ஒருவருடைய வாழ்க்கையை மாற்றும் அளவிற்கு பிரச்சனை மிகுந்த ஒன்றாக திகழ்வதுதான் கடன். கடன் என்ற ஒன்றை நம்முடைய வாழ்நாளில் ஒருமுறை மட்டும் நாம் வாங்கிவிட்டோம் என்றால் நம்முடைய வாழ்நாள் முழுவதும் அதை தீர்ப்பதற்குரிய வழியை தேடிக்கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிடும். நமக்கு மட்டுமல்லாமல் நம் குடும்பத்தை சார்ந்த அனைவருக்கும் இந்த கடனால் பல விதமான பிரச்சினைகள் ஏற்படும். அப்படிப்பட்ட கடனை தீர்ப்பதற்கு செவ்வாய்க்கிழமை அன்று 11 ரூபாயை வைத்து செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கடன் தீர்க்கும் 11 ரூபாய் பரிகாரம்
கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒவ்வொருவரும் தங்களுடைய இக்கட்டான சூழ்நிலையில் வேறு வழியே இல்லாமல் பிறரிடம் இருந்து கடன் வாங்கி விடுவார்கள். ஒரு சிலருக்கு கடன் வாங்கிய நாளிலிருந்து படிப்படியாக அந்த கடன் தொகையும் அதிகரித்து கொண்டே செல்லும். ஏதாவது ஒரு காரணத்திற்காக பணத்தை கடனாக வாங்கிக் கொண்டே இருப்பார்கள். வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்கு பலவிதமான வழிபாடுகளும் பரிகாரங்களும் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றான 11 ரூபாய் பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று காலையிலேயே செய்து விட வேண்டும். ஒருவேளை காலை செய்வதற்கு நேரமில்லை என்று நினைப்பவர்கள் மாலை திரும்ப குளித்துவிட்டு இந்த பரிகாரத்தை செய்யலாம். வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக ஒரு ரோஸ் நிறத்தில் இருக்கக்கூடிய துணியை புதிதாக வாங்கி விரித்துக் கொள்ளுங்கள். அதில் 11 ஒரு ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். பிறகு அதில் சிறிதளவு மஞ்சள் மற்றும் சிறிதளவு குங்குமத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.
கடைசியாக இதனுடன் அக்ய புஷ்பத்தை சேர்க்க வேண்டும். அக்ய புஷ்பம் என்பது சூரிய சக்தி அதிகமாக இருக்கக்கூடிய பூ. இதை நாம் வெள்ளெருக்கு பூ என்று கூறுவது உண்டு. ஒரே ஒரு வெள்ளருக்கு பூவை 11 ரூபாயுடன் சேர்த்து வைத்து அதை மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். பிறகு இதை நம்முடைய வீட்டு பூஜை அறையில் வைத்து விட வேண்டும். தினமும் காலையிலும், மாலையிலும் தீபமேற்றி வழிபாடு செய்யும்பொழுதும் இதற்கு ஏதாவது ஒரு சிவப்பு நிற மலரை வைத்து ஊதுபத்தி சாம்பிராணி தூபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
எப்பொழுது உங்களுடைய கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீருகிறதோ அப்பொழுது இந்த மூட்டையில் இருக்கக்கூடிய ஒரு ரூபாய் நாணயங்களை அருகில் இருக்கக்கூடிய மகாலட்சுமி ஆலய உண்டியலில் சேர்க்கலாம் அல்லது முருகன் ஆலய உண்டியலில் சேர்க்கலாம். துணி மற்றும் மலரை கால் படாத இடத்திலோ அல்லது செடியின் வேர் பகுதியிலோ போட்டு விட வேண்டும் அல்லது ஓடுகின்ற நீரில் போட்டு விடலாம்.
இதையும் படிக்கலாமே:செல்வ வளம் பெருக விநாயகர் வழிபாடு
எளிமையான இந்த 11 ரூபாய் பரிகாரத்தை முழுமனதோடு செவ்வாய்க்கிழமை செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்களுடைய கடன் பிரச்சினை தீர்வதற்குரிய வழி கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.