- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஐஸ்வர்யம் பெருக விஷ்ணுபதி புண்ணிய கால பரிகாரம்

ஐஸ்வர்யம் பெருக விஷ்ணுபதி புண்ணிய கால பரிகாரம்

- Advertisement -

மே மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வைகாசி மாதம் பிறக்கிறது. வைகாசி மாதத்தின் முதல் நாளை நாம் விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று கூறுகிறோம். அந்த நாளில் பெருமாளை நாம் வழிபாடு செய்வது என்பது நம்முடைய வாழ்க்கையில் செல்வ செழிப்பை அதிகரிக்கும் என்று பலரும் கூறி கேள்விப்பட்டு இருப்போம். அப்படிப்பட்ட நாளில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

விஷ்ணுபதி புண்ணிய கால பரிகாரம்

பொதுவாக வைகாசி மாதம் என்றாலே அது சிறப்பு மிகுந்த மாதம் என்றே கூறப்படுகிறது. 12 ஏகாதேசிகள் விரதம் இருந்த பலனை விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் வழிபாடு செய்வதன் மூலம் பெற முடியும் என்றும் புராணங்களில் கூறப்பட்டு இருக்கிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் நாம் மகாவிஷ்ணுவிற்கு மகாலட்சுமிக்கும் பிடித்தமான பொருளை வைத்து பரிகாரம் செய்யும்பொழுது அந்த பரிகாரத்தின் பலணால் ஐஸ்வர்யம் பெருக ஆரம்பிக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை இன்று இரவே செய்ய ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் நாளை காலையில் அதாவது விஷ்ணுபதி புண்ணிய காலம் இருக்கும்பொழுது நாம் செய்வதற்கு சரியாக இருக்கும். இரவு அனைத்து வேலைகளையும் நிறைவு செய்த பிறகு படுக்கச் செல்வோம் அல்லவா? அப்பொழுது ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தையும், நல்ல நிலையில் விதைகள் தெரியாத அளவு இருக்கக்கூடிய ஒரு ஏலக்காயையும் எடுத்து வலது கையில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதை இடது கையால் மூடி செல்வநிலை உயர வேண்டும், பணம் அதிக அளவில் சேர வேண்டும் என்று முழுமனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு நம்மிடம் அதிக அளவில் பணம் இருப்பது போல் கற்பனையும் செய்து கொள்ள வேண்டும்.

இப்படி செய்து முடித்த பிறகு இந்த ஐந்து ரூபாய் நாணயத்தையும் ஏலக்காயையும் நாம் படுகின்ற தலையணைக்கு கீழ் வைத்து விட வேண்டும். பிறகு படுத்து உறங்கலாம். நாளை காலை எந்த நேரத்தில் நாம் கண்விழித்தாலும் (ஒரு சிலர் நடு ராத்திரியில் கண்விழித்து பிறகு மறுபடியும் படித்து உறங்குவார்கள். அப்படி விழிப்பவர்களாக இருந்தாலும் சரி) விழித்த உடன் கைபேசியை பார்க்காமல் தலையணைக்கு அடியில் இருக்கக்கூடிய இந்த ஐந்து ரூபாய் மற்றும் ஏலக்காயை எடுத்து இரண்டு கைகளையும் சேர்த்தவாறு வைத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு அதைப் பார்த்து “ஐஸ்வர்யம் பெருகட்டும்” என்று மூன்று முறை கூற வேண்டும்.

- Advertisement -

விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் கண் விழிக்கும் பொழுது மகாலட்சுமி மற்றும் மஹாவிஷ்ணுவின் அம்சம் பொருந்திய ஐந்து ரூபாய் மற்றும் ஏலக்காயை பார்த்து ஐஸ்வர்யம் பெருகட்டும் என்று நாம் கூறுவது மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியை வழிபாடு செய்வதற்குரிய பலனை தரும். பிறகு நாம் நம்முடைய அன்றாட வேலைகளை செய்யலாம். இந்த ஐந்து ரூபாய் மற்றும் ஏலக்காயை தினமும் தலையணைக்கு அடியில் வைத்து படுத்து உறங்கி காலையில் அதில் கண் விழிக்கலாம் அல்லது நாம் பயன்படுத்தும் பர்ஸிலும் வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:எதிரி தொல்லைக்கு திருப்புகழ்

எளிமையான இந்த பரிகாரத்தை மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியை மனதார நினைத்துக் கொண்டு விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் செய்பவர்களுக்கு வறுமை நிலையும் தரித்திரமும் முற்றிலும் நீங்குவதோடு ஐஸ்வர்யம் பெருகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்