கெட்டவர்கள் யாரும் நரசிம்மரை கும்பிட முடியாது. நரசிம்மரை வழிபாடு செய்பவர்களால் அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்கவும் முடியாது. நாளை நரசிம்மர் ஜெயந்தி. விஷ்ணு பகவானின் நான்காவது அவதாரம், நரசிம்மர் அவதாரம். சித்திரை மாதம் வளர்பிறை சுவாதி நட்சத்திரத்தன்று, தான் இந்த வளர்பிறை இந்த நரசிம்மர் ஜெயந்தி வரும். 11-5-2025 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இந்த ஆண்டின் நரசிம்மர் ஜெயந்தியானது வரவிருக்கிறது.
வாழ்க்கையில் எனக்கு பிரச்சனை மட்டும் தான் இருக்கு. எதிரிகள் மட்டும்தான் இருக்கிறார்கள். கடன் சுமை மட்டும் தான் இருக்கிறது. கண் திருஷ்டியால் எல்லாம் இழந்து விட்டேன். எதிரிகள் தொல்லையை சமாளிக்கவே முடியவில்லை. ஏவல் பில்லி சூனியத்தால் மீதி அழிந்தது. இனிமேல் வாழ்வதற்கு எனக்கு எந்த ஒரு நல்லதும் இல்லை.
என் வாழ்க்கையை இன்றோடு முடித்துக் கொள்கிறேன் என்று சொல்பவர்கள் கூட, இந்த நரசிம்மரை வழிபாடு செய்ய துவங்கினால், உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்க துவங்கிவிடும். ஒன்றுமே இல்லாமல் வாழ்க்கையின் இறுதி கட்டத்திற்கு சென்று, வெறும் கையோடு நரசிம்மரை நம்பிக்கையோடு அழைத்தால், நரசிம்மர் உங்களுக்கான வரங்களை வாரி வாரி கொடுத்து விடுவார். கூப்பிட்ட குரலுக்கு தாமதம் இல்லாமல் ஓடி வந்து உதவி செய்யக்கூடிய கடவுள் நரசிம்மர்.
பக்த பிரகலாதன் கதை நமக்கு தெரியும். பக்த பிரகலாதன் கூப்பிட்ட உடனேயே தூணில் இருந்து அவதாரம் எடுத்தவர் நரசிம்மர். நரசிம்மர் அவதாரம் எடுத்து அரக்கனை வதம் செய்துவிட்டு, உக்கிரதோடு இருந்தார். அவர் பக்கத்தில் லட்சுமி தேவியே போவதற்கு கொஞ்சம் தயங்கினார்கள். ஆனால் பக்தன் பிரகலாதன் நரசிம்மர் அருகில் சென்று அவருடைய மடியில் அமர்ந்து சாந்தப்படுத்தியதாக வரலாறு சொல்கிறது.
அதன் பிறகு தான் லட்சுமி தேவி பானகத்தோடு சென்று நரசிம்மரை சாந்தப்படுத்தி இருக்கிறார்கள். பக்தர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கடவுள் இந்த நரசிம்மர். நாளைய தினம் வரவிருக்கும் நரசிம்மர் ஜெயந்தி வழிபாட்டை எளிமையான முறையில் எப்படி செய்வது. குறிப்பாக கடன் சுமையிலிருந்து வெளிவர, நாளைய தினம் எப்படி வழிபாட்டை மேற்கொள்வது. ஆன்மீகம் சார்ந்த தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
நரசிம்ம ஜெயந்தி வழிபாடு 2025
நரசிம்மர் வழிபாட்டை வீட்டிலிருந்து செய்வதை விட, நரசிம்மர் இருக்கும் கோவிலுக்கு சென்று செய்வது சிறப்பான பலனை கொடுக்கும் என்று சொல்கிறது சாஸ்திரம். நரசிம்மர் ஜெயந்தி வழிபாட்டை நாளை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை இருக்கக்கூடிய அந்த பிரதோஷ கால நேரத்தில் மேற்கொள்ள வேண்டும். நரசிம்மருக்கு அபிஷேகத்திற்கு உங்கள் கையால் மஞ்சள் தூள் வாங்கி கொடுத்தால் கடன் சுமை குறையும்.
