பொதுவாகவே சிறுவயதில் நம்முடைய தாய் நம்மை பார்த்துக் கொள்ளும் சமயத்தில் நம்முடைய சருமத்தின் நிறம் என்பது நன்றாகவே இருக்கும். காலப்போக்கில் நாம் நம்முடைய சருமத்தை பராமரிக்க ஆரம்பித்த பிறகு நம்முடைய சருமத்தின் நிறமானது படிப்படியாக குறைந்து நம்முடைய பொலிவை நாம் இழந்து விடுவோம். அப்படி இழந்த பொலிவை திரும்ப பெறுவதற்கும் சருமத்தின் நிறத்தை அதிகரிப்பதற்கும் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழியை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்கப் போகிறோம்.
சரும பொலிவை திரும்பப் பெற
குழந்தைகளாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் தங்களுடைய சருமத்தின் நிறம் என்பது அதிகரிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் தற்போது இருக்கக்கூடிய தட்பவெட்ப நிலை காரணமாகவும் சுற்றுச்சூழல் காரணமாகவும் அவர்களுடைய நிறத்தையும் பொலிவையும் இழக்க வேண்டிய சூழ்நிலை என்பது உண்டாகிவிட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து தப்பிப்பதற்கு உதவக்கூடிய சில இயற்கையான பொருட்கள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தி எப்படி இழந்த பொலிவான சருமத்தை திரும்ப பெறுவது என்பதை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ளப் போகிறோம்.
இன்றைய காலத்தில் தான் முகத்திற்கு என்று தனியாக க்ரீம்களும் உடம்பிற்கு என்று சோப்பு வகைகளும் இருக்கின்றன. இவை நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய நீர்ச்சத்தை உறுஞ்சி வறண்ட தன்மையை தரக்கூடியதாகவே திகழ்கிறது. மேலும் இதில் இருக்கக்கூடிய கெமிக்கல்கள் நம்முடைய சருமத்தை பாதிப்பிற்கு உள்ளாகிறது. இதை தவிர்த்து விட்டு நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை நம்முடைய சருமத்திற்கு பயன்படுத்தும் பொழுது அதனால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் நம்முடைய சருமம் என்றென்றும் பொலிவுடன் நிறமாகவும் இருக்கும்.
அந்த வகையில் நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களாக திகழ்வதுதான் பச்சைப் பயிறு மாவு மற்றும் கடலை மாவு. இரண்டு ஸ்பூன் அளவிற்கு பச்சைபயிறு மாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு கடலை மாவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதை நன்றாக கலந்து விட்டு இதில் தேவையான அளவு தேங்காய் பாலை ஊற்றி ஒரு பேஸ்ட் பதத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் நாம் குளிக்கச் செல்லும் பொழுது சோப்பை பயன்படுத்துவதற்காக பதிலாக இந்த பேஸ்டை பயன்படுத்தி உடல் முழுவதும் தேய்த்து குளிப்பதன் மூலம் நம்முடைய சருமத்தின் நிறமானது அதிகரிக்கும். எங்கெல்லாம் கருமை நிறம் அதிகரித்து இருக்கிறதோ அவையெல்லாம் மாறும். மேலும் சருமத்திற்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:ஆவாரம்பூ ஃபேஸ் பேக்
இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய பொருட்களை நம்முடைய சருமத்திற்கு பயன்படுத்தினால்தான் நம்முடைய சருமம் என்றும் பொலிவுடன் திகழும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வதோடு ரசாயனம் நிறைந்த பொருட்களை உபயோகப்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்போம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.