- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅக்னி நட்சத்திர நிறைவு நாள் வழிபாடு

அக்னி நட்சத்திர நிறைவு நாள் வழிபாடு

- Advertisement -

சூரிய பகவானின் சுட்டெரிக்கும் அனல் அதிகரிக்க கூடிய நாட்களாக திகழ்வதுதான் அக்னி நட்சத்திர நாட்கள். இந்த அக்னி நட்சத்திரம் என்பது ஒவ்வொரு மாதமும் மே மாதத்தில் தமிழில் சித்திரை மாதத்தில் வரும். அந்த வகையில் இந்த வருடம் அக்னி நட்சத்திரம் என்பது மே மாதம் நான்காம் தேதி தொடங்கியது. இந்த அக்னி நட்சத்திரம் என்பது மே மாதம் 28ஆம் தேதி புதன்கிழமை அன்று நிறைவடைகிறது. எப்படி அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் பொழுது சூரிய பகவானை வழிபாடு செய்கிறோமோ அதே போல் அக்னி நட்சத்திரம் நிறைவடையும் பொழுதும் சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும். அந்த வழிபாட்டோடு சேர்த்து இந்த அக்னி நட்சத்திர தோஷம் நம்மை பாதிக்காமல் இருப்பதற்கு ஒரு பரிகாரத்தையும் செய்ய வேண்டும். அதைப்பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நவகிரகங்களின் தலைவராக திகழக்கூடியவர் சூரியபகவான் என்று நம் அனைவருக்கும் தெரியும். சூரிய பகவானை அனுதினமும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். சூரிய பகவான் இல்லை என்றால் இந்த உலகத்தில் எந்த ஒரு உயிரினமும் இருக்காது. மேலும் நமக்கு கிடைக்கக்கூடிய மிக முக்கியமான பொக்கிஷமாக இருக்கக்கூடிய நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கும் வேலை வாய்ப்பிற்கும் சூரிய பகவானின் அதிபதியாக திகழ்கிறார். அறிவியல் ரீதியாகவும், மருத்துவர் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பலவிதமான அற்புதமான பலன்களை தரக்கூடியவராக திகழும். சூரிய பகவானை அக்னி நட்சத்திரம் நிறைவடையும்போது ஒரு சில வழிமுறைகளை பின்பற்றி வழிபாடு செய்யும் பொழுது அவரின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை மே மாதம் 28ஆம் தேதி புதன்கிழமை அன்று சூரிய உதயம் ஆன பிறகு செய்ய வேண்டும். சூரியன் அஸ்தமனம் ஆவதற்கு முன்பாக செய்து முடித்து விட வேண்டும். ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாம் இந்த வழிபாட்டை செய்யலாம். வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய சுவாமி படங்களுக்கு புதிதாக பூக்களை சூட்டிக் கொள்ளுங்கள். பிறகு எப்பொழுதும் ஏற்றக்கூடிய தீபங்களை ஏற்று முடித்துவிட்டு தனியாக ஒரு தட்டில் ஐந்து அகல் விளக்குகளை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.

இந்த ஐந்து தீபங்களும் பஞ்சபூதங்களுக்காக ஏற்றக்கூடியது. அடுத்ததாக இந்த தீபங்களுக்கு முன்பாக சூரிய பகவானுக்குரிய தானியமான கோதுமையை பயன்படுத்தி ஏதாவது ஒரு பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இதோடு ஒரு சொம்பில் எச்சில் படாத குடிக்கின்ற தண்ணீரை பிடித்து வைத்து அந்த தண்ணீரில் வெள்ளெறுக்கு இலை, வேப்பிலை, வெற்றிலை இவை மூன்றில் ஏதாவது ஒரு இலையை போட்டு வைத்து விட வேண்டும். பிறகு அந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து சூரிய பகவானின் மந்திரமான “ஓம் நமோ ஆதித்ய பகவானே போற்றி ஓம்” என்னும் நாமத்தை 108 முறை கூறி சூரிய பகவானை வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நிறைவு செய்யும் வகையில் கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும். தூபம் காட்டும் பொழுது வீடு முழுவதும் மற்றும் நிலைவாசலுக்கு காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வழிபாட்டை நிறைவு செய்த பிறகு நெய்வேத்தியத்தை வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் பிரசாதமாக உண்ண வேண்டும். சொம்பில் வைத்திருந்த தண்ணீர் அன்று முழுவதும் அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். அக்னி நட்சத்திரம் நிறைவடைந்த மறுநாள் அதாவது மே மாதம் 29ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய அந்த சொம்பில் இருக்கும் தீர்த்தத்தை எடுத்து வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும். இப்படி தெளிப்பதன் மூலம் அக்னி நட்சத்திரத்தால் ஏற்பட்ட தோஷம் நீங்கும். மீதம் தண்ணீர் இருக்கும் பட்சத்தில் அதை செடிகளில் ஊற்றி விடலாம்.

இதையும் படிக்கலாமே:தரித்திரத்தை விரட்டி அடிக்கும் அமாவாசை பூஜை

சூரிய பகவானின் அருள் ஒருவருக்கு பரிபூரணமாக கிடைத்தால் தான் அவரால் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும். அப்படிப்பட்ட சூரிய பகவானால் ஏற்பட்ட அக்னி நட்சத்திர தோஷம் நீங்குவதற்கு இந்த எளிமையான வழிபாட்டு முறையை முழுமனதோடு செய்து முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்