- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணம் பெருக மண்பானை கலசம்

பணம் பெருக மண்பானை கலசம்

- Advertisement -

தங்கம் மற்றும் வெள்ளி விற்பனைகளில் முதலிடம் பிடித்துள்ளவர்கள் வட மாநிலத்தவர்கள். அவர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகிறது. நம் மண்ணில் உள்ள ஸ்வர்ணங்களில் பாதியை அவர்களிடம் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பணம் பெருகவும், தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கவும் செய்யும் எளிய மண்பானை கலச பரிகாரம் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் மார்வாடிகள். நகைக் கடை, அடகு கடை போன்ற தொழில்களில் சிறந்து விளங்கும் இவர்கள் தொழில் வளர்ச்சி நல்ல முன்னேற்றத்துடன் இருக்கவும், வீட்டில் பண வரத்து பெருகவும் சில எளிய பரிகாரங்களை செய்வார்கள். மெய்ஞான பக்தியுடன் இவ்வகையான தாந்திரீக பரிகாரங்களை செய்யும் பொழுது அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.

- Advertisement -

ஒரு நல்ல முகூர்த்த நாளில் இந்த பரிகாரத்தை செய்து வையுங்கள். ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்தால் போதுமானது. ஒரு புதிய சிறிய அளவிலான மண்பானை ஒன்றை வாங்கி வையுங்கள். உங்களிடம் ஏற்கனவே சிறிய மண் கலசம் இருந்தால் அதையும் பயன்படுத்தலாம். அதை பசுவின் கோமியத்தால் கழுவ வேண்டும். கோமாதாவில் எல்லா கடவுள்களும், தேவாதி தேவர்களும் அடங்கி இருக்கிறார்கள். இந்த அனைவரின் அருளும் ஒரு சேர கிடைக்க கோமியத்தால் அந்த கலசத்தை கழுவ வேண்டும்.

பின்னர் கலசத்திற்குள் உங்களிடம் இருக்கும் சிறிய அளவிலான தங்கம் அல்லது வெள்ளி பொருள் ஒன்றை போடுங்கள். அதனுடன் பட்டை தீட்டப்படாத பச்சரிசி அல்லது கோதுமையை போட வேண்டும். அவர்களுக்கு கோதுமை பிரதான உணவு தானியம் என்பதால் கோதுமையை பயன்படுத்துவார்கள். நாம் கோதுமைக்கு பதிலாக நம்முடைய பிரதான உணவாக இருக்கக்கூடிய அரிசியை, அதிலும் பட்டை தீட்டப்படாத பச்சரிசியை சிறிதளவு போட்டு வைக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் இந்த கலசத்தை சிகப்பு நிற பட்டுத்துணியால் அதன் வாய் பகுதியை மூட வேண்டும். பிறகு அதனை வெண்ணிற பட்டு நூலினால் இறுக கட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் இதற்கு சந்தன, குங்குமம் இட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். உங்களுடைய இஷ்ட தெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பின்னர் இதை வீட்டில் அல்லது நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் வடமேற்கு மூலையில் யாருடைய கண்களுக்கும் தெரியாதவாறு வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
22-05-2025 நாளை தசமி திதி அம்மன் வழிபாடு

உங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தவிர, வேறு யாருக்கும் இந்த கலசம் இருப்பது தெரியக்கூடாது. இப்படி செய்து வைத்தால் சிறிது காலத்தில் சீக்கிரமே உங்களுடைய தொழிலில் நல்ல வளர்ச்சி காணக்கூடிய யோகம் பெறுவீர்கள் மற்றும் பணமும் உங்கள் உழைப்பால் பெருக துவங்கும் என்பது நம்பிக்கை. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வீட்டில் சேர்ந்து, சகல சௌபாக்கியங்களும் உண்டாகும் என்பது ஐதீகம். இந்த எளிய மண் பானை கலச பரிகாரத்தை செய்யும் பொழுது அன்றைய நாள் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டில் குப்பைகளோ, தூசுகளோ இல்லாமல் சுத்தபத்தமாக, நல்ல நறுமணத்துடன் மகாலட்சுமிக்கு பிடித்தபடி இருக்க வேண்டும். சாம்பிராணி புகையை போடுங்கள். பின் கலச பரிகாரத்தை செய்து வையுங்கள். ஒருமுறை செய்தாலே பணம் பெருக கூடிய யோகம் உண்டாகும். இந்த எளிய பரிகாரம் நாமும் செய்து பார்க்கலாம்.

சற்று முன்