இன்று 26-5-2025 அமாவாசை திதி இருக்கிறது. கூடவே கிருத்திகை நட்சத்திரம் சேர்ந்து வந்திருக்கிறது. இந்த நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடு, நம்முடைய வாழ்நாள் முழுவதும் நம்மை பாதுகாக்கும் என்று சொன்னால், நீங்கள் நம்புவீர்களா. அதுதான் உண்மை. இன்று இரவு 9 மணியிலிருந்து 10 மணிக்குள் இடைப்பட்ட இந்த ஒரு மணி நேரத்தில் பின் சொல்லக்கூடிய இந்த இரண்டு வரி மந்திரத்தை யார் ஒருவர் சொல்கிறீர்களோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அந்த காளி தேவியின் ஆசீர்வாதமும், முருகப்பெருமானின் ஆசீர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும்.
அப்படி அமாவாசையான இன்று இரவு 9 டு 10குள் என்ன அற்புத சக்தி மறைந்துள்ளது. அந்த நேரம் சனி ஹோரை. சனி பகவானுக்கு அதி தேவதையாக இருப்பவள் காளி. ஆகவே, இந்த நேரத்தை நாம் சரியாக பயன்படுத்தினால், இந்த வருடம் முழுவதும் நமக்கு எதிரி தொல்லை இருக்காது. ஏவல் பில்லி சூனியத்தால் பிரச்சனை வராது. கண் திருஷ்டியால் பாதிப்புகள் வராது.
நாம் ஒரு பாதுகாப்பு கவசத்திற்குள் வந்து விடுவோம். காளி என்றதுமே பயப்படக்கூடாது. காளி அவதாரம் என்பது அசுரனை அழிப்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரம். காளி தேவியும் நமக்கு நன்மை செய்யக்கூடிய தெய்வம் தான். மங்களத்தை கொடுக்கக் கூடிய தெய்வம், காளி தேவி என்று சொல்லுவார்கள். சரி இன்று இரவு 9 டு 10 செய்ய வேண்டிய அந்த வழிபாடு என்ன சொல்ல வேண்டிய மந்திரம் என்ன. பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா?
இந்த குறிப்பிட்ட 1 மணி நேரத்தில் நீங்கள் பூஜை அறையில் உட்கார வேண்டும். விளக்கு ஏற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்கள் வீட்டில் எந்த இடம் அமைதியாக இருக்குமோ, அந்த இடத்தில் மேற்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய கண்கள் மேற்கு திசையை பார்க்க வேண்டும். அவ்வளவு தான். மனம் உருகி முன்னோர்களை வணங்கி, முன்னோர்களது ஆசீர்வாதத்தையும், குல தெய்வத்தின் ஆசிர்வாதத்தையும் பெற்றுக் கொண்டு.
“ஓம் மஹா காளி போற்றி போற்றி” என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். காளியின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்து விடும். உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியும் சரி, உடம்பில் இருக்கும் கெட்ட சக்தியும் சரி, வெளியே ஓடிவிடும். பிறகு உங்களுக்கு துணையாக முருகரை கூப்பிடுங்கள். முருகருக்கு ஒரு வணக்கம் சொல்லிவிடுங்கள்.
இதையும் படிக்கலாமே: அமாவாசை கிருத்திகை முருகர் வழிபாடு
“மேலும் மயிலும் துணை” என்று 27 முறை சொல்லிவிட்டு, பிறகு நிம்மதியாக தூங்க செல்லுங்கள். உங்களை பிடித்த பிரச்சனை எல்லாம், இந்த அமாவாசை இரவோடு சரியாகிவிடும். இது ஒரு அதி அற்புதம் வாய்ந்த சூட்சமமான வழிபாடு. சுருக்கமாக உங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டு மந்திரத்தையும் அமாவாசை கிருத்திகை சேரும் இரவு 9 டு 10 இந்த குறிப்பிட்ட சனி ஓரையில், ஒரு மணி நேரத்தில் சொல்ல தவறவே விடாதிங்க. எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.