- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅமாவாசை கிருத்திகை முருகர் வழிபாடு

அமாவாசை கிருத்திகை முருகர் வழிபாடு

- Advertisement -

நாளைய தினம் அமாவாசை திதி இருக்கிறது. கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வந்திருக்கிறது. இது ஒரு அபூர்வமான சேர்க்கை. இந்த நாளில் கிருத்திகைக்கு சாப்பிடாமல் விரதம் இருப்பவர்களாக நீங்கள் இருந்தால், உங்களுக்கு ஒரு ஆன்மீகம் சார்ந்த தகவல். நாளைய தினம் முன்னோர்கள் வழிபாட்டை செய்து முடித்துவிட்டு, முன்னோர்களுக்கு சமைத்த சாப்பாட்டை சாப்பிடாமல் இருக்கக் கூடாது.

நாளை ஒரு நாள் நீங்கள் முன்னோர்களது வழிபாட்டை முடித்துவிட்டு மதிய உணவு எடுத்துக் கொண்டு, கிருத்திகைக்கு முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளலாம். எந்த ஒரு தவறும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆன்மீகம் சார்ந்த தகவலோடு இன்றைய பதிவிற்குள் பயணம் செய்வோம்.

- Advertisement -

அதிசக்தி வாய்ந்த இந்த அமாவாசை நாளில் குலதெய்வத்தின் ஆசிர்வாதமும், முன்னோர்களின் ஆசிர்வாதமும் நமக்கு பரிபூரணமாக இருக்கும். இந்த நாளில் அந்த முருகப்பெருமானின் ஆசிர்வாதத்தையும் சேர்த்து நாம் வாங்க வேண்டாமா. நாளை மாலை 6 மணிக்கு மேலாக, தினை மாவால் மாவிளக்கு செய்து, அதில் நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி, அந்த விளக்கத்திற்கு முன்பாக அமர்ந்து இந்த மந்திரத்தை 108 முறை சொல்லிவிட்டால் போதும். வாழ்க்கையில் நீங்கள் ஜெயித்துக் கொண்டே செல்லலாம்.

கிருத்திகை மந்திரம்

ஓம் சரவணபவ இம் வம் ஆ

- Advertisement -

எளிமையான சக்தி வாய்ந்த ஒரு வரி மந்திரம் இது. உங்களால் வீட்டில் இந்த விளக்கை ஏற்ற முடியவில்லை என்றாலும், வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று, இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு முருகன் கோவிலில் அமர்ந்து, இந்த மந்திரத்தை சொல்லலாம். அதிசக்தி வாய்ந்த பலன் உங்களை வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: ஞாயிற்றுக்கிழமை ராகுகால நேரம் பைரவர் வழிபாடு

தீராத கடன் சுமை, தீராத பண கஷ்டம் தீராத உடல் உபாதைகள், குழந்தைகளுடைய படிப்பில் பிரச்சனை, கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இல்லை, குழந்தை பாக்கியம் வேண்டும் என்று உங்களுடைய வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது கூடிய விரைவில் பலிக்கும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த எளிமையான ஆன்மீகம் சார்ந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்ற தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்