- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஏழையாவதற்கு 5 காரணங்கள்

ஏழையாவதற்கு 5 காரணங்கள்

- Advertisement -

பிறக்கும்போதே ஒரு மனிதன் வறுமையுடன் பிறப்பதற்கும், ஏழையாக வாழ்வதற்கும் பல காரணங்கள் உள்ளன. ஆன்மீக ரீதியாக, ஒரு மனிதன் ஏழையாவதற்கான காரணங்களைப் பல புராணங்களும், சித்தர்களின் உபதேசங்களும், வேதாந்தக் கோணமும் எவ்வாறு நமக்கு விளக்கி கூறுகிறது? என்னும் சுவாரசியம் நிறைந்த ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

1. கர்ம வினைகள் (Past Karma)
ஒருவரின் கடந்த ஜென்மங்களில் செய்த பாவகர்மங்கள் பின் தொடர்கின்றன. குறிப்பாக பிறர் சொத்தை தவறாக ஏமாற்றி வாங்குதல், நியாய தர்மம் இல்லாமல் பணம் சம்பாதித்தல், தரித்திரரை அதாவது ஏழைகளை கண்டு உதவாமல் அலட்சியப்படுத்துதல் போன்ற காரணங்களால் தற்போதைய ஜென்மத்தில் அவை வறுமையாக வெளிப்படும் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகிறது.

- Advertisement -

2. தானம் செய்யாமை (Lack of Charity)
தான் கொண்டதை பிறருடன் பகிராத பழக்கம், வறுமைக்கு வழிவகுக்கும் என்று திருமந்திரம் கூறுகிறது. “தந்தாரைப் போற்றி தருமத்தைக் காக்கின், பந்தங்கள் தீரும் பரம்பொருள் கைகூடும்” தானம் தரும் இயல்பில்லாத வாழ்க்கை, பொருளாதார நலனுக்கு தடையாகும். அடுத்தவர்களுக்கு கொடுக்கும் மனம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்களுக்கு விரைவிலேயே வறுமை துன்புறுத்தும்.

3. அகம்பாவம், ஆசை, அஹங்காரம் (Pride, desire, egotism)
அகம்பாவத்தால் ஆடுவதும், அதிகமாக ஆசை கொள்வதும், பிறரிடம் அகந்தை காட்டுவதும், பணத்தை பெருமை கூறுவதும் ஆன்மீக ரீதியில் தண்டனைக்குரியவையாகக் கருதப்படுகின்றன.
இவை சித்தர்களின் படி வறுமை என்னும் அனுபவங்களை நிச்சயம் உருவாக்கக்கூடும்.

- Advertisement -

4. புதிய கர்ம வினைகள் (Present Misdeeds)
இந்த ஜென்மத்தின் தற்போதைய வாழ்க்கையிலேயே, உழைப்பின்றி பணம் தேடுதல், சோம்பேறித் தனம், கள்ள வழியில் சம்பாதிக்க முயற்சி செய்வது போன்ற செயல்கள் ஒருவரின் வாழ்க்கையில் வறுமையை வரவழைக்கலாம்.

5. இறைவனின் சோதனை (Divine Test)
சிலருக்கு வறுமை ஒரு ஆன்மீக சோதனை. இது மனஅழுத்தத்திலிருந்து விடுபடுதல், இறைவனை அடைய உதவும் முன்னேற்றம் போன்ற நோக்கத்துடன் இறைவனால் ஏற்படலாம். அதாவது கடவுள் உங்களுக்கான முக்தியை தேடி தரும் வழியாகவும், சோதனையாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

ஏழையாக ஒரு மனிதன் பிறக்கலாம் ஆனால் ஏழையாக ஒரு மனிதன் சாவது அவனுடைய செயல்களில் தான் இருக்கிறது. தினமும் நம்மை விட வறியவர்களுக்கு, சிறு உதவிகளை செய்து வருவது, இறைவன் மீது நம்பிக்கையுடன் தர்மம் காக்கும் வாழ்க்கை வாழ்வதும், வறுமையிலிருந்து விடுபட உதவியாக இருக்கும். அடுத்தவர்களை கண்டு பொறாமை கொள்வது கூடாது. எவ்வளவு தடைகளும், சோதனைகளும் வந்தாலும் அதனை நாம் செய்த பாவங்களுக்கான தண்டனை என்று நினைத்துக் கொண்டு, எதிர்த்துப் போராடி தொடர்ந்து உழைப்பாலும், பக்தியாலும், விடாமுயற்சியோடு, தூய மனதோடு இருந்து வெற்றி பெற வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
மண்பாண்டத்தை பழக்கும் முறை

வெற்றியாளர்கள் பலரும் பிரம்ம முகூர்த்தத்தில் அதாவது சூரியன் உதயமாவதற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னரே எழும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. நீங்கள் வறுமையுடன் போராடிக் கொண்டிருந்தால், அதிகாலையிலேயே எழும் பழக்கத்தை உருவாக்குங்கள். பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் புத்தி சுத்தி பெறுகிறது. புதிய சிந்தனைகளும், தெளிவான கண்ணோட்டங்களும் உங்களுக்கான வெற்றிப்பாதையை எளிதாக காண்பிக்கும், இதனால் சீக்கிரமே நீங்கள் பணக்காரர்களாக மாறுவீர்கள்.

சற்று முன்