தலைமுடி வளர்வதற்கு ஏதேதோ எண்ணெய்களை வாங்கி உபயோகப்படுத்துவதற்கு பதிலாக, நம் பாரம்பரிய முறைப்படி செய்யக்கூடிய இந்த வெந்தய எண்ணெயை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க, நிச்சயம் அசந்து போகக் கூடிய அளவில் நல்ல ரிசல்ட்டை பெறுவீர்கள். வெந்தயத்தில் குளிர்ச்சி தன்மையும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் குணநலன்களும் இருப்பதால் அதனை தலைமுடி வளர்வதற்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம்? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு சார்ந்த பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
வெந்தயத்தில் இருக்கும் நிக்கோட்டினிக் அமிலம், தலைமுடியின் வேர்களை வலுவாக உதவுகிறது. ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இதில் இருப்பதால் தலையில் உண்டாகக் கூடிய பாக்டீரியா, பங்கஸ் போன்ற பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். எரிச்சல், அரிப்பு, வறட்சி போன்ற தொந்தரவுகளை நீக்கும். குளிர்ச்சியுடன், ஈரப்பதத்துடனும், ஆரோக்கியமாகவும் நம் தலைமுடியை வைத்துக் கொள்ளும்.
வெந்தய எண்ணெய் செய்ய தேவையான பொருட்கள் :
வெந்தயம் – 2 மேசை கரண்டி
தேங்காய் எண்ணெய் – 1 கப்
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் – 7
வெந்தய எண்ணெய் செய்முறை விளக்கம் :
முதலில் இந்த எண்ணெயை தயாரிக்க தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஏழு சின்ன வெங்காயத்தை தோலுரித்து கழுவி நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெயை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் சூடேறியதும் ரெண்டு மேஜை கரண்டி அளவிற்கு வெந்தயத்தை போடுங்கள். வெந்தயத்தை அப்படியே போடுவதை விட, ஒரு நிமிடம் லேசாக வாணலியில் வறுத்து பவுடர் செய்து தேங்காய் எண்ணெயுடன் சேர்ப்பதும் நல்லது, சீக்கிரம் எண்ணெயில் ஊறும்.
இதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சை கருவேப்பிலையை பிரஷ்சாக எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து ஃபேன் காற்றில் காய வைத்து எடுத்து பயன்படுத்துங்கள். வெந்தயத்தை போட்டதும் இந்த கருவேப்பிலை இலைகளையும் போடுங்கள். பின்னர் காய வைத்துள்ள வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். மிதமான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும். எண்ணெய் நிறம் மாறி வாசனை வரும் வரை சூடாக்கி, பின்பு நன்கு ஆறிய பின் வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும்.
இதையும் படிக்கலாமே:
நெகட்டிவ் எனர்ஜி விலக சித்ரா பௌர்ணமி பரிகாரம்
வாரத்திற்கு 2–3 முறை தலைமுடியில் ஸ்கேல்ப் பகுதியில் நன்கு மசாஜ் செய்து, 1–2 மணி நேரம் கழித்து சுத்தமான ஷாம்பூவால் கழுவவும். ஷாம்பூ பயன்படுத்துவதற்கு பதிலாக அதையும் வெந்தயத்தை வைத்தே தயார் செய்யலாம். ரெண்டு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஒரு பவுலில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். தலையை அலசும் முந்தைய நாள் இரவு முழுவதும் ஊற வைத்த பின்பு, மறுநாள் நீங்கள் நீரில் ஊறிய அந்த வெந்தயத்தை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை பயன்படுத்தி தலையை அலசினால், நல்ல நுரை வரும். மேலும் முடிக்கு இயற்கையான கண்டிஷனிங் செய்தது போல பளபளப்பும் கிடைக்கும்.