பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்றவை ஒரு நிழல் வழிபாடு முறையாகும். இவை பொதுவாக தமிழ்க் கிராமிய மரபிலும், ஜோதிடமும், மகாசக்தி வழிபாடுகளிலும் குறிப்பிடப்படும். செய்வினை என்பது ஒருவருக்கு எதிராக அதிர்ஷ்டம், உடல், மன நலத்தை பாதிப்பதற்காக மறைமுறையாகச் செய்யப்படும் ஒரு விஷயமாக நம்பப்படுகிறது. அறிவியல் பூர்வமாக இவை நிரூபிக்கப்படாவிட்டாலும், மனதளவில் பயத்தை உண்டாக்கி, பலரின் நம்பிக்கையை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.
நமக்கு ஏதாவது ஒரு விசித்திரமான எதிர்மறை விஷயங்கள் நடந்தால், உடனே நமக்கு யாரும் செய்வினை வைத்து விட்டார்கள் என்று தான் நினைத்துக் கொள்கிறோம். எதிர்வினைகளை உருவாக்கக்கூடிய இது போன்ற செய்வினைகளை எளிமையாக கண்டுபிடிப்பதற்கு ஒரு வழிமுறை உள்ளது. இந்த கீரையை பயன்படுத்தி எப்படி செய்வினை கோளாறுகளை கண்டுபிடிப்பது? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவலைத் தான் இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.
செய்வினை, ஏவல், பில்லி போன்ற விஷயங்கள் உண்மையில் இருக்கிறதா? இல்லையா? என்பதை காட்டிலும், ஒருவர் மனதார வன்மத்துடன் பொறாமை குணத்தை கொண்டு இவர்கள் நன்றாகவே இருக்க கூடாது என்று நினைத்து விட்டால், அது திருஷ்டியாக மாற்றம் பெறுகிறது. அவர்களின் அந்த தீயை எண்ணங்களின் அதிர்வலைகளால், நமக்கு வர வேண்டிய அதிர்ஷ்டங்கள் தடைபடுகிறது.
இது போன்ற கெட்ட அதிர்வலைகளை, நம்மிடமிருந்து விரட்டி அடிப்பதற்கும், கண்டு பிடிப்பதற்கும் கொஞ்சம் முருங்கைக் கீரையை எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அதன் சாறை பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த முருங்கை இலை சாற்றினை காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல், வெறும் வயிற்றில் இருந்து கொண்டு வலது உள்ளங்கையில் விட வேண்டும். தெற்கு திசையை நோக்கி நின்று கொண்டு இதை செய்ய வேண்டும்.
இந்த சாறை ஒரு அரை மணி நேரம் அப்படியே கையில் வைத்திருக்க வேண்டும். உங்களை சுற்றிலும் கெட்ட அதிர்வலைகள் இருந்தால், கையில் வைத்திருக்கக்கூடிய முருங்கை இலை சாறு திரிந்து போய்விடும். இதை வைத்து உங்களுக்கு செய்வினை கோளாறுகள் இருப்பதாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து மந்திர ஜெபங்கள், இஷ்ட தெய்வ வழிபாடு, குலதெய்வ வழிபாடு போன்றவற்றை செய்து வர இதிலிருந்து எளிமையாக விடுபடலாம். இந்த பிரபஞ்சத்தில் நல்லது என்று ஒன்று இருந்தால், கெட்டது என்று ஒன்றும் இருக்கும். எல்லா விஷயத்திற்கும், எதிர்மறையான விஷயங்களும் இருக்கத்தான் செய்கிறது.
இதையும் படிக்கலாமே:
நாளை 24-05-2025 சனி மஹாபிரதோஷம் மந்திரம்
உண்மையான பக்தியுடன், தொடர் வழிபாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் வருவதில்லை. மனதில் ஏற்பட்டிருக்கும் இந்த பயத்தை நீக்க, கோவிலில் கொடுக்கும் எலுமிச்சை பழத்தை வாங்கி வந்து நீங்கள் தூங்க செல்லும் முன்பு, உள்ளங்கையில் வைத்துக் கொண்டு “ஓம் ஸ்ரீ கால பைரவாய நமஹ” என்னும் இந்த மந்திரத்தை தொடர்ந்து 21 முறை ஜெபித்து விட்டு, எலுமிச்சை பழத்தை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு தூங்குங்கள். இதனால் மனதில் இருக்கக்கூடிய தீய எண்ணங்கள் விலகி, புது தெம்பு, தன்னம்பிக்கை கிடைக்கும். தெருவில் இருக்கும் நாய்களுக்கு இரவில் சப்பாத்தி, பிஸ்கட், உணவு போன்றவற்றை தானம் செய்யுங்கள். தொடர்ந்து இப்படி செய்வதால், எப்பேர்ப்பட்ட கெட்ட சக்திகளும், உங்களை விட்டு விலகி ஓடிவிடும்.