மஞ்சள் தூள் வாங்கி கொடுத்தால் நரசிம்மரின் உக்கர நிலை சாந்தமடையும் என்று சொல்லுவார்கள். அதே போல் தான் உக்கிரமாக இருக்கும் உங்கள் கடனை குறைக்க மஞ்சள் தூள் தானம் செய்வது சிறப்பு. சுத்தமான மஞ்சள் தூள் வாங்கி நாளைய தினம் உங்கள் கையால் நரசிம்மருக்கு தானம் கொடுங்கள். சிவப்பு நிற வஸ்திரம் யாராவது ஒருவருக்கேனும் தானம் கொடுங்கள். சிவப்பு நிற வஸ்திரம் நாளைய தினம் தானம் கொடுப்பதன் மூலம் உங்களுடைய எதிரி தொல்லை விலகும்.
நாளைய தினம் உங்கள் கையால் நீர்மோர், பானகம் தானமாக கொடுக்கலாம். அடிக்கின்ற வெயிலில் அடுத்தவர்களுடைய வயிறு குளிர்ந்தால், உங்களுடைய கடன் சுமை குறையும் என்று நம்பப்படுகிறது. முடிந்தால் நாளைய தினம் பொது இடங்களில் தண்ணீர் பந்தல் போட உங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம். அப்படி இல்லை என்றால் நீங்களே செலவு செய்து தண்ணீர் பந்தல் துவங்கி வைத்தால், உங்களுடைய கடன் சுமை படிப்படியாக குறையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
நரசிம்மருக்கு மிகவும் உகந்த பிரசாதம் பானகம். தண்ணீரில் எலுமிச்சை பழச்சாறு, பனைவெல்லம், ஏலக்காய், துளசி இவைகளை எல்லாம் சேர்த்து கலந்தால், பாகம் தயார். இதை நரசிம்மருக்கு நெய்வேத்தியம் செய்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கலாம். நரசிம்மர் கோவிலில் இரண்டே இரண்டு நெய் தீபம் ஏற்றி வைப்பது சிறப்பு.
நரசிம்மருக்கு வாசனை நிறைந்த பூக்கள் தேங்காய் பழம் இப்படி பூஜை பொருட்களை வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்து வழிபாட்டை மேற்கொள்ளலாம். கோவிலுக்கு சென்று இதுபோல வழிபாட்டை செய்து அந்த கோவிலிலேயே அமர்ந்து பின் சொல்லக்கூடிய இந்த மந்திரத்தை உச்சரிக்க எவ்வளவு பெரிய கஷ்டமும் அடுத்த 48 நாட்களுக்குள் சரியாகிவிடும். ஆனால் இந்த வழிபாட்டை வெறும் நரசிம்மர் ஜெயந்தியோடு செய்து நிறுத்தி விடக்கூடாது. நரசிம்மர் ஜெயந்திக்கு தொடங்கிய இந்த வழிபாட்டை அடுத்து தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர, கைமேல் பலன் நிச்சயம் உண்டு.
நரசிம்ம ஜெயந்தி மந்திரம்
யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம் ஸ்தம்பே
அவதார தம் அநந்ய லப்யம் லக்ஷ்மி
ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.
இதையும் படிக்கலாமே: சிவனிடம் நெருங்க பிரதோஷ வழிபாடு
நாளை முதல் தினமும் நரசிம்மர் கோவிலுக்கு சென்று, உங்கள் பெயரை சொல்லி, அர்ச்சனை செய்து, நரசிம்மர் கோவிலில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லி குறைந்தது 5 பேருக்காவது உங்கள் கையால் நீர்மோர் தானம் கொடுத்து வழிபாட்டை மேற்கொள்ள, 48 நாட்களில் நிச்சயமாக உங்கள் கஷ்டங்கள் எல்லாம் சுக்கு நூறாக உடையும் என்பதை நம்பிக்கை. உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இந்த வழிபாட்டு முறைகளை பின்பற்றி பலன் பெறவும்.