- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎதிரி தொல்லைக்கு திருப்புகழ்

எதிரி தொல்லைக்கு திருப்புகழ்

- Advertisement -

முருகனின் சிறந்த பக்தர்களுள் ஒருவராக விளங்கிய அருணகிரிநாதர், முருகனின் அருளை நேரில் பெற்றவர் ஆவார். இவர் ஒரு முறை திருத்தணிகை மலைக்கு செல்ல, அங்கு நேர்ந்த ஒரு சம்பவத்தால் உருவாகியது, இந்த திருப்புகழின் வரிகள் என்று கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த இவ்வரிகள் உங்களின் எதிரிகளை வேரோடு துவம்சம் செய்யக்கூடிய அற்புதம் நிறைந்தது. எதிரிகளை வேரோடு அழிக்கக்கூடிய இவ்வரிகள் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

திருத்தணிக்கு சென்ற அருணகிரிநாதர், அங்கு சில வேண்டாத மனிதர்களின் கேளி பேச்சுகளுக்கு ஆளாகினார். அந்த வேண்டாத மனிதர்கள் அருணகிரிநாதரையும், அவர்களின் சீடர்களையும் பார்த்து கிண்டல் செய்து கொண்டிருந்தனர். “வந்துவிட்டார்கள் பட்டையும், கொட்டையுமாக.. இவர்களுக்கு வேறு வேலையே கிடையாது, கழுத்தில் எதையோ மாட்டிக் கொண்டு, முருகா.. முருகா.. என்று புலம்பிக் கொண்டே இருப்பார்கள். என்பது போன்ற தேவையற்ற பேச்சுகளால் பொறுமையாக இருந்த அருணகிரிநாதரை, கோபத்திற்கு உள்ளாக செய்தனர்.

- Advertisement -

எம்பெருமான் முருகனின் அருள் பெற்ற அருணகிரிநாதர் சொன்னால், முருகன் ஏதும் செய்வார். அவர்களின் அந்த கிண்டல்கள், எல்லை மீறி போகவே அருணகிரிநாதர் உடனே இப்பாடலை பாடி, எதிரிகளை நெருப்பில் போட்டு பொசுக்கினார். திருப்புகழ் பாடல் வரிகளால் அம்மனிதர்கள் நெருப்பில் பொசுங்கி கருகி போனார்கள். உடனே மனம் வெம்பி அருணகிரிநாதர் மீண்டும் அவர்களை உயிர்ப்பிக்க முருகப் பெருமானை வேண்டிக் கொண்டார். உடனே நடந்தவை மாறி அவர்கள் மீண்டும் உயிரோடு எழும்பினர்.

எதிரிகளை அழிக்கும் திருப்புகழ் வரிகள்:
சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ்
செகுத்தவர் ருயிர்க்குஞ் சினமாகச்
சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும்
திருப்புகழ் நெருப்பென் றறிவோம்யாம்
நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும்
நிசிக்கரு வறுக்கும் பிறவாமல்
நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும்
நிறைப்புக ழுரைக்குஞ் செயல்தாராய்

- Advertisement -

தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந்
தகுத்தகு தகுத்தந் தனபேரி
தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந்
தளத்துட னடக்குங் கொடுசூரர்
சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ்
சிரித்தெரி கொளுத்துங் கதிர்வேலா
தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண்
திருத்தணி யிருக்கும் பெருமாளே.

இந்த பாடல் வரிகளை தான் அருணகிரிநாதர் அப்போது பாடி அருளினார். எப்பேர்பட்ட எதிரிகளையும் ஓட ஓட விரட்டியடிக்க கூடிய, இந்த சக்தி வாய்ந்த திருப்புகழ் வரிகளை, தினமும் பாடி வர உங்களுக்கு பிரச்சனை தரும் எதிரிகளின் தொல்லைகள் ஒழிந்து நாசமாய் போகும். துஷ்டர்களை விரட்டியடிக்க கூடிய இந்த சக்தி வாய்ந்த திருப்புகழ் பாடல் வரிகளை, அமைதியான ஒரு இடத்தில் தியான நிலையில் அமர்ந்து, முருகனை மனதார பிரார்த்தித்துக் கொண்டு படிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
மாதத்தின் கடைசி நாள் செய்ய வேண்டிய பரிகாரம்

தொழில் ரீதியாக உங்களை போட்டியாக நினைத்து தொல்லை கொடுப்பவர்கள், உங்கள் வளர்ச்சியை கெடுக்க நினைப்பவர்கள், உங்களைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள், உங்கள் முன்னேற்றத்தை தடுப்பவர்கள், உங்களின் சொத்தை அபகரித்தவர்கள் என்று யாராக இருந்தாலும் இப்பாடலை பாடி வர முருகன் அருளால் உங்களுக்கு சாதகமான பலன்களும், அவர்களுக்கு பாதகமான பலன்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை. திருப்புகழை முழுவதுமாக படிக்க முடிந்தவர்கள், அதை முழுவதுமாக படிக்கலாம். எதிரிகளின் தொல்லை இருப்பவர்கள், இப்பாடல் வரிகளை மட்டும் காலையில் குளித்து முடித்து, பூஜை அறையில் அமர்ந்து படிக்கலாம்.

சற்று முன்