- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதுன்பங்கள் நீங்க வாராகி வழிபாடு

துன்பங்கள் நீங்க வாராகி வழிபாடு

- Advertisement -

கலியுகத்தில் உக்கிர தெய்வங்களின் வழிபாடு என்பது மிகவும் சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறது. அப்படிப்பட்ட உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடியவர்தான் வாராகி அம்மன். வாராஹி அம்மனை முழுமனதோடு நம்பி யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல் எதிரிகள் என்ற பேச்சுக்கு இடமில்லாமல் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் மட்டுமே உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வாராகி அம்மனை எந்த முறையில் வழிபட்டால் வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

துன்பங்கள் நீங்க வாராகி வழிபாடு

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழ்நிலையில் ஒவ்வொரு விதமான பிரச்சினை என்பது ஏற்படும். ஒரு சிலருக்கு நல்ல வேலை அமையாமல் இருக்கலாம், குடும்பத்தில் பிரச்சினை இருக்கலாம், சொந்த வீடு கட்டுவதில் தடைகள் இருக்கலாம், திருமணம் ஆகாமல் இருக்கலாம், குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருக்கலாம். இப்படி ஏதாவது ஒரு பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் இன்னும் சிலருக்கோ வெளியில் சொல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் கூட மாட்டிக் கொண்டு இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் தொடர்ச்சியாக 11 நாட்கள் வாராகி வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக 11 நாட்கள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 11 நாட்களும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 11 நாட்களும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும். இந்த வழிபாட்டை ஆரம்பிப்பதற்கு உகந்த நாட்களாக திகழக் கூடியது வளர்பிறை பஞ்சமி, வளர்பிறை அஷ்டமி, வளர்பிறை வெள்ளிக்கிழமை, வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பௌர்ணமி மற்றும் கிருத்திகை நட்சத்திரம் வரக்கூடிய நாள். இந்த நாட்களில் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை இரவு 7 மணியிலிருந்து 11 மணிக்குள் செய்ய வேண்டும். வேறு எந்த நேரமும் இந்த வழிபாட்டிற்கு உகந்த நேரம் கிடையாது.

காலையிலேயே தலைக்கு குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். மாலை நேரத்தில் வாராகி அம்மனின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்திற்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் தீபம் ஏற்றுக்கொள்ளலாம். படம் இல்லாதவர்கள் புதிதாக ஒரு விளக்கை வாங்கி அதில் தீபம் ஏற்றி அந்த தீபத்தை வாராகி அம்மனாகவும் நினைத்துக் கொள்ளலாம். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும். அதில் வாழைத்தண்டு திரி, தாமரை தண்டு திரி மற்றும் பஞ்சுத் திரி இவை மூன்றையும் ஒன்றாக இணைத்து திரியாக தயார் செய்து தீபம் ஏற்றும் பொழுது அந்த தீபத்திற்கு அதீத சக்தி உண்டாகும். இந்த தீபத்தை வெறும் தரையில் வைக்காமல் ஒரு தட்டை வைத்து அதற்கு மேல் தீபம் ஏற்றுவது என்பது சிறப்பு.

- Advertisement -

வாராகி அம்மனுக்கு பூமிக்கு அடியில் விளையக்கூடிய எந்த பொருளாக இருந்தாலும் அந்த பொருளை நெய்வேத்தியமாக வைக்கலாம். அதேபோல் செவ்வாழை, மாதுளம் பழம் முத்துக்களை தேனில் சேர்த்து வைப்பது போன்றவற்றையும் வைக்கலாம். கண்டிப்பான முறையில் 11 நாட்களும் பானகம் வைக்க வேண்டும். அடுத்ததாக வாராகி அம்மனின் படத்திற்கும் வாராகி அம்மனாக பாவித்து நாம் ஏற்றக்கூடிய தீபத்திற்கும் செவ்வரளி, செம்பருத்தி, மல்லிகை, நீல நிறத்தில் இருக்கக்கூடிய சங்குப்பூ இவை நான்கில் ஏதாவது ஒரு பூவை தினமும் வைக்க வேண்டும்.

இவை அனைத்தையும் தயார் செய்து வைத்து விட்டு வாராஹி அம்மனின் படத்தை பார்த்தோ அல்லது வராகியவனாக நினைத்து நாம் ஏற்றிய தீபத்தை பார்த்தோ வாராகி அம்மனின் இந்த ஒரு மந்திரத்தை 21 முறை கூறவேண்டும். கூறி முடித்த பிறகு உங்களுடைய எந்த கஷ்டம் தீர வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அந்த கஷ்டம் தீர வேண்டும் என்று மனதார வாராஹி அம்மனிடம் வழிபாடு செய்து விட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விடுங்கள். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு 15ல் இருந்து 20 நிமிடத்திற்குள் தீபத்தை குளிர வைத்து விடலாம். தீபத்தை குளிர வைத்தபிறகு நெய்வேதியமாக வைத்த பொருட்களை வீட்டில் வைக்கக் கூடிய அனைவருக்கும் பிரசாதமாக தர வேண்டும். இந்த முறையில் தொடர்ச்சியாக 11 நாட்களும் நாம் வாராகி அம்மனிடம் ஒரே கோரிக்கையை முன்வைத்து வழிபாடு செய்யும்பொழுது அந்த துன்பம் விலகுவதை கண்கூடாக நம்மால் உணர முடியும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் குண்டலி புரவாசினி சண்டமுண்ட விநாசினி பண்டிதஸ்யமனொன்மணி வாராஹீ நமொஸ்துதே!
அஷ்டலக்ஷ்மி ஸ்வரூபிணி அஷ்ட தாரித்ரய நாசினி இஷ்ட காம ப்ரதாயினி வாராஹீ நமொஸ்துதே!”

இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை தீர்க்கும் விநாயகர் வழிபாடு

சக்தி வாய்ந்த இந்த வாராகி அம்மன் வழிபாட்டை தொடர்ச்சியாக முழுமனதோடு யார் ஒருவர் 11 நாட்கள் செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய எப்பேர்பட்ட துன்பமாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கி இன்பமான வாழ்க்கையை வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்