- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதோஷங்களையும் எதிர்மறை சக்திகளை நீக்கும் சனி பிரதோஷ வழிபாடு

தோஷங்களையும் எதிர்மறை சக்திகளை நீக்கும் சனி பிரதோஷ வழிபாடு

- Advertisement -

நம்மிடம் இருக்கக்கூடிய கர்ம வினைகளை அழிக்கும் ஆற்றல் மிகுந்த தெய்வமாக திகழ்பவர் சிவபெருமான். அதனால்தான் சிவபெருமானை முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு அதிக அளவில் சோதனைகள் வரும் என்று கூறப்படுகிறது. அந்த சோதனைகளின் மூலம் நம்முடைய கர்ம வினைகளை அவர் நீக்கி மறுபிறப்பில்லா மோட்சத்தை அருள்வார் என்றும் சிவகதி அடையச் செய்வார் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கர்ம வினைகளை நீக்கக்கூடிய சிவபெருமானுக்குரிய அற்புதமான நாளாக தான் சனி பிரதோஷம் திகழ்கிறது. அன்றைய நாளில் எந்த மரத்தை வழிபட்டால் நம்மிடம் இருக்கக்கூடிய கெட்ட சக்திகள் அனைத்தும் விலகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

தோஷங்களையும் எதிர்மறை சக்திகளை நீக்கும் வழிபாடு

ஒருவர் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் சரி அந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்றால் அவரிடம் நல்ல ஆற்றல்களும், நல்ல சக்திகளும் இருக்க வேண்டும். மேலும் எந்தவிதமான தோஷங்களும் இருக்கக் கூடாது. அதோடு மட்டுமல்லாமல் கண் திருஷ்டி போன்ற எதிர்மறை ஆற்றல்கள் இல்லாமல் இருந்தால்தான் அவருடைய வாழ்க்கையில் அவரால் வெற்றியைத் பெற முடியும். இவை அனைத்தையும் நீக்குவதற்கு செய்ய வேண்டிய ஒரு அற்புதமான விருட்ச வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இயற்கையை தெய்வமாக நினைத்து வழிபாடு செய்யக்கூடியவர்களாக தான் நம்முடைய இந்து சமுதாயத்தை சேர்ந்த மக்கள் திகழ்கிறார்கள். விலங்குகளை தெய்வமாக பாவித்து வழிபாடு செய்வதும் மரங்களை தெய்வமாக பாவித்து வழிபாடு செய்வதும் இந்து சமயத்தில்தான் இருக்கிறது. அந்த வகையில் ஆன்மீக ரீதியாக தெய்வ சக்தி நிறைந்த மரங்கள் பல இருக்கின்றன. அந்த மரங்களை நாம் முழுமனதோடு வழிபாடு செய்யும்பொழுது அதனால் நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும். அந்த வகையில் சனி மகா பிரதோஷ நாளன்று சிவபெருமானை நினைத்து நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான மர வழிபாடு இருக்கிறது.

மே மாதம் பத்தாம் தேதி சனிக்கிழமை அன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துக் கொள்ளுங்கள். பிறகு அருகில் நெல்லி மரம் எங்கு இருக்கிறது? என்பதை கண்டறிந்து கையில் வில்வ இலைகளுடன் அந்த மரத்தடிக்கு செல்ல வேண்டும். இயன்றவர்கள் அங்கே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து சிவபெருமானை முழுமனதோடு நம்பி “சிவ சிவ சிவாய நம” என்னும் மந்திரத்தை கூறி வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அந்த நெல்லி மரத்தை தொட்டு வணங்கிவிட்டு வீடு திரும்ப வேண்டும்.

- Advertisement -

இப்படி சனி பிரதோஷ நாளன்று நெல்லி மரத்தை வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யும்பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் தோஷங்களும் விலகும். எந்த நெல்லி மரமாக இருந்தாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தீபமேற்ற இயலாது என்பவர்கள் வில்வ இலைகளை மட்டும் சமர்ப்பணம் செய்து நெல்லி மரத்தை தொட்டு வணங்கினால் போதும்.

இதையும் படிக்கலாமே:செல்வ செழிப்பை தரும் சனி மகா பிரதோஷம்

எளிமையான இந்த விருட்ச வழிபாட்டை சனிப்பிரதோஷ நாளன்று செய்பவர்களுக்கு அவர்களிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான எதிர்மறை ஆற்றல்களும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்