கிரகங்களின் சஞ்சாரத்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழக்கூடிய ஜோதிட சாஸ்திரத்தின் படி, இவ்வாண்டு மே மாதம் 4 கிரகங்கள் மீன ராசியில் ஒன்றாக இணைய இருக்கின்றன. சூரியன், சுக்கிரன், புதன் மற்றும் ராகு ஆகிய இந்த நான்கு முக்கிய கிரகங்கள் மீன ராசிக்கு ஒன்றாக சஞ்சரிக்கப் போவதால், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வர இருக்கிறது? என்னும் ஜோதிடம் சார்ந்த தகவல்களை இப்பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
நான்கு கிரக சேர்க்கை நிகழும் பொழுது, அதை ராஜ யோகம் தரக்கூடிய அமைப்பாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதனை சதுர்கிரகி என்றும் கூறுவார்கள். மே மாதம் இந்த நான்கு ராசிகளும் ஒரே ராசியில் சஞ்சரித்து நற்பலன்களை அள்ளிக் கொடுக்க காத்திருக்கிறது. தொழில் ரீதியாகவும், வருமான ரீதியாகவும், குடும்ப ரீதியாகவும் எந்த ராசிக்காரர்கள் இந்த அதிர்ஷ்டத்தை அனுபவிக்க இருக்கிறார்கள்? என்பதை பார்ப்போம்.
மகர ராசி:
மகர ராசியில் பிறந்தவர்கள் மே மாதம் முதல் தடைகளை தாண்டிய முன்னேற்றம் அடைவீர்கள். எது நடக்காது என்று சலித்து போனதோ, அது நடக்க காத்திருக்கிறது. வேலையில் மாற்றங்கள் நிகழும். லாபம் அதிகரித்து உங்களை உற்சாகப்படுத்தும். புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க இருக்கிறது. மாணவர்களுக்கு அறிவாற்றல் சிறந்து விளங்கும். திருமண வாழ்க்கையிலும் திருப்பங்கள் நிகழும். புதிய இலக்கை நோக்கி திட்டமிடுங்கள், வெற்றி உங்களுக்கு தான். உங்களை குறைவாக எடை போட்டவர்கள் முன்பு, தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய காலம் இதுவாகும், பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கும்ப ராசி:
கும்ப ராசியில் பிறந்தவர்கள் மே மாதம் முதல் எதிர்பாராத விஷயங்களை சந்திப்பீர்கள். கழுத்தை நெரிக்கும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உங்களுக்கு வரவேண்டிய பணம் அல்லது சொத்துக்கள் சரியான நேரத்திற்கு வந்து சேரும். சனியின் ஆதிக்கம் குறைந்து நற்பலன்களை அள்ளிக் கொடுக்கும். இனி உங்களுக்கு வரக்கூடிய வாய்ப்புகளை எல்லாம் தவறவிடாமல் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சூரியனும், சனியின் அஸ்தமனமும் நிகழ்வதால் நன்மைகள் பெருகும். நிதிநிலை நீங்கள் எதிர்பார்த்தது போல இருக்கக்கூடும். சேமிப்பை உயர்த்தி எதிர்கால திட்டமிடல் செய்வது நன்மை தரும்.
மீன ராசி:
மீன ராசியில் பிறந்தவர்கள் மே மாதம் முதல் வர்த்தகரீதியாக லாபங்களை அதிகரித்து பெறுவீர்கள். தொழில் ரீதியான போட்டிகளில் வெற்றி காணக்கூடிய யோகம் உங்களுக்கு வரும். கிரக சேர்க்கைகளால் சனியின் அருள் உங்களுக்கு கிடைத்து, உங்கள் நேர்மைக்கு உரிய அங்கீகாரத்தை பெற்று தரும். வெளிநாடு தொடர்பான விஷயங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். சம்பளம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் பாராட்டு பெரும் அளவிற்கு உங்களுடைய திறமைகள் வளரும். காதல் வாழ்க்கையில் இனிமை உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:
நோய் நொடி தீர அட்சய திருதியை மந்திரம்
இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் மே மாதம் சதுர் கிரக யோகத்தால் அதிர்ஷ்டங்கள் கைகூடி வர இருக்கிறது. தொழில், வாணிபம் புரிபவர்களுக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். திருமண பந்தத்தில் பிரச்சனைகள் இருப்பின், மே மாதத்தில் பேசி தீர்த்து முடிவுக்கு கொண்டு வாருங்கள், உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். காதல் வாழ்க்கையிலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும் என்பதால் நீங்கள் திருமண பேச்சு வார்த்தைகளில் இப்போது முக்கிய முடிவுகளை எடுத்தால் சாதக பலன் உண்டாகும்.