- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநோய் நொடி தீர அட்சய திருதியை மந்திரம்

நோய் நொடி தீர அட்சய திருதியை மந்திரம்

- Advertisement -

பணம் காசு தங்கம் வைரம், சொந்த வீடும் வீட்டுக்கு முன்பு நான்கு கார்களும், இவைகளை எல்லாம் வைத்திருந்தால் தான் செல்வந்தர்கள் என்று சொல்கிறது இந்த கலியுகம். ஆனால் உண்மையிலேயே செல்வந்தர்கள் யார் தெரியுமா. ஆரோக்கியத்தோடு வாழ்பவர்கள் தான். ஆரோக்கியமே சிறந்த செல்வம் என்பது இன்று பல பேருக்கு தெரிவது இல்லை. அளவான பணமும், நல்ல ஆரோக்கியமும் எந்த மனிதனிடம் இருக்கிறதோ, அவன் தான் இந்த உலகத்தில் முதன்மையான பணக்காரன்.

இதை புரிந்து கொண்டாலே உங்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். இன்றைய சூழ்நிலையில் ஒரு மனிதனுக்கு ஆரோக்கிய குறைபாடு என்பது சர்வசாதாரணமா ஒரு விஷயமாக இருக்கிறது. மூன்று வேளை சாப்பாட்டோடு சேர்த்து மூன்று வேளை மருந்தும் அத்தியாவசியமான பொருளாகிவிட்டது. ஆரோக்கிய குறைபாடுகளில் இருந்து வெளிவர, மருந்து மாத்திரைகள் சாப்பிடாமல், ஆரோக்கியமாக வாழ, அட்சய திருதியை அன்று செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றியும், சொல்ல வேண்டிய ஒரு எளிமையான மந்திரத்தையும் தான் என்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இன்று அட்சய திருதியை. இந்த பதிவை பார்த்த பிறகு உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, பூஜை அறையில் மகாலட்சுமிக்கு முன்பு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த பரிகாரத்தை செய்யுங்கள். சுத்தமான ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து உங்கள் கையில் வைத்துக் கொள்ளுங்கள். செம்பு டம்ளர், செம்பு வாட்டர் கேன் எது இருந்தாலும் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். செம்பு பாத்திரத்திரம் இல்லை என்பவர்கள் சில்வர் டம்ளரில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்.

பாத்திரம் நிரம்ப தண்ணீர் இருக்கட்டும். முடிந்தால் அதில் இரண்டு துளசி இலைகளை போடுங்கள். உங்களுடைய உள்ளங்கைகளை அந்த டம்ளர் மேலே வைத்து மூடிக்கொள்ளவும். காற்று உள்ளே போகாத அளவு மூடக்கூடாது. லேசாக கேப் தெரியும் படி மூடி, பின் சொல்ல கூடிய இந்த மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு, குலதெய்வத்தின் பெயரை 27 முறை சொல்லிவிட்டு ஆரோக்கியம் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து அந்த தண்ணீரை குடித்து விட வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம். இந்த பரிகாரத்தை அட்சய திருதியை அன்று செய்தால் உங்களுடைய ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

அமிர்த சஞ்சீவினி மந்திரம் :

ஓம் நமோ பகவதி மிருதசஞ்சீவினி சந்தி குரு குரு ஸ்வாஹா !

நீங்கள் தண்ணீரின் மேல் கைகளை வைத்துக்கொண்டு சொல்ல வேண்டிய சஞ்சீவினி மந்திரம் இதுதான். மிக மிக எளிமையான மந்திரம். எல்லோராலும் உச்சரிக்கும் படி இருக்கக்கூடிய மந்திரம். இந்த மந்திரத்தை அட்சய திருதியை அன்று உச்சரிப்பவர்களுக்கு நிச்சயம் ஆரோக்கியம் கிடைக்கும். முயற்சி செய்து பாருங்கள். அதற்காக மந்திரத்தை சொல்லிவிட்டு பரிகாரத்தை செய்துவிட்டு மருந்து மாத்திரை சாப்பிடாமல் இருக்க கூடாது. மருந்து மாத்திரை, மருத்துவர் ஆலோசனை எல்லாம் ஒரு பக்கம் வேண்டும்.

இதையும் படிக்கலாமே: அட்சய திருதியை அபிராமி அந்தாதி பாடல்

இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாடு உங்களுடைய ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை குறைக்க வழி வகுக்கும். இன்று தொடங்கி இந்த மந்திரத்தை தினமும் 48 முறை சொல்லுங்கள். 48 நாளும் ஒரு டம்ளர் தண்ணீரை கையில் வைத்துக் கொண்டு, இந்த மந்திரத்தை சொல்லி அந்த நீரை பருகி வர நிச்சயம் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மருந்து மாத்திரை சாப்பிடக்கூடிய அளவில் வீரியம் குறையும். நம்பிக்கை இருந்தால் இதை முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்