கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக திகழக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக இருப்பவர் தான் வாராகி அம்மன். வாராஹி அம்மனை வழிபாடு செய்பவர்களுக்கு எதிரிகளின் தொல்லை என்பதை இருக்காது என்று கூட கூறலாம். வெற்றி வாகையை தரக்கூடிய தெய்வமாக திகழக்கூடிய வாராகி அம்மனை அவளுக்குரிய திதியான பஞ்சமி திதி அன்று வழிபாடு செய்யும்பொழுது அளவில்லாத நன்மைகளை வாரி வழங்குவார். அந்த வகையில் நடக்காத காரியத்தையும் நடத்தி வைப்பதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பலருக்கும் தாங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு காரியம் மட்டும் நடைபெறாமல் தடைப்பட்டு கொண்டே இருக்கிறது என்று நினைத்து வருத்தம் அடைந்து ஒரு சில நேரங்களில் அந்த முயற்சியை கூட கைவிடம் சூழ்நிலைக்கு போய் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் வெள்ளிக்கிழமை சேர்ந்து வரக்கூடிய இந்த வளர்பிறை பஞ்சமி நாளன்று வாராகி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து அந்த காரியத்தில் வெற்றி அளிப்பார் வாராகி அம்மன்.
இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 6 மணியில் இருந்து 7:00 மணிக்குள் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் செய்யலாம் அல்லது 10 மணியில் இருந்து 12 30 மணிக்குள் இருக்கக்கூடிய ராகு காலத்தில் செய்யலாம் அல்லது மதியம் வரக்கூடிய சுக்கிரஹோரையான 1 மணியிலிருந்து 2:00 மணிக்குள் செய்யலாம். வராகி அம்மனுக்கு முன்பாக ஒரு மனை பலகை அல்லது தட்டை வைத்து அதற்கு மேல் ஒரு வாழை இலையை விரித்துக் கொள்ளுங்கள். அந்த வாழை இலைக்கு மேல் சிறிது பச்சரிசியை பரப்பி ஒரு தேங்காயை சரிசமமாக உடைத்துக் கொள்ளுங்கள். உடைத்த தேங்காயில் கண் இருக்கும் பகுதியில் மூன்று திரிகளையும் மற்ற பாதையில் இரண்டு திரி என்று போட்டு நெய் தீபம் ஏற்ற வேண்டும்.
வாராகி அம்மனுக்கு மஞ்சள் நிற பழங்கள் கற்கண்டால் செய்யப்பட்ட பிரசாதம் போன்றவற்றை செய்து வைக்க வேண்டும். இதோடு கண்டிப்பான முறையில் பாணகத்தையும் தயார் செய்து வைக்க வேண்டும். வாராகி அம்மனுக்கு மஞ்சள் நிற மலர்கள், செந்நிற மலர்கள், தாமரை, மல்லிகைப்பூ போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். ஒரு கிண்ணத்தில் 50 கிராம் விரலி மஞ்சள் வாங்கி வராகி அம்மனுக்கு முன்பாக வைத்து விடுங்கள். இப்பொழுது நாம் ஏற்றிய தேங்காய் தீபத்திற்கு முன்பாக ஒரு சொம்பு நிறைய சுத்தமான தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதன் வாய்பகுதியை மூடும் வகையில் நம்முடைய இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு வாராகி அம்மனின் வஜ்ர கோஷத்தை 111 முறை கூற வேண்டும்.
பிறகு உங்களுடைய வேண்டுதலை வாராஹி அம்மனிடம் முன்வைத்து வழிபாடு செய்ய வேண்டும். வழிபாட்டை செய்து முடித்த பிறகு நாம் கிண்ணத்தில் வைத்த விரலி மஞ்சளை மாலையாக கட்டி வாராகி அம்மனுக்கு போட வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு சொம்பில் இருக்கக்கூடிய தண்ணீரை எடுத்து வீட்டின் அனைத்து இடங்களிலும் தெளிக்க வேண்டும். மீதம் தண்ணீர் இருக்கும் பட்சத்தில் அதை மறுநாள் குளிக்கும் தண்ணீருடன் கலந்து உபயோகப்படுத்தலாம். இந்த முறையில் வளர்பிறை பஞ்சமி நாளன்று வாராகி அம்மனை நாம் வஜ்ரகோஷம் கூறி வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய வேண்டுதலை வாராகி அம்மன் நிறைவேற்றுவார்.
இதையும் படிக்கலாமே:வளர்பிறை பஞ்சமி தீப வழிபாடு
பல அற்புதமான பலன்களை தரக்கூடிய வாராகி அம்மன் வழிபாட்டை முழுமனதோடு யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்கள் நினைத்தது நினைத்தபடி நடந்தேறும். தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.