- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசிவனிடம் நெருங்க பிரதோஷ வழிபாடு

சிவனிடம் நெருங்க பிரதோஷ வழிபாடு

- Advertisement -

சனிபகவானுக்கு குருவாக இருப்பவர் அந்த ஈசன். சனிக்கிழமை வரும் பிரதோஷ நாளில், பிரதோஷ நேரத்தில், சனி பகவான், ஈசனை வணங்கி, சனீஸ்வர பட்டத்தை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈசன், சனி பகவானுக்கு சனீஸ்வர பட்டத்தை, கேட்ட உடனே அப்படியே தூக்கிக் கொடுத்து விடவில்லை. சனிக்கிழமை பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை எவர் ஒருவர் நம்பி வழிபாடு செய்கிறார்களோ, அவர்களை சனி பகவான் எதுவுமே செய்யக்கூடாது.

சனிக்கிழமை பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபடுபவர்களுக்கு, சனி பகவான் பெரிய அளவில் துன்பங்களை கொடுக்கக் கூடாது, என்ற கட்டளையை போட்டுவிட்டு தான் சிவபெருமான், சனிபகவானுக்கு சனீஸ்வர பட்டம் கொடுத்ததாக ஒரு புராணக் கதை சொல்கிறது. இதன் அடிப்படையில் நீங்கள் சனிபகவானின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற வேண்டும் என்றால், சனிக்கிழமையில் வரும் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானின் பாதங்களை பற்றி கொள்வதுதான் ஒரே வழி.

- Advertisement -

சிவ வழிபாடு

சனிக்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளில், பிரதோஷ நேரத்தில் இரண்டு வில்வ இலைகளை சிவபெருமானுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு, சிவன் கோவிலில் அமர்ந்தாலே போதும். நீங்கள் சிவபெருமானுக்கு மிக அருகில் சென்று விடுவீர்கள். பிறகு சனிபகவான் உங்களை எதுவுமே செய்ய மாட்டார். ஈசன் பக்கத்தில் சென்ற தைரியத்தில் தலைகனத்தில் நாமும் தவறுகள் செய்யக்கூடாது. அதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதோடு மட்டுமா சனிக்கிழமை வரும் பிரதோஷ நாளில், பிரதோஷ நேரத்தில், ஈசனை வழிபாடு செய்து விட்டு 4 ஏழை எளியவர்களுக்கு உங்கள் கைகளால் அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் முன்னோர்களின் சாபம் விலகும். பித்ரு தோஷம் நீங்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. எவ்வளவு அற்புதமான நாள் (10-05-2025) இன்று.

- Advertisement -

இந்த நாளில் ஈசனது வழிபாட்டை யாரும் தவறவிட வேண்டாம். பிரதோஷ நேரத்தில் நீங்கள் அலுவலகத்தில் இருக்கிறீர்கள், வேலையில் இருக்கிறீர்கள் என்றாலும், பரவாயில்லை. மனதிற்குள் குடியிருக்கும் சிவலிங்கத்திற்கு, மானசீகமாக ஒரே ஒரு நிமிடம் ஒரு வில்வ இலையை சாத்தி “ஓம் நமசிவாய” மந்திரத்தை மட்டும் ஆத்மார்த்தமாக சொன்னாலே போதும். சிவனுக்கு பக்கத்தில் நீங்கள் செல்லக்கூடிய பாக்கியம் கிடைக்கும்.

சனி மகா பிரதோஷ நாளில், சிவன் கோவிலில் இருந்து எடுத்து வந்த வில்வ இலையை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். அந்த வில்வ இலையை பீரோவில் பணம் வைக்கும் பெட்டியில், நகை வைக்கும் பெட்டியில் வைக்கலாம். பூஜை அறையில் வைக்கலாம். அந்த இலைகள் காய்ந்து போனாலும், அதற்கு உண்டான மகத்துவம் அப்படியே தான் இருக்கும். இந்த வில்வ இலைகள் உங்கள் வீட்டில் இருப்பது, அந்த ஈசனே உங்கள் வீட்டில் இருப்பதற்கு சமம்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் சனி மகா பிரதோஷ பரிகாரம்

அதுவும் இன்று சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் பிரதோஷ நாளில் சிவன் கோவிலில் இருந்து ஒரு வில்வ இலை கிடைத்தாலும், அது ஒரு கோடி ரூபாய்க்கு சமம். அது ஒரு பொக்கிஷம். தவற விடாதீங்க. வாய்ப்பு உள்ளவர்கள் இன்றைய நாளை பயன்படுத்தி, ஈசனை கும்பிடுங்கள் நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்