ஒருவருடைய வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கிறது என்றால் அந்த பிரச்சினைகளுக்கு காரணம் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு கர்ம வினைகளின் அடிப்படையில் பிரச்சனைகள் வரலாம் அல்லது தீய சக்திகளின் பாதிப்புகளாலும் பிரச்சினைகள் வரலாம். கர்ம வினைகளின் அடிப்படையில் பிரச்சனை வந்தாலும் தீய சக்திகளின் பாதிப்பால் பிரச்சினைகள் வந்தாலும் அந்த பிரச்சனையிலிருந்து விடுபடுவதோடு தீய சக்திகளின் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கு செய்ய வேண்டிய ஒரு வழிப்பாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கர்ம வினைகளின் பாதிப்பால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பல இருந்தாலும் அந்த பிரச்சினைகளில் இருந்து வெளியே வருவதற்கு கர்ம வினைகளை குறைப்பது ஒன்று மட்டுமே தீர்வாக அமையும். அப்படி கர்ம வினைகள் தீர வேண்டும் என்றால் நம்மால் இயன்ற தான தர்மங்களை நாம் முழுமனதோடு செய்ய வேண்டும். இதுவே தீய சக்திகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளிலிருந்து வெளியே வருவதற்கு தெய்வத்தை சரணாகதி அடைய வேண்டும். அப்படி தெய்வத்தை சரணாகதி அடையும் போது தீய சக்திகளால் ஏற்பட்ட பாதிப்புகளும் தீய சக்திகளும் விலகும். அந்த வகையில் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த வழிபாட்டை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். இதற்கு புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சம் பழமாக ஆறு வேண்டும். இந்த எலுமிச்சம் பழங்களை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய அம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அந்த ஆலயத்தில் அம்மனுக்கு ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அபிஷேக ஆராதனை நடைபெற வேண்டும். மேலும் அந்த ஆலயத்தில் கோபுரம் இருக்க வேண்டும். அடுத்ததாக அந்த ஆலயத்தில் திரிசூலம் இருக்க வேண்டும். இவை அனைத்தும் இருக்கக்கூடிய ஒரு அம்மன் ஆலயத்திற்கு எலுமிச்சம் பழங்களை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செல்லலாம்.
இப்பொழுது முதலில் நம்முடைய பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக்கொண்டு மூன்று எலுமிச்சம் பழங்களை எடுத்து திரிசூலத்தில் குத்த வேண்டும். பிறகு மூன்று எலுமிச்சம் பழங்களை அங்கு இருக்கக்கூடிய ஐயரிடம் கொடுத்து அம்மனின் திருவடிகளில் வைக்க சொல்லி தர வேண்டும். பிறகு அம்மனை வழிபாடு செய்து விட்டு அம்மனை 9 முறை வலம் வந்து அம்மனின் பாதத்தில் இருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்திலிருந்து ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை மட்டும் திரும்ப வாங்கி வர வேண்டும். அவ்வாறு வாங்கி வரும் பொழுது வேறு எங்கும் செல்லக்கூடாது. நேராக வீட்டிற்கு தான் வரவேண்டும். வீட்டிற்கு வந்த பிறகு கோவிலில் இருந்து வாங்கி வந்த எலுமிச்சம் பழத்தை வீட்டு பூஜை அறையில் வைக்கலாம் அல்லது வீட்டின் மையப் பகுதியான ஹாலில் வைக்கலாம்.
மூன்று நாட்கள் இது அப்படியே இருக்கட்டும். மூன்றாவது நாள் இந்த எலுமிச்சம் பழத்தை பார்க்கும் பொழுது அது காய்ந்த நிலையில் இருந்தது என்றால் நம்முடைய பிரச்சினைகள் தீர்க்கக் கூடிய ஒன்றாகவே இருக்கும். ஒருவேளை அது அழுகி இருந்தாலும் துர்நாற்றம் வருவது போல் இருந்தாலும் நம்முடைய வீட்டில் தீய சக்திகளால் பாதிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பிறகு அந்த பாதிப்புகளை நீக்குவதற்குரிய பரிகாரங்களையும் வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும். எலுமிச்சம் பழம் அழுகி இருக்கும் பட்சத்தில் அதை உடனடியாக வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். குறிப்பாக ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விடுவது மிகவும் சிறப்பு.
இதையும் படிக்கலாமே: குடும்ப சண்டை நீங்க வீட்டில் ஏற்ற வேண்டிய தீபம்
அம்மன் ஆலயத்தில் செய்யக்கூடிய இந்த எலுமிச்சம் பழ வழிபாட்டை முழு மனதோடு யார் ஒருவர் தொடர்ச்சியாக செய்து வருகிறார்களோ அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சினைகளும் தீய சக்திகளும் படிப்படியாக விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.