- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசொந்த வீட்டில் குடியேற

சொந்த வீட்டில் குடியேற

- Advertisement -

நாம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு லட்சியம் என்று ஒன்று இருக்கும். அந்த லட்சியத்தை அடைவதே நம்முடைய குறிக்கோளாக நாம் நினைத்து செயல்பட்டு வருவோம். அந்த வகையில் பலருக்கும் லட்சியமாகவும், கனவாகவும் திகழ்வதுதான் சொந்த வீட்டில் குடியேறுவது. சொந்த வீட்டில் குடியேறும் யோகம் என்பது அனைவருக்கும் அமைந்து விடாது, பலருக்கும் சொந்தமாக ஒரு இடம் கூட இல்லாமல் இருக்கும். இன்னும் சிலருக்கோ சொந்தமாக வீடு இருந்தும் அந்த வீட்டில் வாழ்வதற்குரிய யோகம் இல்லாமல் இருக்கும். கையில் பணம் இருந்தும் இடம் வாங்க முடியாமல் வீடு கட்ட முடியாத சூழ்நிலை கூட இருக்கும். கையில் இருக்கக்கூடிய பணத்தை வைத்து வீடு கட்ட ஆரம்பித்து ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் அது பாதியிலேயே தடைப்பட்டு நிற்கும். இப்படி பலருக்கும் பலவிதமாக சொந்த வீட்டில் குடியேறுவதில் பிரச்சனைகள் இருக்கும். இந்த பிரச்சனைகள் அனைத்தையும் நீக்கி விரைவிலேயே சொந்த வீட்டில் குடியேறுவதற்கு சனி மகா பிரதோஷ நாள் அன்று சிவபெருமானுக்கு வாங்கிப் பெற வேண்டிய பொருட்களை பற்றி தான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சொந்த வீட்டில் குடியேற

சிவபெருமானின் அருள் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவர்களுடைய கர்ம வினைகள் என்பது நீங்கும். கர்ம வினைகள் நீங்கிவிட்டாலே அவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். அந்த வகையில் சொந்த வீட்டில் குடியேறுவதில் இருக்கக்கூடிய தடைகள் நீங்குவதற்கும் நாம் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுவது தான் சனி மகா பிரதோஷம். சனி மஹா பிரதோஷ நாளன்று இந்த பொருட்களை நாம் சிவபெருமானுக்கு வாங்கி தருவதன் மூலம் 108 பிரதோஷங்கள் அபிஷேகத்திற்கு வாங்கி கொடுத்த பலன் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

பொதுவாகவே ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடைபெறும். அந்த அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களில் நம்மால் இயன்ற பொருட்களை நாம் வாங்கித் தரும் வழக்கத்தையும் வைத்திருப்போம். ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமான பலன் கிடைக்கும். சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பொருட்களை வைத்து தான் அவருக்கு அபிஷேகங்கள் செய்யப்படுகிறது என்பதால் நம்மால் இயன்ற ஏதாவது ஒரு சிறிய பொருளையாவது நாம் அன்றைய தினத்தில் வாங்கி தர வேண்டும் என்று கூறப்படுகிறது. அதிலும் நாம் வாங்கி தரக்கூடிய பொருட்கள் சுத்தமான பொருட்களாக இருக்க வேண்டும் என்பதுதான் மிகவும் குறிப்பிடத்தக்கது. பால் வாங்கித் தருவதாக இருந்தாலும் சுத்தமான பசும்பாலை தான் வாங்கித் தர வேண்டும். பாக்கெட் பாலை வாங்கித் தரக்கூடாது என்று கூறப்படுகிறது. பல ஆலயங்களில் பாக்கெட் பால் வாங்குவதை தவித்தே விடுவார்கள். அந்த வகையில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யக்கூடிய பொருட்கள் சுத்தமான பொருட்களாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து அப்படிப்பட்ட பொருட்களை வாங்கித் தந்தால்தான் அதற்குரிய பலனை நம்மால் பெற முடியும்.

சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் சிவபெருமானின் அபிஷேகத்திற்காக மூன்று பொருட்களை வாங்கி தர வேண்டும். இதில் முதலிடத்தை பிடிக்கக் கூடியது வில்வ பழம். வில்வ இலை என்பது சிவபெருமானுக்கு உகந்த இலை என்றும் சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு மிகவும் சிறப்பான ஒரு பொருளாக கருதப்படுகிறது என்றும் நம் அனைவருக்கும் தெரியும். அதே போல் தான் வில்வ பழமும். வில்வ பழம் என்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடிய ஒன்றாக திகழ்கிறது. வில்வப் பழத்தை நாம் சிவபெருமானின் அபிஷேகத்திற்காக வாங்கி தருவதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலால் நமக்கு ஏற்பட்ட தடைகள் அனைத்தும் விலகும். சொந்த வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

- Advertisement -

அடுத்ததாக நாம் வாங்கித் தர வேண்டிய பொருள்தான் பன்னீர் திராட்சை. பொதுவாக கர்ம வினைகள் தீர வேண்டும் என்று நினைப்பவர்கள் காக்கைக்கு உலர் திராட்சையை தர வேண்டும் என்று கூறி கேள்விப்பட்டு இருக்கிறோம். அந்த வகையில் நம்முடைய கர்ம வினைகளை நீக்குவதற்கு சனி மகா பிரதோஷ நாளன்று சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காக நாம் பன்னீர் திராட்சை வாங்கித் தர வேண்டும். அப்படி வாங்கித் தருவதன் மூலம் கர்ம வினைகளால் சொந்த வீட்டில் குடியேறுவதற்குரிய தடைகள் ஏதேனும் இருப்பின் அது நீங்கிவிடும்.

கடைசியாக நாம் வாங்கித் தர வேண்டிய பொருள்தான் நார்த்தங்காயின் பழம். இதையும் நாம் சனி மகா பிரதோஷ நாளன்று சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காக வாங்கி தருவதன் மூலம் அதன் சாரை எடுத்து அபிஷேகம் செய்வார்கள். அப்படி செய்வதன் மூலம் சொந்த வீட்டில் குடியேறுவதற்குரிய யோகம் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:செய்வினை அறிய பரிகாரம்

இந்த மூன்று பொருட்களில் எது நமக்கு கிடைக்கிறதோ எதை நம்மால் வாங்கித் தர முடியுமோ அதை முழுமனதோடு சனிமகா பிரதோஷ நாளன்று பிரதோஷ நேரத்தில் சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காக வாங்கி தருவதன் மூலம் விரைவிலேயே சொந்த வீட்டில் குடியிருப்பதற்குரிய யோகம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்