- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநாளை சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி

நாளை சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி

- Advertisement -

இறை வழிபாட்டை செய்து கொண்டு, பாவங்களை தொடர்ந்து செய்து கொண்டே வந்தால், நிச்சயமாக நமக்கு மோட்சம் என்பது கிடைக்காது. அறியாமல் செய்த பாவத்திற்கு இறைவழிபாட்டில் மன்னிப்பு உண்டு. தெரிந்தே தவறுகளை செய்து, பாவ மன்னிப்பு கேட்டால், செய்த தவறுக்கு உண்டான தண்டனையை நிச்சயம் நாம் அனுபவித்து தான் ஆக வேண்டும். மனதறிந்து யாருக்கும் எந்த பாவத்தையும், தீங்கையும் செய்யாதீர்கள்.

நீங்கள் அறியாமல் செய்த பாவத்திற்கு உண்டான தண்டைகள் குறைய செய்ய வேண்டிய வழிபாடு, ஏகாதசி வழிபாடு. மாதம் தோறும் வரக்கூடிய தேய்பிறை ஏகாதசி, வளர்பிறை ஏகாதேசி இரண்டு நாளுமே பெருமாளுக்காக விரதம் இருந்து வழிபாட்டை மேற்கொண்டால், நிச்சயமாக பாவ விமோசனம் கிடைக்கும். பெருமாள் பாதத்தில் இடம் கிடைக்கும் என்பது அனைவராலும் நம்பப்படும் ஒரு நம்பிக்கை. இதைத்தான் நம்முடைய இந்து சாஸ்திரமும் சொல்கிறது.

- Advertisement -

இதன் அடிப்படையில் நாளைய தினம் வந்திருக்கும் சித்திரை ஏகாதசியில், பெருமாள் விரதம் இருந்தால், என்ன பலன், நாளைய தினம் பெருமாள் முன்பு சொல்ல வேண்டிய அந்த ஒரு வரி மந்திரம் என்ன. இவைகளைத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

சித்திரை தேய்பிறை ஏகாதசி வழிபாடு

ஏகாதசி வழிபாடு என்றாலே சாப்பிடாமல் விரதம் இருந்து, மனது முழுவதும் பெருமாளின் நினைவோடு பெருமாளின் நாமத்தை சொல்லிக்கொண்டு, வழிபாட்டை மேற்கொள்வது தான் சரியான முறை. இருந்தாலும் இன்றைய கால சூழ்நிலையில் இது எல்லோராலும் முடியாது. அதனால் ஏகாதசி திதி அன்று அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள்.

- Advertisement -

கொஞ்சமாக வெறும் வயிற்றில் துளசி தீர்த்தத்தை குடித்துவிட்டு, பிறகு இந்த ஒரு வரி மந்திரத்தை இறைவன் முன்பு 108 முறை சொல்லி விடுங்கள். ஏகாதசி நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்து அந்த பெருமாளை வழிபாடு செய்த புண்ணியம் உங்களை வந்து சேரும்.

காலையில் இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு பெருமாளுக்கு சின்னதாக வீட்டிலேயே பூஜை செய்துவிட்டு, உங்களுடைய வேலையை நீங்கள் துவங்கலாம். மந்திரத்தை உச்சரித்து விட்டு பூஜையை நிறைவு செய்துவிட்டு பச்சரிசியில் செய்த லேசான உணவுகளை தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ளலாம். நாளை காலை வெறும் வயிற்றில் சொல்ல வேண்டிய பெருமாள் மந்திரம்.

- Advertisement -

பெருமாள் மந்திரம்

ஓம் சக்கரதாரியே நமஹ!

சக்கரத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கும் பெருமாளே உன்னை நான் வணங்குகின்றேன் என்பதுதான் இந்த பதிவிற்கு உண்டான அர்த்தம். நம்முடைய வாழ்க்கையின், காலச் சக்கரம் அந்த பெருமாள் கையில்தான் உள்ளது. இந்த ஒரு வரி மந்திரத்தை நாளைய தினம் சொல்லி பாருங்கள். நம்முடைய வாழ்நாளில் நாம் செய்த பாவங்களை நீக்க பெருமாள் கையில் இருக்கும் சக்கரம் நமக்கு உதவி செய்யும்.

இதையும் படிக்கலாமே: நேர்மறை ஆற்றல் அதிகரிக்க.

நிச்சயம் நல்லதே நடக்கும் நாளைய தினம் அனைவருக்கும் பெருமானின் ஆசி கிடைக்கும். வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாள் தீர்த்தம் வாங்கிக் கொண்டு, பெருமாள் சடாரியை தலையில் வையுங்கள். தலை மேல் நிற்கும் பாவங்கள் எல்லாம் ஒரு நொடி பொழுதில் விலகும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்