- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுரு பகவானை வசியம் செய்ய மந்திரம்

குரு பகவானை வசியம் செய்ய மந்திரம்

- Advertisement -

குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்லுவார்கள். அந்த குரு பகவான் நம்மை ஒரு நிமிடம் பார்த்து விட்டால் போதும். நம்முடைய பண கஷ்டங்கள் எல்லாம் சரியாகி, வாழ்க்கையில் சந்தோஷம் பிறந்துவிடும். காரணம் நம் வாழ்வின் எல்லா சுகத்திற்கும் காரணமாக இருப்பவர் இந்த குரு பகவான்.

பணத்தை தாண்டி, நம்முடைய இல்லற வாழ்க்கை சிறக்க, குடும்பத்தில் சந்தோஷம் பிறக்க, மங்களகரமான காரிய தடைகள் விலக, குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க, வீட்டில் தங்கம் சேர எல்லாவற்றிற்குமே அந்த குரு பகவானின் அருள் ஆசி நமக்கு கிடைக்க வேண்டும். இந்த குரு பகவானின் அருளை நாம் பெற வேண்டும் என்றால், என்ன செய்வது. எளிமையான ஆன்மீகம் சொல்லும் ஒரு பரிகாரமும், குரு பகவானின் எளிமையான ஒரு மந்திரமும் இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

குரு வசிய திலகம்

நாளைய தினம் வியாழக்கிழமை. காலை 6 மணியிலிருந்து 7 குரு ஹோரை இருக்கும். அந்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்வது சிறப்பு. நீங்கள் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, முதலில் குளிக்கின்ற தண்ணீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு கலந்து குளித்து விட வேண்டும்.

பிறகு பூஜை அறையில் விளக்கு ஏற்றி சின்ன கிண்ணத்தில் சுத்தமான மஞ்சள் பொடி, சுத்தமான சந்தன பொடி போட்டு, கொஞ்சம் பன்னீர் விட்டு கலந்து அந்த திலகத்தை கையில் வைத்துக் கொண்டு, இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.

- Advertisement -

குரு வசிய மந்திரம்

ஓம் குரு குரு வசி வசி குருவே சரணம் ! மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு அந்த சந்தன திலகத்தை அதாவது கலந்து வைத்திருக்கும் திலகத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு உங்களுடைய வேலையை துவங்கலாம். இதுபோல வியாழக்கிழமை தோறும் இந்த மந்திரத்தை சொல்லி இந்த திலகத்தை நெற்றியில் இட்டு வந்தால், குரு பகவானின் பரிபூரண ஆசி உங்களுக்கு கிடைக்கும்.

கோடி கோடியாக பணம் சேரும். ஆமாங்க நம்பிக்கையோடு செய்தால் நிச்சயமாக வருமானத்தில் மாற்றங்கள் ஏற்படும். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். கடன் சுமை படிப்படியாக குறைய துவங்கும். நீண்ட நாட்களாக பையனுக்கு வரன் அமையவில்லை. பெண்ணிற்கு வரன் அமையவில்லை என்றால், இந்த பரிகாரத்தை செய்யும் போது, நிச்சயமாக அவர்கள் மனதிற்கு பிடித்தபடி திருமண வாழ்க்கையும் அமையும்.

- Advertisement -

பிள்ளைகளுடைய படிப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கிறது என்று சொன்னாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். ஏனென்றால் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்திற்கும் குரு, தட்சிணாமூர்த்தி தானே. ஆகவே இந்த பரிகாரத்தை எந்த நன்மைக்காக வேண்டியும் நீங்கள் செய்து கொள்ளலாம்.

சில பேருக்கு வாழ்க்கையில் குரு சாபம் இருக்கும். குரு திசை நடக்கும். குரு தோஷம் இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டும் என்றாலும், குரு பகவானை மேல் சொன்ன முறைப்படி வழிபாடு செய்யலாம். ஜாதகத்தில் இருக்கும் குரு தோஷம் நீங்கவும் இந்த பரிகாரம் உதவும்.

தொடர்ந்து 11 வியாழக்கிழமை இந்த திலகத்தை இந்த மந்திரத்தை சொல்லி நெற்றியில் வைத்து, பரிகாரத்தை செய்து முடித்து விட்டீர்கள். 11-வது வியாழக்கிழமை வீட்டு பக்கத்தில் இருக்கும் குரு பகவானுக்கு முல்லை பூக்கள் வாங்கிக் கொடுத்து, கொண்டை கடலை மாலை வாங்கி போட்டு, மஞ்சள் நிற வஸ்திரம் சாந்தி, மஞ்சள் நிற நெய்வேதியம், அதாவது எலுமிச்சை பழம் சாதம் நெய்வேதியம் செய்து வைத்து, உங்கள் பெயரை சொல்லி அர்ச்சனை செய்து கூட வழிபாட்டை நீங்கள் நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பிரச்சினைகளுக்கு 1 நிமிடத்தில் தீர்வு தரும் பரிகாரம்

ஒரு வேண்டுதலுக்காக 11 வாரம் குறிக்கோளாக வைத்து, இந்த பரிகாரத்தை செய்து பாருங்களேன். நிச்சயம் நீங்கள் நினைத்த நல்லது நடந்தே தீரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்