- Advertisement -

வாசவி ஜெயந்தி வழிபாடு

- Advertisement -

தெய்வங்கள் பலவிதமான அவதாரங்களை எடுத்திருக்கிறார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு விதமான அவதாரத்தை எடுக்கும் பொழுது அதனால் பல விதமான நன்மைகள் ஏற்பட்டு இருக்கும். அதோடு மட்டுமல்லாமல் அவதாரமாக எடுத்த அந்த தெய்வத்தை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பலவிதமான பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் சித்திரை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை நவமி நாளன்று அவதரித்தவராக திகழ்பவர் தான் கன்னிகா பரமேஸ்வரி தாயார். அந்த தாயார் அவதரித்த தினத்தை தான் வாசவி ஜெயந்தி என்று கூறுகிறோம்.

பராசக்தி தாயார் கன்னிகா பரமேஸ்வரியாக அவதரித்து இந்த உலகத்தில் இருக்கக்கூடிய மக்கள் அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக அக்னியில் தன்னைத்தானே சமர்ப்பணம் செய்து கொண்டவர் என்று புராணங்கள் கூறுகிறது. இந்த வாசவி ஜெயந்தியை தெலுங்கு மொழி பேசக்கூடியவர்கள் கொண்டாடுவார்கள். மேலும் கன்னிகா பரமேஸ்வரி தாயாரை நாம் முழுமனதோடு நினைத்து வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வேலை மற்றும் தொழிலில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் வாசவி ஜெயந்தி அன்று கன்னிகா பரமேஸ்வரி தாயாரை வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

கன்னிகா பரமேஸ்வரி தாயார் வழிபாடு

இந்த வழிபாட்டை செய்வதற்கு வீட்டில் கன்னிகா பரமேஸ்வரி தாயாரின் படம் இருக்க வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை. கண்டிப்பான முறையில் நம் அனைவருடைய வீட்டு பூஜை அறையிலும் அம்பிகையின் படம் என்பது இருக்கும். அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அந்த படத்திற்கு முன்பாக ஒரே ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அந்த நெய் தீபத்திற்கு முன்பாக அமர்ந்து அந்த தீபத்தில் கன்னிகா பரமேஸ்வரி தாயார் இருப்பது போல பாவித்துக்கொண்டு அவர்களின் பின்வரும் இந்த மந்திரத்தை 27 முறை அல்லது 108 முறை கூற வேண்டும்.

பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விடலாம். இந்த வழிபாட்டிற்கு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைப்பது என்பது மிகவும் சிறப்பு. இந்த முறையில் வாசவி ஜெயந்தி நாளன்று கன்னிகா பரமேஸ்வரி தாயாரை நாம் வழிபாடு செய்தோம் என்றால் நாம் செய்யக்கூடிய வேலை மற்றும் தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும். அதில் சிறந்து விளங்குவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். அதன் மூலம் செல்வ வளமும் அதிகரிக்கும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் கன்னிகா பரமேஸ்வரி தாயே நம”

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் 11 ரூபாய் பரிகாரம்

எளிமையான வழிப்பாடாக திகழக்கூடிய இந்த வாசவி ஜெயந்தி வழிபாட்டை முழுமனதோடு அம்பிகையை நினைத்து யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்வில் செல்வ வளத்திற்கு எந்த வித குறையும் இருக்காது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்