- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்தேங்காய் மாங்காய் துவையல்

தேங்காய் மாங்காய் துவையல்

- Advertisement -

மாங்காய் சீசன் வந்துவிட்டாலே மாங்காய் ரெசிபிகளுக்கும் பஞ்சமே இருக்காது. சுட சுட சாதத்துடன் இந்த தேங்காய் மாங்காய் துவையல் நெய் ஊற்றி பிசைந்து சாப்பிடும் பொழுது, அவ்வளவு அருமையாக இருக்கும். டேஸ்டியான தேங்காய் மாங்காய் துவையல் கிராமத்து ஸ்டைலில் எப்படி சுலபமாக நாமும் தயாரிக்கப் போகிறோம்? என்னும் சமையல் குறிப்பு சார்ந்த தகவலை தான் இந்த பதிவில் பகிர்ந்து கொள்ளப் போகிறோம்.

தேங்காய் மாங்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள் :

தேங்காய் – அரை மூடி
மாங்காய் – ஒன்று
நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – அரை ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
வரமிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

தேங்காய் மாங்காய் துவையல் செய்யும் முறை விளக்கம் :

தேங்காய் மாங்காய் சேர்த்து துவையல் செய்யும் பொழுது அதன் காம்பினேஷன் வேற லெவலில் இருக்கும். இட்லி, தோசை மட்டும் அல்லாமல் சூடான சாதத்துடன் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கக்கூடிய இந்த தேங்காய் மாங்காய் துவையல் செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு முழு இனிப்பு மாங்காய் ஒன்றை வாங்கி கழுவி சுத்தம் செய்து அதன் மேல் தோலை சீவி துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்த அதில் ஒரு வாணலியை வையுங்கள். ஒரு டீஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். பின்னர் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அரை டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து, ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி போட்டு லேசாக வதக்கி விடுங்கள். பின்னர் மூன்று வர மிளகாய்களை உங்கள் காரத்தின் அளவிற்கு ஏற்ப காம்பு நீக்கி சேர்த்து வதக்கிவிட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு அரை மூடி அளவிற்கு தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்சர் ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் தாளித்தவற்றை ஆறியதும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள மாங்காய் துண்டுகளோடு, துருவி வைத்துள்ள தேங்காயையும் சேர்த்து, தேவையான அளவிற்கு உப்பு போட்டு கொரகொரப்பாக, ரொம்பவும் நைசாக இல்லாமல் அரைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
குரு பகவானை வசியம் செய்ய மந்திரம்

அரைத்து எடுத்த இந்த தேங்காய் மாங்காய் துவையல் இப்பொழுது அட்டகாசமான ரெசிபியாக ரெடி! சூடான சாதத்துடன் நெய் விட்டு இந்த துவையலையும் சேர்த்து அப்படியே பிசைந்து சாப்பிட்டு பாருங்கள், ருசி அபாரமாக இருக்கும். துவையல் மற்ற வெரைட்டி ரைஸ் மற்றும் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட டேஸ்ட்டாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கும் பிடிக்கும். மாங்காய் சேர்த்து துவையல் செய்யும் பொழுது அது இனிப்பாகவும், கொஞ்சம் புளிப்பாகவும் ருசி வித்தியாசமாக இருக்கும். இதுவரை செய்யாதவர்கள், இதே முறையில் ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்