- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalரோஜா செடியில் அதிக பூ பூக்க

ரோஜா செடியில் அதிக பூ பூக்க

- Advertisement -

அனைவரும் விரும்பும் ரோஜா செடியை வீட்டில் வளர்ப்பவர்கள், அதில் அதிகம் பூக்கள் பூக்கவில்லை என்று வருத்தம் கொள்ள வேண்டாம். ஒரே செடியில் கொத்து கொத்தாக நிறைய பூக்கள் பூப்பதற்கு, தேவையான சத்துக்களை அதற்கு கொடுத்தால் போதும். ரோஜா செடியை பொறுத்தவரை வெஜிடேரியனை விட, நான்வெஜிடேரியன் உரத்தை கொடுத்து பாருங்கள், கிள்ள கிள்ள பூக்களை கொடுத்துக் கொண்டே இருக்கும். ரோஜா செடியில் அதிகம் பூக்கள் பூக்க, எளிதான உரம் பற்றிய தோட்டக்குறிப்பு சார்ந்த தகவலை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

ரோஜா செடியை பொருத்தமட்டிலும், அதிக சூரிய ஒளியில் வைப்பது அவசியமாகும். குறைந்தது ஆறு மணி நேரம் நல்ல சூரிய ஒளியில் ரோஜா செடியை வைத்தால் நன்கு வளரும். ரோஜா செடியின் மண்ணின் சத்து ஊட்டமாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்துள்ள கலவைகளை உரமாக கொடுத்து வந்தால், செடிகள் அதிகமான பூக்களையும், பெரிது பெரிதான நல்ல வர்ணங்களுடன் கூடிய பூக்களையும் கொடுக்கும்.

- Advertisement -

மண் கெட்டியாக இல்லாமல் ஆக்சிஜன் கிடைக்கும்படி நன்கு தளர்வாக இருக்க வேண்டும். தண்ணீர் தேங்கி இருக்குமாறு தொட்டியை வைத்து கொள்ளக்கூடாது. மண்ணின் பதம் ஈரமாக இருக்க வேண்டுமே தவிர, தண்ணீர் தேங்க கூடாது. நீர் வற்ற வற்ற மண்ணை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். இது சாதாரணமாக ரோஜா செடிக்கு தேவையான குறிப்புகள் ஆகும்.

மண்ணின் சத்தை அதிகரிப்பதற்கு நம் வீட்டில் தேவை இல்லை என்று தூக்கி எறியக்கூடிய, இந்த பொருட்களை பயன்படுத்தி உரம் தயாரித்து வைக்கலாம். ஒரு முறை தயாரித்தால் ஆறு மாதங்கள் வரை அந்த உரத்தை பயன்படுத்த வாய்ப்பு உண்டு. முதலில் இதற்கு முட்டை ஓடுகளை சேகரித்து வையுங்கள். சமையலுக்கு முட்டையை பயன்படுத்திவிட்டு ஓடுகளை தூக்கி எறிய வேண்டாம். அதேபோல மீன் சமைக்கும் பொழுது, மீனுடைய முள்ளை தனியாக எடுத்து வையுங்கள்.

- Advertisement -

இறால் உரிக்கும் பொழுது, அதனுடைய தோலையும் எடுத்து வையுங்கள். நண்டு ஓடு, எலும்புகள் போன்றவற்றையும் எடுத்து வையுங்கள். இவற்றையெல்லாம் நாம் தூக்கி போடாமல், ஒரு முறை நன்கு கழுவி விட்டு பின்பு நல்ல வெயிலில் சில நாட்கள் வரை காய வைத்து, பவுடர் போல அரைத்து வைத்துக் கொள்ளலாம். இந்த பவுடர் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொண்டு, அதனுடன் ஆட்டுப்புழுக்கை உரம் அல்லது மண்புழு உரம் ஆகியவற்றுடன் சேர்த்து கலந்து ரோஜா செடியின் அடிப்பகுதியில் தூவி விட்டு, தண்ணீர் தெளித்து வர மண்ணிற்கு நல்ல சத்து கிடைத்து, வேருக்கு ஊட்டமளித்து ஒவ்வொரு தண்டிலும் நிறைய பூக்களை பூத்து தள்ளும்.

இதையும் படிக்கலாமே:
மீனாட்சி திருக்கல்யாணம் அன்று செய்ய வேண்டிய தானம்

வெறும் முட்டை ஓடு, வெங்காயத்தோல் மற்றும் வாழைப்பழத் தோல், காய்கறி கழிவுகள் போன்றவற்றையும் நீங்கள் உரமாக்கி மண்ணிற்கு ஊட்டச்சத்துக் கொடுக்கலாம். ஆனால் இந்த முறை ரொம்பவும் சுலபமானதாக இருக்கும். இதில் ஏராளமான கால்சியம் சத்துக்களும், பொட்டாசியமும், புரதங்களும் நிறைந்துள்ளன. மண்ணின் ஆற்றலை அதிகரித்து, தாவரத்தை ஆரோக்கியமாகவும், அபரிமிதமான வளர்ச்சியை கொடுக்கக் கூடியதாகவும் மாற்றும் அற்புதமான உரம். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, உங்க வீட்டு ரோஜா செடிகளும் அதிகம் பூக்கள் பூத்து உங்களை ஆச்சரியப்படுத்தும்.

சற்று முன்