- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசெல்வ செழிப்பை ஏற்படுத்தும் வைகாசி மூன்றாம் பிறை

செல்வ செழிப்பை ஏற்படுத்தும் வைகாசி மூன்றாம் பிறை

- Advertisement -

ஒருவருடைய வறுமை நிலை மாற வேண்டும் என்றால் அவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் என்பது வேண்டும். அப்படி மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு அவருடைய சகோதரரான சந்திர பகவானை நாம் வழிபாடு செய்யலாம். மேலும் அப்படி சந்திர பகவானை வழிபாடு செய்வதற்கு உரிய ஒரு அற்புதமான நாளாக தான் மூன்றாம் பிறை தரிசனம் திகழ்கிறது. மூன்றாம் பிறை நாளன்று நாம் செய்யக்கூடிய வழிபாடுகள் நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளை ஏற்படுத்தும். அந்த வகையில் வைகாசி மாதம் வரக்கூடிய மூன்றாம் பிறை நாளன்று செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வைகாசி மாதத்தில் வரக்கூடிய மூன்றாம் பிறை என்பது மே மாதம் 28ஆம் தேதி புதன்கிழமை ஆன இன்று வருகிறது. பொதுவாகவே பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவார்கள். புதன்கிழமை அன்று பெருமாளை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த நாளில் மூன்றாம் பிறை தரிசனமும் வருவது கூடுதல் பலனை தரும். இந்த பலனை முழுமையாக பெறுவதற்கு நாம் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த வழிமுறைகளை முறையாக பின்பற்றுபவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக் கூடிய எப்பேர்பட்ட வறுமையும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ முடியும்.

- Advertisement -

புதன்கிழமை அன்று மாலை 6:30 மணிக்கு மேல் வானத்தில் மூன்றாம் பிறையை நம்மால் தரிசனம் செய்ய முடியும். ஆறு மணிக்கே வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். மூன்றாம் பிறை தரிசனத்தை பார்க்கச் செல்லும் பொழுது கையில் ஐந்து ரூபாய் நாணயத்தையும் சிறிது பச்சரிசியையும் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். இவை இரண்டையும் ஒன்றாக கையில் வைத்துக்கொண்டு சந்திர பகவானை பார்த்து “ஓம் வம் சந்திர பகவானே நமஹ” என்னும் மந்திரத்தை குறைந்தபட்சம் ஐந்து முறையாவது கூற வேண்டும். அதிகபட்சம் 27 முறை கூட கூறலாம். இப்படி கூறி முடித்த பிறகு கையில் இருக்கக்கூடிய பச்சரிசியையும் நாணயத்தையும் பார்த்து செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு நேராக வீட்டிற்கு வந்து ஒரு பச்சை நிற துணியில் கையில் வைத்திருக்கக் கூடிய பச்சரிசியையும் ஐந்து ரூபாய் நாணயத்தையும் எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். மிகவும் அற்புதமான இந்த எளிமையான வழிபாடு சந்திர பகவானின் அருளை பரிபூரணமாக பெறச் செய்யும். உடலாலும் மனதாலும் உற்சாகத்துடன் செயல்பட்டு பலவிதமான செல்வங்களை பெறலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:அக்னி நட்சத்திர நிறைவு நாள் வழிபாடு

புதன்கிழமையோடு சேர்ந்து வரும் சக்தி வாய்ந்த வைகாசி மாதத்தின் மூன்றாம் பிறையினால் அன்று சந்திர பகவானை இந்த முறையில் வழிபாடு செய்ய அவரின் பரிபூரணமான அருள் கிடைக்கும் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்