- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவசம்பு தீபம் ஏற்றும் முறை

வசம்பு தீபம் ஏற்றும் முறை

- Advertisement -

நம் பாரம்பரியத்தில் வசம்புக்கு தனித்துவமான மகத்துவங்கள் உண்டு. நாட்டு மருந்து கடைகளில் பெயரை சொல்லி கூட வாங்க மாட்டார்கள். பெயர் சொல்லாத மருந்து என்று சொல்லப்படும் வசம்பு, தெய்வீக சக்தி கொண்டுள்ள அற்புத மூலிகை ஆகும். இதனைக் கொண்டு தீபம் ஏற்றுவதால், தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. வசம்பு தீபம் ஏற்றும் முறை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இப்பதிவில் பகிர்ந்து கொள்ள போகிறோம்.

வசம்பு என்னும் மூலிகையுடன் நெய் சேர்த்து தயாரிக்கப்படும் மை, ரொம்பவும் புனிதத்துவம் வாய்ந்தது. பச்சிளம் குழந்தைகளுக்கு உச்சந்தலையில் தடவி விட, திடீர் திடீரென பயந்து அழுவதை நிறுத்தும் என்று நம் மூதாதையர்கள் கூறுவார்கள். சுத்தமான வசம்பினை பசுநெய் ஊற்றிய அகல் விளக்கில் காண்பித்து, சுட்டு எரிக்க வேண்டும். எரித்து கிடைக்கக்கூடிய கரியை நெய்யுடன் சேர்த்து கலந்து மை தயாரித்து வைக்க வேண்டும்.

- Advertisement -

தெய்வீக சக்தி பொருந்திய இந்த வசம்பு மை, ஆன்மீக ரீதியாக பல நன்மைகளை நமக்கு அள்ளித் தரக்கூடியது. தினமும் இதை நெற்றியில் இட்டுக் கொள்வதால், சரீரம் சுத்தி பெறும், முக வசியம் ஏற்படும் என்பது ஐதீகம். வேலைக்கு கிளம்பும் பொழுது, தினமும் இந்த மையை வைத்துக் கொண்டு கிளம்பினால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அன்றைய நாள் முழுவதும் வெற்றி உங்களுக்கானதாக அமையும்.

நல்ல காரியத்திற்காக புறப்படும் பொழுது வசம்பு மையை வைத்துக் கொண்டு செல்லலாம். பச்சிளம் குழந்தைகள் வயிற்று வலியால் அழும் பொழுது, இந்த மையை சிறிதளவு தொப்புள், உள்ளங்கை, உள்ளங்கால், உச்சந்தலை ஆகிய இடங்களில் வைக்க நிவாரணம் பெறும். கடுகளவு நாவிலும் வைத்துவிட குழந்தைக்கு நல்லது. வசிய தன்மை கொண்ட இந்த வசம்பு எப்பொழுதும் வீட்டில் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வசம்பு மையை பணம் வைக்கும் இடம், நகை வைக்கும் இடம், சொத்து பத்திரங்கள் வைக்கும் இடங்களில் சிறிதளவு தடவி வைக்க மென்மேலும் அது பெருகி சேரும் என்பது நம்பிக்கை. இவ்வளவு அற்புத பலன்கள் கொடுக்கக்கூடிய இந்த வசம்பை கொண்டு தீபம் ஏற்றுவதால் நலிவடைந்த தொழிலும், நல்ல முன்னேற்றம் காணும். வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வசம்பு தீபம் ஏற்றுவது நன்மை தரும். மாலை 6 மணிக்கு மேல் வசம்பை மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடாது.

பூஜை அறையில் சுத்தமான விளக்கில், பசுவின் நெய்யை விட்டு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அதில் வசம்புத்தூள் போட்டு வைக்கலாம். வசம்பு கட்டிகளை வெயிலில் நன்கு காயவைத்து பவுடர் போல இடித்து வைத்துக் கொள்ளலாம். இந்த பவுடரை விளக்கு ஏற்றும் பொழுது சிறிதளவு போட்டு ஏற்றினால், குடும்பத்திற்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். தீய சக்திகள் அணுகாது, குலதெய்வ வசியம் உண்டாகும். விளக்கு ஏற்றி வைத்து வசம்பு துண்டை திரியுடன் சேர்த்து வைத்து தீபத்தில் எரிய விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
சொந்த வீடு கட்ட சுக்கிர வழிபாடு

இந்த வசம்பு தீபம் தொடர்ந்து ஒவ்வொரு வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையில் பூஜை அறையில் ஏற்றி வர, நலிவடைந்த தொழில் நல்ல முன்னேற்றம் காணும். புதிய தொழில் துவங்குபவர்களும், இந்த தீபத்தை ஏற்றினால், சிறப்பாக முன்னேற்றம் அடையலாம். வியாபார விருத்தி உண்டாகவும், உத்தியோகங்களில் பதவி உயர்வு பெறவும், வாரந்தோறும் இந்த வசம்பு தீபத்தை வீட்டில் ஏற்றி வைக்கலாம். தொழில் செய்யும் இடங்களிலும், மகாலட்சுமி படத்தை வைத்து இந்த தீபத்தை ஏற்றி வைத்தால், தொழில் அமோகமாக நடைபெறும்.

சற்று முன்