- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவிஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ஏற்ற வேண்டிய தீபம்

விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

வருடத்திற்கு நான்கு முறை வரக் கூடிய விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ஒன்றாக கருதப்படுவது தான் வைகாசி மாதத்தின் முதல் நாள். இந்த நாளில் பலரும் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று 27 முறை வலம் வந்து பெருமாளை வழிபாடு செய்வார்கள். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையில் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை ஆலயத்திற்கு செல்ல இயலாது என்று நினைப்பவர்கள் வீட்டிலேயே எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட அந்த வழிபாட்டிற்குரிய பலன் முழுமையாக கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

விஷ்ணுபதி புண்ணிய கால தீபம்

வைகாசி மாதத்தில் பலவிதமான விசேஷங்கள் நிறைந்து இருக்கும். இந்த வைகாசி மாதத்தில் முருகன் பெருமான், சிவன், நரசிம்மர், அம்பிகை போன்ற தெய்வங்களை வழிபாடு செய்வதற்கு உகந்ததாகவே கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக திருப்பதி ஏழுமலையானை வழிபாடு செய்வது என்பது அதீத பலனைத் தரும். இதற்கு முக்கியமான காரணம் விஷ்ணுபதி புண்ணிய காலம் தான். அதனால் தான் வைகாசி முதல் தேதி பெருமாள் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.

- Advertisement -

ஏதோ ஒரு சூழ்நிலையின் காரணமாக ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய இயலாதவர்கள் தங்களுடைய வீட்டிலேயே எளிமையான முறையில் வழிபாடு செய்யலாம். அன்றைய தினத்தில் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஒரு தாம்பாள தட்டை பெருமானின் படத்திற்கு முன்பாக வைத்து அதில் ஒரு கைப்பிடி அளவு துளசி இலையை பரப்ப வேண்டும். அதற்கு மேல் வாசனை மிகுந்த மலர்களில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து அதையும் பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து அதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி மஞ்சள் நிற திரியைப் போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

பெருமாளுக்கு துளசி தீர்த்தத்தை வைக்க வேண்டும். இதோடு மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய நெல்லிக்கனியை நாம் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இப்படி வைத்துவிட்டு அந்த தீபத்தை பார்த்தவாறு பெருமாளின் திருநாமங்களை கூறலாம். நமக்கு பெருமாளின் எந்த மந்திரம் தெரியுமா அந்த மந்திரத்தை 27 முறை கூற வேண்டும். பிறகு மகாலட்சுமியின் அஷ்டகம், கனகதாரா ஸ்தோத்திரம் போன்றவற்றை படிக்க வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். இந்த தீபமானது குறைந்தது 48 நிமிடமாவது எரிய வேண்டும். பிறகு அதை குளிர வைத்துவிடலாம்.

- Advertisement -

அந்த தட்டில் நாம் போட்ட துளசி மற்றும் வாசனை மலர்களை எடுத்து நாம் எங்கெல்லாம் பணம், நகை வைத்து இருக்கிறோமோ அந்த இடத்தில் எல்லாம் போட்டு வைக்க வேண்டும். நெல்லிக்கனியை வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் உண்ண வேண்டும். இப்படி விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் நாம் வீட்டிலேயே வழிபாடு செய்வதன் மூலம் மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.

இதையும் படிக்கலாமே:ஐஸ்வர்யம் பெருக விஷ்ணுபதி புண்ணிய கால பரிகாரம்

விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமானின் அருளை பெறுவதற்கு ஆலயத்திற்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே முழு நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்