இந்த வருடத்தில் வரக்கூடிய முதல் 3ஆம் பிறை என்பது ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து கிருத்திகை நட்சத்திரமும் வருகின்றது. இது எந்த அளவிற்கு முருகனுக்கு உகந்ததோ அதேபோல் சிவபெருமானுக்கும் உகந்ததாகவே கருதப்படுகிறது. மூன்றாம் பிறையை தலையில் சூடி இருக்கக்கூடிய சிவபெருமானாக இருந்தாலும் சரி அம்பாளராக இருந்தாலும் சரி விநாயகர் பெருமானாக இருந்தாலும் சரி மூன்றாம் பிறை நாளன்று சந்திர பகவானை வழிபாடு செய்வதன் மூலம் இவர்கள் அனைவரின் அருளையும் நம்மால் பெற முடியும். இருப்பினும் நாம் கேட்டது கேட்டபடி கிடைப்பதற்கு எந்த முறையில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை முடிந்து வரக்கூடிய மூன்றாவது நாளை மூன்றாம் பிறை தரிசனம் என்று கூறுவோம். அந்த தினத்தில் வரக்கூடிய சந்திரனை நாம் தரிசனம் செய்வதன் மூலம் நம் வாழ்வில் பலவிதமான நன்மைகள் உண்டாகும். ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய ஒவ்வொரு மூன்றாம் பிறைக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ச்சியாக யாரொருவர் ஒரு வருடம் முழுவதும் மூன்றாம் பிறை தரிசனத்தை காண்கிறார்களோ அவர்கள் நினைத்தது அனைத்தும் நடக்கும் கேட்டது அனைத்தும் கிடைக்கும் என்று கூட கூறலாம். இருப்பினும் சித்திரை மூன்றாம் பிறை நாளன்று நாம் சந்திர தரிசனம் செய்யும் பொழுது நமக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாக முருகப்பெருமானுக்கு உகந்த இந்த நாளில் வரக்கூடிய சந்திர தரிசனம் சற்று கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. சந்திரனின் அருளை பெறுவதற்கும் நாம் கேட்டது அனைத்தும் கிடைப்பதற்கும் சந்திர தரிசனம் செய்யும் பொழுது சில சூட்சமமான முறைகளை நம் கையாள வேண்டும். அந்த வகையில் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய சந்திர தரிசனம் நாள் அன்று நாம் சந்திரனை தரிசனம் செய்யும் பொழுது கையில் சிறிதளவு துவரம் பருப்பை வைத்துக்கொண்டு சந்திர தரிசனம் செய்ய வேண்டும். அப்படி நாம் கையில் துவரம் பருப்பை வைத்துக்கொண்டு சந்திரனை தரிசனம் செய்யும் பொழுது என்ன நினைக்கிறோமோ அது அப்படியே நமக்கு நடக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் கையில் துவரம் பருப்பை வைத்துக்கொண்டு “ஓம் சந்திரமௌலீஸ்வராய நமஹ” “ஓம் சோமாய நமஹ” என்னும் மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு கையில் இருக்கக்கூடிய துவரம் பருப்பை திரும்பவும் நம்முடைய வீட்டில் சமையலுக்கு உபயோகப்படுத்தும் பருப்புடன் நாம் கலந்து வைத்து கொள்ளலாம். இந்த முறையில் நாம் சித்திரை மாதத்தில் செவ்வாய்க்கிழமை அன்று வரக்கூடிய மூன்றாம் பிறை நாளன்று சந்திரன் சந்திர தரிசனம் செய்வதன் மூலம் நாம் என்ன நினைத்தோமோ அது அப்படியே நடக்கும்.
இதையும் படிக்கலாமே: செவ்வாய் கிருத்திகை மந்திரம்
அதித சக்தி வாய்ந்த நாளாக கருதக்கூடிய ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி இந்த முறையில் சந்திர தரிசனம் செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும் அவர்களுடைய முயற்சிகள் வெற்றி அடையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.