தேவதை எண்ணாகவும் குபேர எண்ணாகவும் கருதப்படுவது தான் ஐந்து. மே மாதம் என்பது ஐந்தாவது மாதம். ஐந்தாவது மாதத்தில் வரக்கூடிய ஐந்தாம் தேதியை தான் நாம் தேவதை நாள் என்று கூறுகிறோம். அந்த நாளில் 5 மணியிலிருந்து 5:55க்குள் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும், வழிபாடாக இருந்தாலும் அதற்கு அதீத பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் நாம் செய்யக்கூடிய வேண்டுதல் விரைவிலயே நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் மே மாதம் ஐந்தாம் தேதி செய்ய வேண்டிய பிரியாணி இலை பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வேண்டுதலை நிறைவேற்றும் தேவதை நாள்
ஐந்து என்ற எண் மிகவும் ராசியான எண் என்று கூறப்படுகிறது. இந்த ராசியான எண்ணை பலரும் பல விதங்களில் பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் தேவதை நாளாக கருதக்கூடிய மே மாதம் ஐந்தாம் தேதி பிரியாணி இலையை வைத்து நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் நம்முடைய ஐந்து விதமான வேண்டுதல்களை நிறைவேற்றும் என்று கூறப்படுகிறது. அந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்பதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
இந்த பரிகாரத்தை மே மாதம் ஐந்தாம் தேதி மாலை 5 மணியிலிருந்து 5:55 மணிக்குள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நமக்கு ஒரே ஒரு கிழியாத நல்ல பிரியாணி இலை இருந்தால் போதும். அந்த பிரியாணி இலையின் முன் பக்கத்தில் 555 என்ற எண்ணை பேனாவை வைத்து எழுதிக்கொள்ளுங்கள். கருப்பு நிற பேனாவை மட்டும் தவிர்த்துக் கொள்வது நல்லது. பிறகு அந்த பிரியாணி இலையை திருப்பி அதற்குப் பின்புறத்தில் உங்களுடைய ஐந்து விதமான வேண்டுதல்களை ஒவ்வொன்றாக எழுத வேண்டும்.
பிறகு அதில் சுத்தமான புனுகை இரண்டு புறங்களிலும் தடவிக் கொள்ளுங்கள். புனுகு இல்லாத பட்சத்தில் மஞ்சளை கூட தடவிக் கொள்ளலாம். இப்பொழுது இந்த பிரியாணி இலையை நம்முடைய கைகளுக்கு நடுவே வைத்து கொண்டு நம்முடைய குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் மனதார நினைத்து கைகூப்பி வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று முழு மனதோடு வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு செய்து முடித்த பிறகு இந்த பிரியாணி இலையை எரித்து விட வேண்டும். பிரியாணி இலை முற்றிலும் எரிந்த பிறகு ஏதாவது இனிப்பை நம்முடைய வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். இப்படி பிரியாணி இலை பரிகாரத்தை மே மாதத்தின் ஐந்தாம் நாள் நாம் செய்வதன் மூலம் அதில் நாம் எழுதி இருக்கக்கூடிய ஐந்து வேண்டுதல்களும் நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகள் நம்மை வந்து சேரும்.
இதையும் படிக்கலாமே: பணக்கஷ்டத்தை நீக்கும் வளர்பிறை அஷ்டமி தூபம்
எளிமையான இந்த பிரியாணி இலை பரிகாரத்தை தேவதை நாளான மே மாதம் ஐந்தாம் தேதி முழு மனதுடனும் முழு நம்பிக்கையுடனும் செய்பவர்களுக்கு அவர்களுடைய வேண்டுதல் நிறைவேறுவதற்குரிய வாய்ப்புகளை பிரபஞ்சம் அருளும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.