- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilஇயற்கையான பொலிவைத் தரும் பீட்ரூட்

இயற்கையான பொலிவைத் தரும் பீட்ரூட்

- Advertisement -

இன்றைய சுற்றுச்சூழலின் காரணமாக நாம் என்னதான் நம்முடைய சருமத்தை பராமரித்தாலும் சூரியனின் வெப்பத்தாலும், மாசுகளாலும் நம்முடைய சருமம் அனுதினமும் பாதிக்கப்படுகிறது. அதனால் நாம் நம்முடைய சருமத்தை அனுதினமும் பாதுகாத்து கொள்ள வேண்டும். அதற்கு இயற்கையான முறையை நாம் பயன்படுத்தினோம் என்றால் தான் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. ஒரே ஒரு பொடி இருந்தால் போதும் அந்த பொடியை குளியல் பொடியாகவும் பயன்படுத்தலாம் ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம். அந்த பொடியை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.

பொலிவைத் தரும் பீட்ரூட் பொடி

சூரிய வெப்பத்தின் காரணமாக நம்முடைய சருமத்தில் கருமை நிறம் என்பது ஏற்படும். சுற்றுச்சூழலின் காரணமாக முகப்பருக்களும், கரும்புள்ளிகளும் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உள்ளது. இவை அனைத்தையும் நீக்கி சருமத்தை இயற்கையான பொலிவுடன் மாற்றுவதற்கும் சரும நிறத்தை அதிகரிப்பதற்கும் நமக்கு இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பல பொருட்கள் இருக்கின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் பீட்ரூட் .பீட்ரூட்ரை வைத்து எந்த முறையில் குளியல் பொடி தயார் செய்யலாம் என்றுதான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இதற்கு நமக்கு ஒரு பீட்ரூட் வேண்டும். பீட்ரூட்டின் தோலை நீக்கிவிட்டு அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு கீற்று கற்றாழையை எடுத்து அதன் மஞ்சள் திரவம் போகும் வரை வைத்திருந்து சதைப்பகுதியை மட்டும் எடுத்து நன்றாக கழுவி இந்த பீட்ரூட்டோட சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பேஸ்டை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். தேவைப்படும் பட்சத்தில் தண்ணீர் சிறிதளவும் சேர்த்துக் கொள்ளலாம்.

இப்பொழுது இந்த பீட்ரூட் சாற்றை அடுப்பில் வைத்து எவ்வளவு வைத்தோமோ அதில் பாதி அளவு வற்றும் வரை குறைந்த தீயில் வைத்து நன்றாக கலந்து விடுங்கள். பாதி அளவு வற்றிய பிறகு அடுப்பை ஆப் செய்து விட வேண்டும். இப்பொழுது இந்த பீட்ரூட் சாற்றில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு பச்சரிசி மாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். ஈரப்பதம் மேலும் இருக்கிறது பொடியாக மாறவில்லை என்னும் பட்சத்தில் சிறிது சிறிதாக பச்சரிசி மாவை சேர்த்து நன்றாக கலந்து உதிர்த்து விட வேண்டும். இது பொடி பதத்திற்கு வந்த பிறகு இதை ஒரு பேப்பரிலோ அல்லது வெள்ளை துணியிலோ போட்டு நன்றாக நிழல் காய்ச்சலாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அவ்வளவுதான் பீட்ரூட் பொடி தயாராகிவிட்டது. இதை ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் இரண்டு மாதம் வரை கெட்டுப் போகாது. தினமும் காலையில் குளிக்கும் பொழுது சோப்பிற்கு பதிலாக நம்முடைய உடலுக்கு தேவையான அளவு பொடியை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு இதனுடன் தயிரை சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ளுங்கள். இதை உடல் முழுவதும் நன்றாக தேய்த்து ஒரு நிமிடத்தில் இருந்து இரண்டு நிமிடம் வரை வைத்திருந்து குளித்து விட வேண்டும்.

காலையில் இப்படி குளிப்பதற்கு நேரம் இல்லை என்பவர்கள் இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக இதே பொடியில் இருந்து ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து இதனுடன் கற்றாழை ஜெல் அல்லது காய்ச்சாத பசும்பால் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து முகத்திலும் கழுத்திலும் நன்றாக தடவி 20 நிமிடம் வைத்து விட்டு பிறகு கழிவு விட வேண்டும். இப்படி நாம் தினமும் தொடர்ச்சியாக செய்வதன் மூலம் ஐந்தே நாட்களில் நம்முடைய முகத்தில் நல்ல பொலிவை காண முடியும். மாசு மருக்கள் முற்றிலும் நீங்கி அழகான பொலிவான சருமத்தை பெறலாம்.

இதையும் படிக்கலாமே:இழந்த சரும பொலிவை திரும்பப் பெற

எளிதில் கிடைக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களை பயன்படுத்தி குளியல் பொடி ஒரு முறை தயார் செய்து வைத்துக் கொண்டால் போதும் நம்முடைய சருமம் இயற்கையாகவே பொலிவான அழகான சருமமாக மாறிவிடும்.

சற்று முன்