- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval18-05-2025 அதி சக்தி வாய்ந்த அபிஜித் நட்சத்திரம் நேரம் எப்போது வருகிறது?

18-05-2025 அதி சக்தி வாய்ந்த அபிஜித் நட்சத்திரம் நேரம் எப்போது வருகிறது?

- Advertisement -

எதாவது ஒரு நல்லது என்னுடைய வாழ்க்கையில் நடந்து விடாதா என்று பல நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறேன். பல நாட்களாக இறைவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் ஒரு நல்லது கூட என்னுடைய வாழ்க்கையில் நடக்கவே இல்லை, என்று வருத்தப்படுபவர்களாக நீங்கள் இருந்தால் அந்த வருத்தம் இனி வேண்டாம். உங்களுக்கும் நல்லது நடக்கும் இந்த 24 நிமிடத்தில் இறைவனிடம் பிரார்த்தனை செய்தால். உங்கள் தலையெழுத்தும் நல்லபடியாக மாறும்.

உங்களுடைய மனதில் நீண்ட நாட்களாக இருக்கும் அந்த ஒரு வேண்டுதலை இறைவனிடம் இந்த 24 நிமிடத்தில் சொல்லிப் பாருங்கள். ஜெட் வேகத்தில் இறைவன் உங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றி வைப்பான். அந்த 24 நிமிடத்திற்கு பெயர்தான் அபிஜித் நட்சத்திர நேரம். இதற்கு பின்னால் அப்படி என்ன அதிசக்தி வாய்ந்த மர்மம் மறைந்திருக்கிறது. கிருஷ்ண பரமாத்மா தன்னுடைய மயில் இறகில் மறைத்து வைத்திருக்கும் நேரம் அது. அந்த ரகசியம் அந்த பரமாத்மாவுக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் அந்த நேரத்தை மட்டும் நம்மால் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

- Advertisement -

மே மாதம் அபிஜித் நட்சத்திர நேரம்

அந்த அதிசக்தி வாய்ந்த அபிஜித் நட்சத்திர நேரம், இன்றைய தினம் 18.5.2025 ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கிறது. இது வெறும் ஞாயிற்றுக்கிழமை அல்ல இன்றைய தினம் சஷ்டி திதியும் இருக்கிறது. திருவோண நட்சத்திரமும் இருக்கிறது. ஆக மொத்தத்தில் இன்று நமக்கு கடன் சுமையை கொடுக்கும் செவ்வாய் பகவானின் அருள் ஆசி நமக்கு கிடைக்க, முருகப்பெருமான் கை கொடுப்பார்.

பண பிரச்சனையை தீர்த்து வைக்க திருவோண நட்சத்திரத்திற்கு சொந்தக்காரரான பெருமாளும் கை கொடுப்பார். இது எல்லாம் தாண்டி இந்த நட்சத்திரத்திற்கு சொந்தமான கிருஷ்ண பரமாத்மாவையும் நாம் வழிபாடு செய்ய மறக்கக்கூடாது. சரி இன்று அந்த அபிஜித் நட்சத்திர நேரம் எப்போது வருகிறது.

- Advertisement -

இன்று மாலை 6:40 டு 7:04 இந்த நேரத்திற்கு இடைப்பட்ட 24 நிமிடங்கள் தான் அதிசக்தி வாய்ந்த அந்த அபிஜித் நட்சத்திர நேரம். இந்த நேரத்தில் பூஜை அறையில் இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி வைத்துவிட்டு, குடும்பத்தோடு அமர்ந்து கிருஷ்ண பரமாத்மாவை, குலதெய்வத்தை, முருகப்பெருமானை, பெருமாளை மனதார நினைத்து வணங்கி உங்களுடைய பிரார்த்தனையை இந்த பிரபஞ்சத்திடம் சொன்னாலே போதும். உங்களுடைய கஷ்டங்கள் அதிவிரைவாக தீரும்.

நீங்கள் இறைவனிடம் வைத்த கோரிக்கை சீக்கிரத்தில் நிறைவேறும். எல்லா பிரார்த்தனையையும் சொல்லி குழப்ப வேண்டாம். ஏதாவது ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் இந்த நிமிடத்தில் இறைவனிடம் வையுங்கள். அந்த கோரிக்கை நிறைவடையும் வரை மாதம் தோறும் வரக்கூடிய அபிஜித் நட்சத்திரம் நேரத்தில் அதை கோரிக்கையை இறைவனிடம் தொடர்ந்து வைத்து வர, நிச்சயமாக உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே: தேய்பிறை சஷ்டியில் கூற வேண்டிய முருகன் மந்திரம்

அதில் எந்த சந்தேகமும் கிடையாது. உங்கள் கோய்க்கை நியாயமாக இருக்க வேண்டும். உங்கள் தகுதிக்கு ஏற்றபடி இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அதிசக்தி வாய்ந்த அபிஜித் நட்சத்திர நேரத்தைப் பற்றிய தகவலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மனமகிழ்ச்சியுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்