- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகாசு மழை கொட்ட அபிஜித் நட்சத்திர நேரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்

காசு மழை கொட்ட அபிஜித் நட்சத்திர நேரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்

- Advertisement -

பெரிய பெரிய கோடீஸ்வரர்களுடைய பட்டியலில் உங்களுடைய பெயரும் இடம்பெற வேண்டுமா. நீங்கள் செல்வந்தர்களாக மாற வேண்டும் என்ற கனவு நினைவாக வேண்டும் என்றால், இன்று மாலை வரக்கூடிய அபிஜித் நட்சத்திர நேரத்தை தவறவிடக்கூடாது. எல்லோருக்கும் தெரிந்திருக்கும் இன்று மாலை 6:40 மணி முதல் 7:04 மணி வரை இருக்கக்கூடிய இந்த இடைப்பட்ட 24 நிமிடங்கள் தான் அபிஜித் நட்சத்திரம் நேரம்.

இந்த நேரத்தில் கடவுளிடம் நீங்கள் என்ன கேட்டாலும் அது உடனே கிடைக்கும். இந்த நேரத்தில் கோடி கோடியாக பணத்தை சம்பாதிக்கக்கூடிய ஒரு சூட்சமமான மந்திரத்தை பற்றி தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த மந்திரத்தை சொல்ல எந்த தகுதியும் உங்களுக்கு வேண்டாம். மந்திரத்தின் மீதும் வழிபாட்டின் மீதும் அபிஜித் நட்சத்திர நேரத்தின் மீதும் நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும் நீங்கள் கோடீஸ்வரராக மாறிவிடலாம்.

- Advertisement -

இன்று மாலை வரக்கூடிய அஜித் நட்சத்திர நேரத்தில் பூஜை அறையில் இரண்டு நெய் விளக்குகள் ஏற்றி வைத்துவிட்டு, கிருஷ்ண பரமாத்மாவே உன் திருவடி பாதங்கள் சரணம் என்று சொல்லிவிட்டு, ஒரு சின்ன துண்டு பச்சை கற்பூரத்தை உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, கண்களை மூடி கொள்ளுங்கள். “ஓம் ரீங் தனஞ்ஜெயனே போற்றி போற்றி” என்ற மந்திரத்தை மட்டும் 24 நிமிடங்கள் முழுமையாக உச்சரிக்க வேண்டும். தனம் ஜெயம் இது இரண்டையும் சேர்த்து உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்க கூடிய சக்தி வாய்ந்த ஒரு மந்திரம் தான் இது.

தனம் என்ற வார்த்தை வெறும் பணத்தை மட்டும் குறிக்காது. நகை, பணம், குழந்தை பாக்கியம், வீடு, மனை, வாகனம் இவை அனைத்திற்குமே தனம் என்ற பெயர் பொருந்தும். தனம் என்ற பெயர் சந்தோஷத்தை கொடுக்க கூடிய வார்த்தையாகவும் சொல்லப்படுகிறது. இவை அனைத்திலும் நாம் வெற்றி காண வேண்டும் என்றால் அதற்கு உண்டான வார்த்தை ஜெயம். தனம் ஜெயம் இந்த இரண்டு வார்த்தைகளை சேர்த்து இந்த பிரபஞ்சத்தோடு நம்மை இணைக்கக்கூடிய பீஜ மந்திரம் தான் “ஓம் ரீங்”.

- Advertisement -

எதையுமே காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். குறிப்பிட்ட 24 நிமிடத்தில் ஒரே ஒரு பச்சை கற்பூரத்தை கையில் வைத்துக்கொண்டு மேலே சொல்லப்பட்டிருக்கும் அந்த பண வசியம் மந்திரத்தை மட்டும் சொல்லி உந்த பிரபஞ்சத்திடம் என்ன வேண்டுமோ, அதை நீங்கள் கேட்டுப்பாருங்களேன். நீங்கள் கேட்டதை இந்த பிரபஞ்சம் சீக்கிரமாகவே உங்கள் கையில் கொண்டு வந்து சேர்க்கும். (24 நிமிடத்தில் எத்தனை முறை இந்த மந்திரத்தை சொல்ல முடியுமோ அத்தனை முறை சொல்லுங்கள் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டாம்).

இன்றைய சூழ்நிலையில் எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனை பண பிரச்சனை தானே. பணம் வந்து விட்டால் பிரச்சனையில் முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்தது. அதற்காகத்தான் பச்சை கற்பூரத்தை உள்ளங்கைகளில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. பண வசியத்திற்கு முக்கியமான பொருள் பச்சைக் கற்பூரம். வழிபாட்டை முடித்துவிட்டு அந்த பச்சை கற்பூரத்தை பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

உங்களுக்கு ஆரோக்கியம் வேண்டும், குடும்ப சந்தோஷம் வேண்டும், குடும்ப ஒற்றுமை வேண்டும், என்றாலும் இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம். வாழ்வில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளையும் சரி செய்யும் சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. இன்றைய நாளை தவிர விடாதீர்கள். முருகனது சக்தி இன்று இருக்கிறது. இன்று சஷ்டி திதி. திருவோண நட்சத்திரம் இருக்கிறது. பெருமாளுடைய ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: 18-05-2025 அதி சக்தி வாய்ந்த அபிஜித் நட்சத்திரம் நேரம் எப்போது வருகிறது?

இன்று ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானின் நாள். பித்ரு காரகன் உடைய ஆசிர்வாதத்தையும் நாம் பெறலாம். இவ்வளவு நல்ல விஷயங்கள் கலந்திருக்கும் இந்த நாளில் அபிஜித் நட்சத்திர நேரமும் சேர்ந்து இருப்பது எவ்வளவு பெரிய நல்ல வாய்ப்பு. இதை நாம் தவறு விடலாமா. இத்தனை சக்தி வாய்ந்த வழிபாட்டை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்