இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏதாவது ஒரு வகையில் கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். அந்த கஷ்டத்தில் இருந்து வெளியே வந்து தங்களுடைய வாழ்க்கையை நடத்தி தான் ஆக வேண்டும். அந்த வகையில் மனிதர்களாக பிறந்த நாமும் விதிவிலக்கல்ல. நமக்கும் பலவிதமான கஷ்டங்கள் வாழ்க்கையில் இருக்கத்தான் செய்யும். அந்த கஷ்டங்களில் இருந்து தப்பித்து வெளியே வந்து சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் மே ஒன்றாம் தேதி விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
விக்னங்களை தீர்க்கக் கூடிய கடவுளாக திகழ்ந்தவர் தான் விநாயகர் பெருமான். அப்படிப்பட்ட விநாயகர் பெருமானை ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் அன்றும் நாம் வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. அவ்வாறு மாதத்தின் முதல் நாள் அன்று நாம் வழிபாடு செய்யும்பொழுது அந்த மாதம் முழுவதுமே நமக்கு சிறப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் மே மாதம் முதல் நாள் விநாயகப் பெருமானை எப்படி வழிபட்டால் நம்முடைய கஷ்டங்கள் தீரும் என்பதை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
மே மாதத்தின் முதல் நாள் வியாழக்கிழமை அன்று பிறக்கிறது. இந்த நாளில் ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து விட்டு மீதம் இருக்கக்கூடிய நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய விநாயகரின் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது ஒரே ஒரு தேங்காயை மட்டும் எடுத்துக் கொண்டு செல்லுங்கள். விநாயக பெருமானுக்கு முன்பாக கிழக்கு பார்த்தவாறு நின்று கொண்டு தேங்காயை கையில் வைத்துக் கொண்டு “ஐந்து கரத்தனை ஆனைமுகத்தினை இண்டின் இளம்பிறைப் போலும் ஏற்றினை நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே” என்னும் விநாயகப் பெருமானின் பாடலை முழு மனதோடு கூற வேண்டும்.
பிறகு அந்த தேங்காயை கோவிலில் சிதர் தேங்காயாக உடைத்து விட்டு வரவேண்டும். இப்படி மே ஒன்றாம் தேதி விநாயகர் ஆலயத்திற்கு சென்று நாம் வழிபாடு செய்வதன் மூலம் தேங்காய் எப்படி உடைந்து போகிறதோ அதேபோல் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் உடைந்து போகும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:தங்கம் வாங்கும் யோகம் உண்டாக
முழுமனதோடு நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடாக இருந்தாலும் அந்த வழிபாட்டிற்கு பலன் அதிகம் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு முழு மனதோடு மே மாதம் முதல் நாள் விநாயகப் பெருமானை இந்த முறையில் வழிபாடு செய்து பாருங்கள், உங்கள் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போவதை உணர்வீர்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.