மே மாதம் ஒன்பதாம் தேதி வெள்ளிக்கிழமை அஸ்த நட்சத்திரம் வரக்கூடிய அற்புதமான ஒரு நாளாக திகழ்கிறது. அஸ்தம் நட்சத்திரம் என்பது சந்திர பகவானுக்குரிய நட்சத்திரமாக கருதப்படுகிறது. சந்திர பகவானும் மகாலட்சுமி தாயாரும் உடன் பிறந்தவர்கள் ஆகவும், சந்திர பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கக்கூடிய நாட்களில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற முடியும் என்றும் புராணங்களில் கூறப்பட்டு இருக்கிறது. அதனால் நாளைய தினத்தை மறவாமல் நம் பயன்படுத்தும் பொழுது சந்திரனின் அருளாலும் மகாலட்சுமியின் அருளாலும் பணவரவிற்கு எந்தவித பஞ்சமும் ஏற்படாது. அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கேது பகவானால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்களுடைய வாழ்க்கையில் பணவரவில் பலவிதமான தடைகளை அனுபவிப்பார்கள். எந்த ஒரு முயற்சியை செய்தாலும் அதில் தடைகள் வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்கள் கேது பெயர்ச்சிக்கு முன்பாக அதாவது கேது பகவான் ரிஷப ராசியில் இருக்கும் பொழுதே இந்த ஒரு வழிபாட்டை செய்து விட்டால் கேதுவால் ஏற்படக்கூடிய எப்பேர்பட்ட தடைகளும் தவிடு பொடி ஆகும்.
ரிஷப ராசி என்பது சுக்கிர பகவானுக்குரிய ராசியாக கருதப்படுகிறது. கேது பகவான் ரிஷப ராசியில் இருக்கும் பொழுது வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய அஸ்த நட்சத்திரம் நாளில் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் வரக்கூடிய சுக்கிர கோரையில் இந்த வழிபாட்டை நாம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு கண்டிப்பான முறையில் சந்திரனின் அம்சம் கொண்ட முத்து வேண்டும். ஒரே ஒரு முத்து இருந்தால் கூட போதும். அந்த முத்தை மகாலட்சுமியாக பாவித்து நாம் வழிபாடு செய்ய வேண்டும். ஒரு வாழையிலையை பூஜை அறையில் விரித்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி, சிறிதளவு மஞ்சள், சிறிதளவு நெய் மற்றும் சிறிதளவு பன்னீர் ஊற்றி நன்றாக கலந்து அட்சதையாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த அட்சதைக்கு மேல் ஒரு வில்வ இலையை வைக்க வேண்டும். அந்த வில்வ இலைக்கு மேல் ஒரே ஒரு தாமரை இதழை வைக்க வேண்டும். அந்த இதழுக்கு மேல் நாம் வாங்கி வைத்திருக்கும் முத்தை வைக்க வேண்டும். இப்படி வைத்து முடித்த பிறகு மல்லிகை பூ அல்லது செண்பகப் பூவால் பின்வரும் இந்த சித்தி லட்சுமி மந்திரத்தை 108 முறை கூறி அந்த முத்துவிற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்த பிறகு நெய்வேத்தியமாக வெற்றிலை பாக்கு, மூன்று மாதுளை பழத்தை வைத்துவிட்டு கூடுதலாக பால் பாயாசம் அல்லது ரவை கேசரி இவை இரண்டில் ஏதாவது ஒன்றை செய்து வைத்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.
வழிபாட்டை நிறைவு செய்த பிறகு நாம் மகாலட்சுமியாக பாவித்த அந்த முத்தை எடுத்து நம்முடைய பையில் வைத்துக்கொள்ள வேண்டும். இது எப்பொழுதும் நம்முடனே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த முத்து நம்முடனே இருப்பதன் மூலம் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையும் அதன் மூலம் பணவரவும் அதிகரிக்கும்.
சித்தி லட்சுமி மந்திரம்
“ஓம் ஐம் க்லீம் சௌம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் நமோ பகவதி மாதங்கீஸ்வரி ஸர்வராஜ வஸங்கரி சர்வமுக ரஞ்சினி ஸர்வஸ்திரீ புருஷ வசங்கரி சர்வ துஷ்ட ம்ருக வசங்கரி ஸர்வ லோக வசங்கரி ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஐம் ஓம்”
இதையும் படிக்கலாமே: சாதம் வடிக்கும் சாஸ்திரம்
கேது பகவான் ரிஷப ராசியில் இருக்கும் பொழுது வரக்கூடிய அஸ்த நட்சத்திரத்துடன் கூடிய வெள்ளிக்கிழமையை நாம் தவறவிட்டோம் என்றால் திரும்பவும் 12 வருடங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதனால் மகாலட்சுமி மற்றும் சந்திர பகவானின் அருளை பெற்று கேதுவால் ஏற்படக்கூடிய தடைகளில் இருந்து வெளியில் வருவதற்கு இந்த அற்புதமான வழிபாட்டை முழு மனதுடன் செய்து பலன் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.