திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட கூடிய ஒரு விஷயம். ஆனால், ஒரு சிலருக்கு இந்த காலத்தில், திருமணம் செய்வது என்பது பேஷனாக மாறிவிட்டது. திருமணமும் ஒரு விளையாட்டாக மாறிவிட்டது. திருமணத்திற்குப் பிறகு ஒரு சில மாதங்களிலேயே விவாகரத்து கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் இல்லை, கணவன் மனைவி பிரிந்து வாழ்வது, இது போன்ற பிரச்சனைகள் வந்து விடுகிறது.
இந்த காலகட்டத்தில் கணவன் மனைவி பிரிவு மிகவும் ஒரு சர்வ சாதாரணமான விஷயமாக பார்க்கப்படுகிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் தீர, கணவன் மனைவி ஆயுள் முழுவதும் ஒன்றாக வாழ, மனைவிக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் பெற, நாளைய தினம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
திருமண வயதில் இருக்கும் உங்களுடைய பெண் குழந்தைக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். நாளைய தினம் மே மாதம் 8ஆம் தேதி வியாழக்கிழமை மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறவிருக்கிறது. மதுரை மீனாட்சியம்மனுக்கு நாளைய தினம் கல்யாணம். மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம் என்றும் இதை சொல்லலாம்.
கோடான கோடி தேவர்கள் ஆசீர்வாதம் செய்ய, இந்த திருக்கல்யாணம், பல லட்ச பக்தர்களுக்கு முன்னால் நடக்கும். இந்த நாளில் நாம் செய்யக்கூடிய பரிகாரம், வேண்டுதல்களும் நம்முடைய குடும்பத்திற்கு பல வகையில் நன்மையை கொடுக்கும். அதிலும் குறிப்பாக கணவன் மனைவி ஒற்றுமைக்கு நாளைய தினம் கட்டாயம் மீனாட்சி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும்.
மீனாட்சி திருக்கல்யாணம் பரிகாரம்
நல்ல தாழம்பூ குங்குமம் வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய வசதிக்கு ஏற்ப இந்த குங்குமத்தை நீங்கள் 11 பேருக்கு தானம் கொடுக்கலாம், அல்லது 21 பேர், 51 பேருக்கு கூட தானம் கொடுக்கலாம். அது உங்களுடைய விருப்பம். குறைந்தபட்சம் ஐந்து பேருக்காவது நாளைய தினம் நீங்கள் தாழம்பூ குங்குமத்தை வாங்கி அம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று, அம்மன் பாதத்தில் அந்த குங்குமத்தை வைத்து, அர்ச்சனை செய்து மீண்டும் வாங்கிக் கொள்ளுங்கள். கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு இந்த குங்குமத்தை உங்கள் கையால் தானம் கொடுக்கும் போது, கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.
மீனாட்சி மந்திரம்
“ஓம் க்லீம் மீனாட்சி தாயே போற்றி ஓம்” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி குங்குமத்தை கையில் வைத்து வேண்டிக்கொண்டு, வேண்டுதலை மீனாட்சியம்மனிடம் சொல்லி இந்த குங்குமத்தை தானம் செய்து பாருங்கள். நிச்சயமாக உங்கள் வேண்டுதல் பலிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த விரிசல் சரியாக வேண்டும் என்று, மனைவி இந்த பரிகாரத்தை செய்யலாம்.
உங்களுடைய பெண் பிள்ளைக்கு திருமணம் நடக்க வேண்டும் என்றும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு கணவன் தன்னுடைய மனைவியோடு சேர வேண்டும் என்று நினைத்தும் குங்குமத்தை வாங்கி ஒரு அம்மன் கோவிலுக்கு தானமாக கொடுக்கலாம் தவறு கிடையாது.
இதையும் படிக்கலாமே: 8-5-2025 பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர பரிகாரம்
முடிந்தால் திருமணமாகாத உங்களுடைய பெண்ணின் கையால் இந்த குங்குமத்தை தானம் கொடுப்பது சிறப்பு. சீக்கிரம் உங்களுடைய பெண்ணுக்கு நல்ல கணவன், அமைய இது ஒரு சிறப்பான பரிகாரம். நாளைய தினம் இந்த குறிப்பிட்ட நேரத்தில் தான் இந்த தானத்தை செய்ய வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் எந்த அம்மன் கோவிலுக்கு சென்று வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யுங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.