10-05-2025 இன்று வெகு நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் சனி மகா பிரதோஷம். இந்த மே மாதத்தில் ஒரு சனி மகா பிரதோஷம் அல்ல, இரண்டு சனி மகா பிரதோஷங்கள் வரவிருக்கிறது. வரும் மே 24ஆம் தேதியும் சனி மகா பிரதோஷம். ஆக இந்த இரண்டு பிரதோஷ நாளில், சிவபெருமானை வழிபாடு செய்துவிட்டால் போதும். நம்முடைய துன்பங்கள் எல்லாம் ஒரு நொடிப் பொழுதில் காணாமல் போய்விடும். அதிலும் சனி பகவானால் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள், இன்றைய தினம் கட்டாயம் ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும்.
ஏழரை சனி கண்டக சனி பாத சனி இதுபோல எந்த சனி பகவானால் உங்களுக்கு ஜாதக கட்டத்தில் தோஷம் இருந்தாலும் அவர்கள் இன்று பிரதோஷ நேரத்தில் சிவன் கோவிலில் போய் சிறிது நேரம் அமர்ந்து வந்தாலே போதும் துன்பங்கள் உங்களை நெருங்காது.
தீராத கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்களும் இன்று ஈசனை வழிபாடு செய்ய வேண்டும். தீரா கடன் சுமையிலிருந்து விடுபட இன்றைய தினம் பிரதோஷ நேரத்தில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
கடன் தீர்க்கும் சனி மகா பிரதோஷ பரிகாரம்
இன்று சனி மகா பிரதோஷம். இன்று மாலை பிரதோஷ நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு 9 மிளகு தேவை. உங்கள் வீட்டு பக்கத்தில் சிவன் கோவிலில் இருந்தால், அந்த கோவிலில் கூட்டம் இல்லாத அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள்.
உள்ளங்கைகளில் ஒரு வில்வ இலை மேலே 9 மிளகுகளை வைத்து, உள்ளங்கைகளில் வைத்து மூடிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையை கஷ்டப்படுத்தும் கடன் என்னும் கெட்ட சக்தி உங்களை விட்டு விலக வேண்டும் என்று ஈசனை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு “ஓம் நமோ பகவதே ருத்ரே” இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி, கையில் இருக்கும் வில்வ இலையையும் மிளகையும் அப்படியே உங்கள் தலையை 9 முறை சுற்றி, அந்த கோவிலில் ஏதாவது ஒரு மரத்தடியில் போட்டு விட்டு வர வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம்.
கோவிலுக்கு செல்பவர்கள் இதை கோவிலில் அமர்ந்து செய்யலாம். நீங்கள் வீட்டில் இருக்கிறீர்கள், பிரதோஷ நேரத்தில் வீட்டில் சிவ வழிபாடு செய்பவர்களாக இருந்தாலும், இதே போல வழிபாட்டை வீட்டில் செய்யலாம். கையில் இருக்கும் வில்வ இலையையும் மிளகையும் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் செடி கொடிகளுக்கு கீழே போட்டு விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: தோஷங்களையும் எதிர்மறை சக்திகளை நீக்கும் சனி பிரதோஷ வழிபாடு
எளிமையான இந்த பரிகாரத்தை சனி மகா பிரதோஷமான இன்று, பிரதோஷ நேரத்தில் செய்பவர்கள் வாழ்க்கையில் இருக்கும் கடன் காணாமல் போய்விடும். உங்களுடைய கடன் சுமையை குறைக்க அந்த சிவபெருமான் பொறுப்பேற்றுக்கொள்வார் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.