூலம் நமக்கு எந்த ஒரு பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் இறை வழிபாடு செய்வது மிக மிக அவசியம். இறைவனின் பாதங்களை இறுக்கப்பற்றிக் கொண்டால், இந்த பயிற்சிகள் எல்லாம் நம்மை எதுவுமே செய்யாது. ராகு கேது என்பவர்கள் ஒரு நிழல் கிரகங்கள். நிழலை போல நம்மை தொடரும். நாம் செய்த நல்லது கெட்டதை எல்லாம் கவனித்து வைத்துக் கொண்டு, அந்தந்த நேரத்திற்கு பலா பலன்களை நமக்கு கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நீங்கள் எவ்வளவு நன்மை செய்கிறீர்களோ, ராகு கேது அவ்வளவுக்கு அவ்வளவு உங்களுக்கு நன்மையை செய்யும். எவ்வளவு தீங்கு செய்கின்றோமோ அதே போல ராகு கேது உங்களுக்கு தீங்கை கொடுத்து விடும். இது ராகு கேதுவுக்கு மட்டும் பொருந்தாது. எல்லா கிரகங்களும் இதைதான் செய்கிறது. இதை புரிந்து கொண்டாலே மனிதர்கள் வாழ்க்கையில் கஷ்டப்படாமல் வாழலாம் இது முதல் விஷயம்.

கிரகங்கள் பெயர்ச்சி ஆனாலும் சரி, பெயர்ச்சி ஆகவில்லை என்றாலும் சரி, நம்முடைய இந்து மதத்தில் இந்த நாக வழிபாட்டிற்கு ரொம்ப ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. எல்லா இறைவனுமே பாம்பை தன்னோடு வைத்திருக்கிறார்கள். பெருமாள், சிவன், அம்பாள், முருகர், விநாயகர் எல்லா தெய்வங்களிடத்திலும் நாம் இந்த சர்ப்பத்தை பார்க்கலாம்.

- Advertisement -

ஆக சர்ப்பத்தோடு இருக்கும் எந்த இறைவனை நீங்கள் தினம் தினம் வழிபாடு செய்தாலும் ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது. அதேபோல தினமும் சர்ப்பத்தின் இந்த எட்டு பெயர்களை உச்சரித்து விட்டால் சர்ப்ப தோஷம், ராகு கேது தோஷம் உங்களை எதுவுமே செய்யாது. இந்த எட்டு நாமங்களை ராகு கேது பெயர்ச்சி அன்று ஒரு முறை படிக்கலாம். முடிந்தவர்கள் தினந்தோருமே இந்த எட்டு பெயர்களையும் படிக்கலாம்.

நாகத்தின் எட்டு பெயர்கள்

வாசுகி, ஆதிசேஷன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், தட்சகன், சங்கபாலன், பதுமன் இதுதான் அந்த பெயர்கள். இதை ஒரு முறை படித்து விடுங்கள். அதேபோல ராகு கேதுவுடைய மந்திரத்தை நாம் உச்சரிக்கும் போது, அவர்களால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். இந்த மந்திரங்களையும் தினந்தோறும் உச்சரிக்கலாம். முடியாதவர்கள் வரும் சனிக்கிழமை மட்டுமாவது ராகு கேது பெயர்ச்சி அடையக்கூடிய நேரத்தில் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். தோஷங்கள் விலகிவிடும்.

- Advertisement -

ராகு காயத்ரி:
நாக த்வஜாய வித்மஹே!
பத்ம ஹஸ்தாய தீமஹி!
தந்நோ ராகு ப்ரசோதயாத்!

கேது காயத்ரி:
அச்வ த்வஜாய வித்மஹே!
சூல ஹஸ்தாய தீமஹி!
தந்நோ கேது ப்ரசோதயாத்!

இதையும் படிக்கலாமே: நாளை சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி

இவ்வளவு மந்திரங்கள் நாமங்களை எல்லாம் எங்களால் சொல்ல முடியாது என்றாலும் பரவாயில்லை. “ஓம் ராகுவே நமஹ, ஓம் கேதுவே நமஹ” என்ற இந்த இரண்டு வரி மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தாலே போதும். ராகு கேது தோஷத்தால் உங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு பாதிப்பும் வராது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றுங்கள். நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்