“மனைவி அமைவதெல்லாம், இறைவன் கொடுத்த வரம்” என்று சும்மாவா சொன்னார்கள்? ஆண்கள் பொதுவாகவே மந்த புத்திக்காரர்கள். வயது ஆக ஆக தான் அவர்களுடைய அனுபவத்தின் மூலம் பக்குவத்தையும், முதிர்ச்சியையும் பெறுவார்கள். அதுவரை பொறுமையுடன் இருந்து, சகிப்புடன் சில தியாகங்களை செய்யும் மனைவிகள் எதிர்காலத்தில் சிறந்த கணவன் மனைவிகளாக, நல்ல தம்பதிகளாக இருப்பார்கள். இப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலியான கணவன்கள், எந்த ராசியில் இருக்கும் மனைவியை பெற்றிருப்பார்கள்? என்னும் ஜோதிடம் சார்ந்த சுவாரசியமான ரகசியத்தை தான் இப்பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
திருமணமான புதிதில் எல்லா தம்பதிகளுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அந்தக் கருத்து வேறுபாடுகள் தம்பதிகளுக்குள் பிரச்சனைகளை உண்டு பண்ணும். இதனை எதிர்கொள்ள முடியாமல் இன்றைய தலைமுறையினர் தவறான முடிவுகளை சீக்கிரமாகவே எடுக்கின்றனர். புத்திசாலித்தனமும், பொறுமையும் ஒரு மனைவிக்கு வேண்டும்.
உங்கள் கண்முன் சிறந்த தம்பதிகளாக தெரியும் எல்லா கணவனும், மனைவியும் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு தான் வந்திருப்பார்கள். ஒரே ஒரு முறை உங்கள் கணவனை நீங்கள் முதலில் புரிந்து கொண்டு, உங்களை அவருக்கு எப்படி புரிய வைப்பது? என்பதை சிறந்த வாழ்க்கை தேர்வாக எடுத்துக் கொண்டு நீங்கள் போராடி வென்று காட்டினால் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் நீங்கள் இனிமையாக பயணித்து முடிக்கலாம்.
மேஷ ராசியில் பிறந்த பெண்களை மனைவியாக பெற்ற கணவன்மார்கள் பாக்கியசாலிகள் என்று ஜோதிடம் கூறுகிறது. மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு மனப்பக்குவம் அதிகமாக இருக்கும். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எந்த முடிவுகளையும் அவர்கள் எடுப்பதில்லை. பொறுப்புணர்வும், சகிப்புத்தன்மையும் அவர்களிடம் கூடுதலாக இருக்கும், இதனால் கணவனுக்கு நல்ல அதிர்ஷ்டம் இருக்கும்.
தனுசு ராசியில் பிறந்த பெண்களை மனைவியாக பெற்ற கணவன்மார்களும் அதிர்ஷ்டசாலிகள் தான். இவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும், அதனை நிதானமாக கையாண்டு வெற்றி கொள்வார்கள். இவர்களை மனைவியாக பெற்ற நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். சிம்ம ராசியில் பிறந்த பெண்களை மனைவியாக பெற்ற கணவன்களும் பேரதிர்ஷ்டசாலிகள். உங்கள் மனைவி உங்களை எவ்வளவு திட்டினாலும், உங்கள் மீது பேரன்பு கொண்டிருப்பார்கள். அவர்களின் அன்பால் உங்களை வென்று காட்ட முயற்சி செய்வார்கள். நீங்கள் அவர்களை எவ்வளவு உதாசீனப்படுத்தினாலும், அவர்கள் உங்களுக்கு தேவையானவைகளை செய்வதில் குறை வைக்க மாட்டார்கள்.
தனுசு ராசியில் பிறந்த பெண்களை மனைவியாக கொண்ட கணவன்களும் பாக்கியவான்கள். பெரிய பெரிய பிரச்சனைகளை கூட, சுலபமாக கையாள்வார்கள். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல மாட்டார்கள். துலாம் ராசியில் பிறந்த பெண்களை மனைவியாக கொண்ட கணவன்களும் கொடுத்து வைத்தவர்களாக இருக்க வேண்டும். நீதியின் பக்கம் நிற்கும் உங்கள் மனைவியின் மீது உங்களுக்கு கோபம் இருந்தாலும், அவர்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தால், அவர்களை விட ஒரு சிறந்த தேவதை உங்கள் வாழ்க்கையில் யாரும் இருக்க முடியாது.
இதையும் படிக்கலாமே:
முடி வளர வெந்தய எண்ணெய்
விருச்சிக ராசியில் பிறந்த பெண்களை மனைவியாக கொண்ட கணவன்களும் தவம் செய்தவர்களாக இருக்க வேண்டும். உங்கள் மனைவியின் ராசிக்கு குடும்பத்தை அனுசரித்து செல்லும் குணம் இருக்கும். நீங்கள் அவர்களை விட்டுக் கொடுக்காமல் மட்டும் இருந்து பாருங்கள், வாழ்க்கையில் உங்களுக்கு ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் அவர்கள் அள்ளிக் கொடுப்பார்கள். உங்களுக்கெனவே வாழும் உங்கள் மனைவி, உங்களிடம் எதிர்பார்ப்பது பணமோ, பொருளோ அல்ல! அரவணைப்பையும், மரியாதையையும், அன்பையும் மட்டுமே ஆகும் என்பதை புரிந்து கொண்டால் பூலோக வாழ்க்கையே உங்களுக்கு சொர்க்கமாக மாறும். இது எந்த ராசியில் பிறந்த பெண்களை மனைவியாக அடைந்த கணவர்களும், புரிந்து கொள்ள வேண்டியது!