இன்று மே மாதம் பத்தாம் தேதி சனிக்கிழமை, சித்திரை நட்சத்திரத்துடன் சேர்ந்து வரக்கூடிய பிரதோஷம். இன்றைய நாளில் பலரும் சிவ வழிபாட்டில் ஈடுபடுவார்கள். மற்ற பிரதோஷங்களில் விரதம் இருந்து வழிபாடு செய்யாதவர்கள் கூட சனிமகா பிரதோஷ நாளன்று விரதம் இருந்து வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். மற்ற பிரதோஷங்களை விட பல மடங்கு பலனை தரக்கூடியதாகதான் சனி மகா பிரதோஷம் திகழ்கிறது. அன்றைய நாளில் வழிபாட்டை எப்படி செய்தால் கோடி மடங்கு பலன் நமக்கு கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சிவபெருமானை வழிபாடு செய்யக்கூடிய அனைவராலும் பிரதோஷ நாளன்று விரதம் இருக்க இயலாது. அவரவர்களின் உடல் சூழ்நிலையை பொருத்தும் சந்தர்ப்பத்தை பொருத்தும் விரதம் இருக்க இயலாத நிலை கூட உண்டாக்கும். அதே போல் தான் சனி பிரதோஷ நாளன்று அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களும் இருப்பார்கள். ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய இயலாதவர்களும் இருப்பார்கள். எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சிவபெருமானின் இந்த ஒரு திருநாமத்தை முழு மனதோடு கூறினால் போதும் நாம் செய்யக்கூடிய வழிப்பாட்டிற்கு பல மடங்கு பலன் கிடைக்கும்.
இந்த வழிப்பாட்டிற்கு நாம் சுத்தமாக இருக்க வேண்டும், விரதம் இருக்க வேண்டும், பூஜையறையில் தீபம் ஏற்ற வேண்டும், ஆலயத்திற்கு செல்ல வேண்டும் போன்ற எந்த நிபந்தனையும் கிடையாது. நாம் எந்த இடத்தில் இருந்தாலும் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் மனதிற்குள்ளேயே இந்த நாமத்தை கூறினால் போதும். சிவபெருமானின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த நாமத்தை நாம் கூறும்பொழுது எந்தவித வேண்டுதலையும் முன் வைக்க கூடாது. சிவபெருமாள் எப்பொழுதும் நம்முடனே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை முழு மனதோடு நினைத்துக் கொண்டு இந்த திருநாமத்தை கூற வேண்டும்.
இன்று இரவு 12 மணிக்குள் எந்த நேரம் நமக்கு வசதியான நேரமாக இருக்கிறதோ அந்த நேரத்தில் எந்த திசையை பார்த்து வேண்டுமானாலும் அமர்ந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ முழு மனதோடு சிவபெருமானையும், பார்வதி தேவியையும், நந்திகேஸ்வரரையும் முழுமனதோடு நினைத்து என்றென்றும் என்னுடனே இருக்க வேண்டும் எனக்கு துணையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு பின்வரும் சிவபெருமானின் திருநாமத்தை குறைந்தது பத்து நிமிடமாவது நிறுத்தி நிதானத்துடன் சிவபெருமானை மனதார நினைத்துக் கொண்டு கூற வேண்டும்.
பத்து நிமிடம் கூறி முடித்த பிறகு திரும்பவும் சிவபெருமான், பார்வதி தேவி, நந்திகேஸ்வரர் இவர் மூவரையும் மனதார நினைத்துக் கொண்டு என்றென்றும் என்னுடனே இருக்க வேண்டும் என்று மட்டும் கூறி இந்த வழிபாட்டை நிறைவு செய்துவிட வேண்டும். வேறு எந்த வேண்டுதலையும் முன்வைக்க கூடாது. அது வேண்டும் இது வேண்டும் இது சரியாக வேண்டும் அது சரியாக வேண்டும் என்று எதையும் குறிப்பிட்டு கூறக்கூடாது. சிவபெருமான் நம்முடன் இருந்து விட்டால் நமக்கு எந்த கவலையும் இல்லை அல்லவா? அதனால் என்றென்றும் என்னுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் நினைத்து பின்வரும் இந்த மந்திரத்தை கூற வேண்டும்.
மந்திரம்
“ஓம் நமோ பகவதே ருத்ரே”
இதையும் படிக்கலாமே:செல்வ செழிப்பை தரும் சனி மகா பிரதோஷம்
பூஜைகளற்ற, வழிபாடற்ற மிகவும் எளிமையான சிவபெருமானின் இந்த ஒரு திருநாமத்தை முழுமனதோடு என்றும் சிவபெருமான் உடன் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே கூறுபவர்களுக்கு சிவபெருமானின் அருளால் கோடி பலன் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.