- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபிரச்சனைகளை தீர்க்கும் திருவோண நட்சத்திர வழிபாடு

பிரச்சனைகளை தீர்க்கும் திருவோண நட்சத்திர வழிபாடு

- Advertisement -

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் என்பது இருக்கும். அந்த நட்சத்திரத்திற்குரிய அதி தேவதையை நாம் வழிபாடு செய்வதன் மூலம் அந்த தெய்வத்திற்குரிய அருளையும் நம்மால் பெற முடியும். அந்த வகையில் 27 நட்சத்திரங்களில் மிகவும் உயர்ந்த நட்சத்திரமாக திகழக்கூடியது இரண்டே இரண்டு நட்சத்திரம் தான். அவை தான் திருவாதிரை மற்றும் திருவோணம். திருவாதிரை நட்சத்திரம் என்பது சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகவும் திருவோண நட்சத்திரம் என்பது பெருமாளுக்குகந்த நட்சத்திரமாகவும் கருதப்படுகிறது. உயரிய நட்சத்திரமாக திகழக்கூடிய இந்த நட்சத்திரம் வரக்கூடிய நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாட்டிற்கு அதிக அளவில் பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட திருவோண நட்சத்திர நாளில் செய்ய வேண்டிய ஒரு வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பிரச்சனைகளை தீர்க்கும் வழிபாடு

திருவோண நட்சத்திர நாளில் நாம் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளுக்கு துளசி இலைகள் மற்றும் தாமரை மலரை வாங்கி கொடுத்து நம்முடைய பேரில் அர்ச்சனை செய்து வழிபாடு செய்வதன் மூலம் பெருமாளின் அருளை நம்மால் பெற முடியும். பெருமாளின் அருள் கிடைத்துவிட்டால் மகாலட்சுமியின் அருளும் கிடைத்துவிடும். அதன் மூலம் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது. அப்படிப்பட்ட திருவோண நட்சத்திர நாளில் செய்யும் வழிபாடானது நம்முடைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் அந்த வழிபாட்டை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை மே மாதம் 18ஆம் தேதி இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் வரக்கூடிய சூரிய ஹோரையில் செய்ய வேண்டும். இதற்கு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு கைப்பிடி அளவு நெல் அல்லது பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள். அந்த பச்சரிசியில் உங்களுடைய விரலை பயன்படுத்தி உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை எழுத வேண்டும். எந்த பிரச்சினை தீர வேண்டுமோ அதை எழுத வேண்டும். ஒன்றிற்கும் மேற்பட்ட வேண்டுதலையோ அல்லது பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதை நாம் அதில் எழுதலாம். பிறகு அதற்கு மேல் ஒரு கைப்பிடி அளவு துளசி இலையை பரப்ப வேண்டும். பிறகு சூரிய பகவானுக்குரிய கோதுமையை எடுத்து அந்த பச்சரிசி மற்றும் துளசி இலை தெரியாத அளவிற்கு போட்டு மூடி விட வேண்டும்.

இதற்கு மேல் நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றிய பிறகு இந்த தீபத்திற்கு நெய்வேத்தியமாக வெற்றிலை, கலிப்பாக்கு, செவ்வாழை இவற்றை வைத்துவிட்டு அந்த தீபத்தை பார்த்தவாறு நீங்கள் நெல்லில் என்னென்ன எழுதினீர்களோ அதை கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விடுங்கள். இந்த தீபம் குறைந்தது 48 நிமிடமாவது எரிய வேண்டும். பிறகு அதை குளிர வைத்துவிடலாம். இது அப்படியே பூஜை அறையில் அன்று இரவு முழுவதும் இருக்கட்டும்.

- Advertisement -

மறுநாள் காலையில் அகல் விளக்கை தனியாக எடுத்து வைத்துவிட்டு தட்டில் இருக்கக்கூடிய பச்சரிசி மற்றும் கோதுமையை நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதில் இருக்கக்கூடிய துளசி இலைகளை மட்டும் தனியாக எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். பச்சரிசி மற்றும் கோதுமையை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய மரத்தடியில் சிறிது சிறிதாக தூவி விட வேண்டும். இப்படி தூங்குவதன் மூலம் எறும்புகள் அதை வந்து சாப்பிடும். அதன் மூலம் நாம் என்ன எழுதினோமோ அது நமக்கு நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே: காசு மழை கொட்ட அபிஜித் நட்சத்திர நேரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்

அதிசக்தி வாய்ந்த உயரிய நட்சத்திரமான திருவோண நட்சத்திர நாளன்று இந்த முறையில் பிரச்சனைகள் தீர வேண்டும், வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்